அதிக வறண்ட சருமம், அழற்சி, தலையில் ஏற்படும் பொடுகு இபபடி பல காரணங்களால் சரும அரிப்பு அதனால் வடுக்களும் உண்டாகின்றன.
இந்த எரிச்சலூட்டும் பிரச்சனைகளை தடுக்க வீட்டு வைத்தியம் கை கொடுக்கும். சரும அரிப்புக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள் பலவும் உண்டு.
மருத்துவ ரீதியாக ப்ரூரிடஸ் என்று அழைக்கப்படும் அரிப்பு, தோல் அல்லது நரம்பு செல்கள் எரிச்சலடையும் போது உண்டாகிறது. இதை இயற்கையாக வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி குணப்படுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.
சரும அரிப்பும் வடுக்களும்
அது அரிப்பாக, சொறி, சிரங்கு, வறண்ட சருமம், தேமல், சரும வடுக்கள் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். சிலருக்கு சில வகை உணவுகள் அழற்சியை ஏற்படுத்தினால் கூட சருமத்தில் அது பிரதிபலிக்கும்.
உடனே ரேஸஸ் தோன்ற ஆரம்பித்து வீடும். அதே போல் குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடுவதால் கூட சருமத்தில் ரேஸஸ் வர வாய்ப்புள்ளது. சருமத்தை காற்றோட்டமாக விட வேண்டும்.
இல்லை யென்றால் வறண்டு போய் ரேஸஸை உண்டாக்க நேரிடலாம். இப்படி ரேஸஸ் வந்த இடம் சிவந்து போய் அரிக்க ஆரம்பித்து விடும்.
சில பேருக்கு ஒரு இடத்தில் ஏற்படும் வடுக்கள் அப்படியே உடம்பு முழுவதும் பரவ ஆரம்பித்து விடுகிறது. சரி இதை எப்படி சரி செய்யலாம்.
எப்படி சரி செய்வது
தோலின் மேல் சிவந்து படலம் போன்று தென்படும். இதனால் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை யென்றால் கூட நீங்கள் அசெளகரியமாக உணர்வீர்கள்.
நீங்கள் மருத்துவரிடம் சென்றால் இதற்கு க்ரீம்கள், லோசன்கள், களிம்புகளை பரிந்துரைப்பார். ஆனால் இவை உங்களுக்கு தற்காலிகமான பலனை கொடுக்கலாம்.
இதில் பக்க விளைவுகள் இருக்க வாய்ப்புள்ளது. உண்மையில் இந்த மாதிரி சரும அழற்சிகளை தடுக்க வீட்டு வைத்திய முறைகள் சிறந்தது. காரணம் இவை சரும அழற்சியை தடுப்பதோடு சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும்.
சரும அழற்சியை தடுக்கும் தன்மை நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு உள்ளன. அவை எவை எவை அதைக் கொண்டு எப்படி சரும வடுக்களை சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
கற்றாழை ஜெல்
இதன் குளிர்ச்சியான தன்மை சரும அழற்சியை குறைத்து விடும். சீக்கிரமே அரிப்பெல்லாம் நின்று உங்க வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.
இதற்கு காரணம் கற்றாழையில் உள்ள ஆன்டி வைரல், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மையே காரணம். சரும புண்களை ஆற்றி நிவாரணம் தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது.
பேக்கிங் சோடா
இயற்கையில் இது காரத்தன்மை கொண்டது. இது தோல் அமிலங்களை நடுநிலையாக்குவதற்கும் அரிப்பு நீங்கவும் சிறந்த வழியாகும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும அழற்சியை குறைக்க உதவுகின்றன.
பேக்கிங் சோடா 1 கப் எடுத்து குளியல் நீரில் கலந்து அது கரைந்ததும் உடலை சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தினமும் ஒரு முறை இதை செய்து வந்தாலே சரும அரிப்பு நீங்கும்.
டீ ட்ரி ஆயில்
குளித்த பிறகு சரும வடுக்கள் வந்த இடத்தில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் ரேஸஸ் மறைந்து விடும். இதில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை காக்கிறது.
ஆப்பிள் சிடார் வினிகர்
அரிப்பு குறைய இது உதவும். சருமத்தில் இரத்தக் கசிவோ, வெட்டோ உள்ள இடத்தில் ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்த வேண்டாம்.
இது எரிச்சலை ஏற்படுத்தும். சருமப் பிரச்சினைக்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று தலையில் இருக்கும் பொடுகுப் பிரச்சினை. ஆம் தலையில் பொடுகு அதிகமானால் கூட சருமத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.
ஐஸ் ஒத்தடம்
இல்லை யென்றால் ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி வைக்கலாம். இது தோலை சுருக்கி அரிப்பை ஓட்டி விடும். ஆனால் அதிக வறண்ட சருமம் கொண்டவர்களாக இருந்தால் இந்த ஐஸ் ஒத்தடத்தைத் தவிர்ப்பது நல்லது.
அது மேலும் சருமத்தை வறட்சியாக்கி விடும் ஆயில் சருமம் உள்ளவர்கள் தாராளமாக இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகச் சிறந்த ஒன்று. உங்க சருமம் ஆரோக்கியமாக இருக்க சில துளிகள் தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும்.
இதை விட சிறந்த சருமப் பாதுகாப்பு மருந்து வேறெதுதுவும் கிடையாது என்றே சொல்லலாம். இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்திற்கு ஈரப்பதத்தை தந்து வெடிப்பை நீக்குகிறது.
எனவே உங்களுக்கு சரும வடுக்கள், சரும அரிப்பு, தலை அரிப்பு ஏற்படும் சமயங்களில் சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை தேயுங்கள் சரியாகி விடும்.
எப்சம் உப்பு
சரும அழற்சி நீங்கி விடும். மேற்கண்ட வீட்டு வைத்திய முறைகள் உங்க சரும வடுக்களை நீக்க உதவியாக இருக்கும்.
அதோடு வழக்கமாக நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு எப்சம் உப்பு கலந்து குளித்து வந்தால் சரும அரிப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகள் நீங்கி, சருமம் நல்ல பொலிவுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.
Thanks for Your Comments