உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர். அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் உலகை கொண்டு வர வேண்டும் என விரும்பிய ஹிட்லர் யூத இனத்தை சேர்ந்தவராக இருக்கலாமென ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, லட்சக்கணக்கான யூதர்களை கொடூரமாக சித்ரவதை செய்து, கொன்று குவித்தவர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர்.
ஜெர்மானியர்கள் தான் உயர்ந்தவர்கள் என கூறிக் கொண்டு, யூத இனத்தையே அழிக்க நினைத்தார் ஹிட்லர். ஆனால், அவரே யூத இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தற்போது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புலனாய்வு பத்திரிகையாளரான ஜேன் பால் முல்டர் என்பவர் இது குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
நியூயார்க்கில் வசித்து வரும் ஹிட்லரின் உறவினர்கள் அலெக்சாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த நார்பர்ட் உள்ளிட்ட உறவினர்கள் 39 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், வட ஆப்பிக்காவில் உள்ள யூதர்களின் மரபணுவுடன், ஹிட்லர் உறவினர்களின் மரபணு ஒத்துப் போனது.
இதன் மூலம், ஹிட்லரின் 20 தலைமுறைக்கு முந்தைய மூதாதையர்கள் யூத இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
ஹிட்லரின் உறவினர்களின் மரபணு மாதிரிகளில், அப்லாப்குரூப் இ1பி1பி' என்ற "ஒய்' குரோமோசோம் இருந்தது.
பொதுவாக, இந்த குரோமோசோம் ஜெர்மானியர்களிடம் இருக்காது. இவை யூதர், அஸ்கென்சி இனத்தினர் மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசியா ஆகிய
நாடுகளை சேர்ந்த வடக்கு ஆப்பிரிக்காவின் "பெர்பர்ஸ்' இனங்களில் இந்த குரோமோசோம் இருக்கும். எனவே, ஹிட்லரும் யூத இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஹிட்லரால் காப்பாற்றப்பட்ட யூதர்:
ஹிட்லரின் நாசிப்படைகள் கோடி கோடியாக யூதர்களை கொன்று குவித்தாலும், ஹிட்லராலும் ஒரு யூதர் காப்பாற்றப் பட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?
சமீபத்தில் வெளியான ஜேர்மன் யூதப் பத்திரிகை ஒன்றில் பின்வரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலாம் உலக மகா யுத்தத்தின் போது ஏர்னஸ்ட் ஹெஸ் எனும் யூத நீதிபதி, ஹிட்லர் குழுவினருக்காக பணியாற்றினார்.
இதற்கு நன்றிக்கடனாக ஹிட்லரால் எழுதப்பட்ட விசேட கடிதம் ஒன்றினால், நாசிப் படைகளின் கொலை வெறியிலிருந்து குறித்த நீதிபதி காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஹிட்லர் எழுதிய அந்த கடிதத்தைக் கண்டு பிடித்த வரலாற்று அறிஞரான சுசன்னே மவுஸ் என்பவர் இந்த தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளார்.
வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?
மேலும் இக் கடிதம் ஹிட்லரின் கையொப்பத்துடன், அரச கட்டமைப்பில் இருக்கும் கட்டளைத் தளபதியின் கையெழுத்தும் இடப்பட்டு நாசிப்படைகளுக்கு பிரதி அனுப்பப்பட்டுள்ளது.
இதில் ஆகஸ்ட் 19, 1940 ஆம் ஆண்டு என்ற காலமும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்த நேரத்தில் நாசிகளின் கையில் கிடைத்ததால் அந்த யூத நீதிபதி, ஏர்னஸ்ட் ஹெஸ், நாசிகளின் கொடும் கொலை வெறியிலிருந்து காப்பாற்றப் பட்டார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thanks for Your Comments