முதல் மழைத் துளி மண்ணில் பட்டதும், சட்டென்று புறப்பட்டு வந்து நமது நாசியைத் துளைக்கும் அந்த இனிமையான நறுமணம் அதை ‘மண்வாசனை' என்று சொல்லி விடுகிறோம்.
அந்த வாசனையில் சில நிமிடங்கள் மெய் மறக்கும் நீங்கள், எப்போதாவது அது எப்படித் தோன்றுகிறது என்று நினைத்ததுண்டா? இந்தக் கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றி இருக்கும்! அதற்கான விடையை இப்போது தெரிந்து கொள்வோம்.
பாக்டீரிய வித்து
மண்ணில் வாழும் இழை பாக்டீரியாக்கள் என்கிற நுண்ணுயிர்கள் வெளியிடும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் இந்த வாசனை ஏற்படுகிறது.
தங்கள் இனத்தைப் பெருக்கும் நோக்குடன் காய்ந்த மண்ணில் இவை தங்கள் வித்துக்களை வெளியிடுகின்றன.
மழை பெய்யும் போது மண்ணில் வேகமாக விழும் நீர்த்துளிகளால் இவ்வித்துகள் மண்ணில் இருந்து சிதறி இனவிருத்திக்காகக் காற்றில் பயணிக்கின்றன. அவற்றுள் சில நம் மூக்கை வந்தடைகின்றன. இது அல்லாது மழை பெய்வதற்கு முன் ஒரு வாசனை வரும்.
ஓசோனும் காரணம்
அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. இது வளிமண்டலத்தில் உள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து ஓசோனை உருவாக்குகிறது. ஒரு பகுதியை நோக்கி வரும் புயல் மேகங்கள் இந்த ஓசோனைச் சுமந்து வருகின்றன.
அது நமது நாசியை அடைவதால் மழை வருவதை முன்கூட்டியே உணர முடிகிறது. பண்டைக்காலத்தில் மழை தான் உலகுக்கு வளம் தரும் ஒரே விஷயமாக இருந்தது.
அதனால், நமது மூதாதையர்களுக்கு மழை ரொம்ப பிடித்த விஷயமாக இருந்தது. அது மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு, நமக்கும் மண்வாசனை பிடித்தமான விஷயமாக இருக்கிறது.
பெட்ரிக்கார் - Petrichor
மேலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இசபெல் ஜாய் பேர் (Isabel Joy Bear) மற்றும் ஆர்.ஜி. தாமஸ் (R.G. Thomas),
வறட்சிக்குப் பின் வரும் புது மழையில் தோன்றும் மண் வாசனையைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது, இந்த வாசனைக்குப் பெட்ரிக்கார் (Petrichor) எனப் பெயரிட்டனர். மண்வாசனை, மூன்று விதமான காரணங்களால் உருவாகிறது.
ஒரு வகையான பாக்டீரியா
மண்ணிலும், பாறைகளிலும் ஊறிக் கலந்து இருக்கும் இந்த எண்ணெய், மழை பெய்யும் போது, பலகூட்டுப் பொருட்களுடன் சேர்ந்து, காற்றில் கலந்து மணம் வீசுகிறது.
ஈரமான, வனப்பகுதிகளில், மண்ணில் வாழும் ஆக்டினோமைசேட்டிஸ் (Actinomycetes) எனும் ஒரு வகையான பாக்டீரியா, விதை மூலங்களை (Spores) வெளியிடும் போது, ஜியோஸ்மின் (Geosmin) எனப்படும் வேதிக்கூட்டுப் பொருளை சுரக்கின்றன.
மூலக்கூறுகளிடையே வேதிவினை
இடி, மின்னலில் வெளியாகும் மின்னூட்டம் பெற்ற துகள்கள் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளிடையே வேதிவினையைத் தூண்டி, நைட்ரிக் ஆக்சைடை (NO) உருவாக்குகின்றன.
இது வளிமண்டலத்தில் இருக்கும் வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்து ஓசோன் வாயுவை உருவாக்குகிறது. மழைக் காற்றுடன் கலந்து வரும் இந்த ஓசோன் வாயு, குளோரினின் மணத்தை நினைவூட்டக் கூடியது.
எங்கிருந்தோ வரும் மழைக் காற்றில் கலந்து வரும் இந்த வாயுவினால் தான், மழை வருவதற்கு முன்பே, மழை மணத்தை நம்மால் உணர முடிகிறது.
Thanks for Your Comments