தோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். 

தோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
பல ஆண்டுகளாக நமக்கு தெரியாமலேயே செய்து வரும் தோப்புக்கரணம் ஒரு யோகாசனம் என்று எத்தனை பேருக்கு தெரியும். 

நாம் மற்ற உடற்பயிற்சிகள் செய்யா விட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், நாம் பல நன்மைகளை அடையலாம். 

தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்து வந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.

இதை வெளிநாடுகளில் சூப்பர் பிரெயின் யோகா என்று குறிப்பிடுகின்றனர். 

தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். 

அடிபட்ட காலுடன் விளையாடிய டு பிளசிஸ்... களத்தில் நடந்தது என்ன?

நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும். இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும். 

வலது கையை மடக்கி வலது கையின் பெரு விரலால் இடது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும். அப்படி பிடிக்கும் போது கட்டை விரல் காதின் முன் புறமும் ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.

வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும். இரு கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்பு கரணம் போட வேண்டும். 

உட்காரும் நிலை நம்மால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்யலாம். எழும் போது மூச்சை வெளியே விட்டபடி எழ வேண்டும். இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளோ பலப்பல...

கடலில் கப்பல் எவ்வாறு மூழ்காமல் மிதக்கிறது?

தோப்பு கரணம் போடும் போது நம் காது மடல்களை பிடித்து கொள்கிறோம் அல்லவா. அப்போது தான் உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கும். 

உட்கார்ந்து எழும் போது காலில் இருக்கக்கூடிய சோலியஸ் எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு கண்கள் கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்பு புள்ளிகள் அமைந்திருக்கின்றன. 

தோப்புக்கரணம் போடும் போது இந்த எல்லா உறுப்புகளுமே பயனடைகின்றன. இதன் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. 

இதனால் மூளை சுறுசுறுப்படைந்து நினைவுத்திறன் அதிகரிக்கிறது. தோப்புக் கரணத்தை தொடர்ந்து போடும் போது மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவதாக கூறப்படுகிறது. 

இப்பயிற்சியால் இடுப்பில் இருக்கும் எலும்பு, தசை ஜவ்வு போன்றவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.

தோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

கர்ப்பிணிகள் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப் பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 

ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !

இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு 70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. 

நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings