கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol.
அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை.
பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?
சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது.
கல்லீரல் தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்: கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது. எது நல்ல கொலஸ்ட்ரால்?
LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பொரி சாட் மசாலா தயார் செய்வது எப்படி?
இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.
தேவையான அளவில் உள்ள கொலஸ்ட்ரால் எவ்வளவுக் கெவ்வளவு உடலுக்கு இன்றியமையாததாக உள்ளதோ
அதே போல அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது.
உணவு வகைகள் | கொலெஸ்ட்ரோல் (mg /100gm) |
மூளை | 2000 |
முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) | 550 |
சிறுநீரகம் (Kidney) | 375 |
கல்லீரல் (Liver) | 300 |
வெண்ணெய் | 250 |
சிப்பி மீன் (Oyster) | 200 |
லோப்ஸ்டெர் | 200 |
இறால் (Shrimp) | 170 |
இருதயம் | 150 |
மாட்டு இறைச்சி | 75 |
இளம் ஆட்டிறைச்சி (Lamb) | 70 |
ஆட்டிறைச்சி (Mutton) | 65 |
கோழியிறைச்சி | 62 |
பாலாடைக் கட்டி (chedder cheese) | 100 |
குழைவான பாலாடைக்கட்டி (cheese Spread) | 70 |
பனீர் (cottage cheese) | 15 |
Margarine (2/3 விலங்கினக் கொழுப்பு, 1/3 தாவர கொழுப்பு) | 65 |
மயோனஸ் (1 மேசைக் கரண்டி) | 10 |
ஐஸ் கிரீம் | 45 |
நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை) | 34 |
நிறைக் கொழுப்புப் பால்பொடி (1 குவளை) | 85 |
கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை) | 5 |
பிரெட் | 1 |
ஸ்போஞ்ச் கேக் | 130 |
சாக்லேட் பால் | 90 |
Thanks for Your Comments