பொதுவா சூரிய கிரகணம் ஏன் நடக்குதுன்னு ஒரு கேள்வி இருக்கு. கிரகணங்கள் பற்றி நிறைய நம்பிக்கைகள், புராண கதைகள் இருந்தாலும், அறிவியல் ரீதியாக பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது.
இது தான் கிரகணம். சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.
ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்த.. ஸ்டீவ் ஜாப்ஸ் !
தன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் நிலா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது சூரிய ஒளி மறைக்கப்படுகிறது.
அப்போது நிலாவின் நிழல் பூமியின் மீது விழும் பகுதிகளில் இருள் சூழ்கிறது. இதுவே சூரிய கிரகணம் (Solar Eclipse) என அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் ஏன் வருது தெரியுமா?
பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது.
இது தான் கிரகணம். சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும்.
காய்கறி வித் இறால் சூப் செய்வது எப்படி?
சூரியன் ரொம்ப பெரியது நிலா எப்படி மறைக்க முடியும் என்று கேட்கலாம். நம்முடைய பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும்.
கிரகண நேரத்தில் ஏன் இதை கண்டிப்பாக செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா கிரகண நேரத்தில் ஏன் இதை கண்டிப்பாக செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா
முழு சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தின் முதல் வகை முழு சூரிய கிரகணம். இந்த நிகழ்வு நடக்கும் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் ஒரே நேர் கோட்டில் இருக்கும்.
சூரியனை விட சந்திரன் மிக மிக சிறிய அளவுடையது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்து விடுகிறது.
இதனால் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை மற்றும் சூரிய ஒளி பூமியை அடையாமல் முழு இருட்டாக இருக்கும். இரவு போல காட்சி அளிக்கும்.
தண்ணீர் அதிகமா குடித்தால் உடலில் பாதிக்கப்படும் பாகங்கள் தெரியுமா?
பகலில் சூரிய வெளிச்சம் தெரியாமல் போனால் மனிதர்களுக்கு குழப்பம் வராது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு இடையே சில குழப்பங்கள் வரும்.
பூத்த மலர்கள் கூட மறுபடியும் வாட ஆடம்பித்து விடுமாம். ஓநாய்கள் ஊளையிடும். பறவைகள் தங்களின் கூடுகளுக்கு திரும்பி போக ஆரம்பித்து விடும்.
பகுதி சூரிய கிகரணம்
இரண்டாவது வகை சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் ஆகும். பகுதி சூரிய கிரகணத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.
கொரோனா சின்ன சின்ன அலட்சியம் உயிரைக் கொல்லும்... எச்சரிக்கும் மருத்துவர்கள் !
இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். இதில் சூரியனின் ஒரு மிகச் சிறிய அல்லது ஒரு பகுதியை மறைக்கும் அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம்
சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும்
அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும் இது தான் கங்கண சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் இது தான் கடந்த டிசம்பர் 26ஆம் தேதியும், ஜூன் 21ஆம் தேதியும் நிகழ்ந்தது.
வளைய சூரிய கிரகணத்தில், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் போது, அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது,
சுவையான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி?
அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி மறைக்கும். சந்திரனால் மறைக்கப்படாத பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் ஒரு வட்டம் அல்லது வளையமாக தோன்றுகிறது.
இப்படி நெருப்பு வளைய வடிவத்தில் வரக்கூடிய சூரிய கிரகணத்தை வருடாந்திர சூரிய கிரகணம் என்று சொல்கிறார்கள்.
ஒற்றுமை, வேற்றுமை என்ன?
வளைய சூரிய கிரகணத்திற்கும், முழு சூரிய கிரகணத்திற்கும் என்ன வேற்றுமை என்று கேட்கிறீர்களா? நிலா நம்ம பூமிக்கு பக்கத்தில் வரும் போது சூரிய கிரகணம் நடந்தால் அது முழு சூரிய கிரகணம்.
நிலா நம்ம பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது சூரிய கிரகணம் நடந்தால் அது கங்கண கிரகணமாக இருக்கும்.
சூரியனை முழுவதுமாக நிலவினால் மறைக்க முடியாது. இந்த கங்கண சூரிய கிரகணத்தை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியும், கடந்த மாதம் ஜூன் 21ஆம் தேதியும் பார்த்தோம்.
வெஜ் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?
இதே போன்று 2031 மே மாதம் 21ஆம் நாள் தான் கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், அப்போது மதுரை, தேனி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வளைய கங்கண சூரிய கிரகணத்தை நம்மால் பார்க்க முடியும்னு வானியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
சூரிய கிரகணத்தால் முடிவுக்கு வந்த போர்
585 BC மே 28ஆம் தேதி இதை விட ஒரு முக்கியமான விசயம் முழு சூரிய கிரகணத்தப்ப நடந்திருக்கு ஆறு வருடம் நடந்த போர் நின்று போயிருக்கு. லிடியா மெடாஸ் நாடுகளுக்கு இடையே ஆறு வருடங்களாக நடந்த போரை நிறுத்தியது சூரிய கிரகணம்.
முழு சூரிய கிரகணம் நிகழ்ந்த போது இரு நாட்டு போர் வீரர்களும் பயந்து போய் சண்டையை நிறுத்தி விட்டு சூரியனை பார்த்து வேண்டுதல் செய்தார்களாம்.
அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் !
இனிமே நாங்க சண்டை போடமாட்டோம் சூரியன் உதிக்கணும்னு சொன்னாங்களாம். கிரகணம் முடிந்து சூரியன் வந்த உடன் சொன்ன மாதிரியே போரை முடித்துக் கொண்டார்களாம். இது மாதிரி கிரகணத்தால் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து இருக்கு.
கிரகணங்களும் நம்பிக்கையும்
சீனாவில டிராகன் சூரியனை சாப்பிடுவதாக நம்பிக்கை இருக்கு. நம்ம ஊர்ல சூரிய கிரகணம் நிகழும் போது ராகுவோ, கேதுவோ சூரியனை விழுங்குவதாக நம்பிக்கை இருக்கு.
செவ்விந்தியர்கள் என்ன சொல்றாங்கன்னா சூரியன் நிலாவை வானத்தில் இருந்தப்ப சூரியனை கரடி கடிச்சு சாப்பிட்டது. சூரியன் பயந்து கரடிகிட்ட சொல்லிச்சாம் நான் நெருப்பா கொதிக்கிறேன்.
குழந்தைகளுக்கு பிடித்த கேரட் - பீன்ஸ் சாதம் செய்வது எப்படி?
என்னைய சாப்பிடுறதை விட நீ அதோ வெள்ளையா இருக்கு பாரு அவளை சாப்பிட்டா ஜில்லுன்னு இருக்கும் சொல்லிச்சாம். கரடியும் மெதுவா நடந்து நிலா கிட்ட வர்றதுக்கு 15 நாள் ஆயிருச்சாம்.
அதனால தான் சூரிய கிரகணம் நடந்து சரியா 15 நாள்ல சந்திர கிரகணம் நடக்குது. முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம்னு மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் பார்க்கிறோம்.
மொத்தத்தில கிரகணங்கள் நிகழும் போது வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் மனித உடம்புக்கு ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தான் யாருமே கிரகண நேரத்தில வெளியே வரவேண்டாம்னு சொல்றாங்க.
கோவில்களையும் மூடி வைக்கிறாங்க. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரும்னு சொல்லித் தான் கிரகண நேரத்தில கர்ப்பிணிகளை கூடுதல் எச்சரிக்கையோட இருக்கச் சொல்றாங்க.
ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?
அதனால சூரிய கிரகணம் வரும் போது சூரியனை பார்க்காதீங்க. சந்திர கிரகணம் வரும் போது சந்திரனை பார்க்காதீங்க. கிரகணம் நடக்கிறப்ப பிரியாணி சாப்பிடறது எல்லாம் அவங்கவங்க நம்பிக்கையை பொறுத்த விசயம்.
Thanks for Your Comments