1. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்!
கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவை யெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
2. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவை யெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!
3. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
4. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.
5. தினமும் உடற்பயிற்சி செய்து வருவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். அது சிறுநீரகங்கள் சீராக செயல் படுவதற்கும் துணை புரியும்.
Thanks for Your Comments