தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?

0

உடலில் முக்கியமானது தோள்பட்டை. இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலியால் கஷ்டப்படுகிறார்கள். 

தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?
எப்போது ஒருவரது தோள் பட்டையைச் சுற்றியுள்ள தசைகள் அல்லது தசை நாண்களில் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தோள்பட்டை வலியை உண்டாக்கும். 

தோள்பட்டை வலி இருந்தால், அது பல அசௌகரியங்களை உண்டாக்குவதோடு, அன்றாட வேலைகளை பெரிதும் பாதிக்கும். தோள்பட்டை வலி முதியவர்களை மட்டுமின்றி, அனைத்து வயதினரையும் பாடுபடுத்தக் கூடியது. 

குறிப்பாக கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு தோள்பட்டை வலி அடிக்கடி வரும். 

தோள்பட்டை பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும், குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுதியாக இல்லை. 

ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. 

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது !

இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தோள்பட்டையில் எப்படி வலி வருகிறது? எவ்வாறு பாதிப்பை தவிர்ப்பது? அதற்கான எளிய மருத்துவம் என்ன? என்று பார்க்கலாம்.

எதனால் வலி ஏற்படுகிறது?

எதனால் தோள்பட்டை வலி ஏற்படுகிறது?

தோள்பட்டை பகுதியில் உள்ள தசைகளின் தளர்ச்சி, தசைநார்களின் தொடர்ச்சி அறுபடும் போது அதில் வலி ஏற்படும். தோள்பட்டை வலியானது கழுத்து அல்லது கைகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் வரும். 
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது !

நாள்பட்ட தோள்பட்டை வலி வருவதற்கு ஆர்த்ரிடிஸ், குருத்தெலும்புகளில் உள்ள பாதிப்பு, எலும்பு முறிவு அல்லது தண்டுவடத்தில் காயம் போன்றவைகளும் காரணங்களாக இருக்கும்.

கழுத்தில் இருந்து 'ஸ்காப்லா' எலும்புப்பட்டை முழுவதும் படர்ந்து சற்று கீழ்பகுதி வரை உள்ள தசைப் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கம், தளர்ச்சி உள்ளிட்ட காரணங்களாலும், தோள்பட்டை வலி ஏற்படும்.

யாருக்கு பாதிப்பு?

தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?

கணினி, மடிக்கணினி, கைபேசி பயன்படுத்துபவர்கள், கடின பணிகள் செய்பவர்கள், தறியில் பணிபுரிபவர்கள், சுத்தியல் கொண்டு பணிபுரிவோர், கட்டிடப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படும்.

டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு இந்த வலி வரலாம்.

சோற்று கற்றாழை ஜூஸ் செய்வது !

வயதானவர்களுக்கு தசைநார் ரத்த ஓட்டம் சீரின்மையால் அது கிழிந்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கைகளை துாக்க முடியாத நிலையும் ஏற்படும்.

நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு தோள்பட்டை மூட்டு உறை இறுக்கம் ஏற்பட்டு அதனால் வலியுடன் கைகளை இயக்க முடியாத நிலை ஏற்படும்.

என்ன அறிகுறிகள்?

தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?

எலும்பு தேய்மானமோ, எலும்பு உடைந்திருந்தாலோ அதிக வலி ஏற்பட்டு பாதிப்பை உணர்த்தி விடும்.
ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது !

தோள்பட்டையில் ஏதேனும் அடிபட்டாலும் வலி ஏற்படும்.

தோள்பட்டையில் விறைப்பு

தோள்களை அசைப்பதில் சிரமம்

தோள்பட்டைப் பகுதிகளில் வீக்கம்

தோள்பட்டையில் விட்டுவிட்டு வலியை உணர்தல்

என்ன செய்ய வேண்டும்?

தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?

உடற்பயிற்சியை தினமும் பழக்கப் படுத்திக் கொள்வது அவசியம். இளமையில் (18 வயது முதல் 30 வயதுக்குள்) உடற்பயிற்சி செய்து உடல்திறனை பழக்கப் படுத்தியவர்களின் எலும்புகள் 60 வயது வரை திடகாத்திரமாக இருக்கும்.

இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது

கால்சியம் நிறைந்த முட்டை, பால், மீன் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, கீரை வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

வலியை போக்கும் மருத்துவம்

தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?

பாதிப்பிற்கு உள்ளான தசை, பாதிப்பின் தன்மைக்கு ஏற்றவாறு பிசியோதெரபி பயிற்சி மூலம் குணப்படுத்தி விடலாம்.

நோயாளியின் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் அல்ட்ரா சவுண்ட் தெரபி, எலக்ட்ரோ தெரபி, இன்செக்ஷன் தெரபி உள்ளிட்ட முறைகளில் பாதிப்புக்களை குணப்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings