மெக்டொனால்ட்ஸ் இன்று அனைத்து முக்கிய நகர்களிலும் இருக்கிறது. உலகிலேயே அதிகளவு, கிளைகள் கொண்ட இரண்டாவது மிகப்பெரிய உணவுச் சங்கிலி மெக்டொனால்ட்ஸ் தான்.
Richard MCDonald மற்றும் Maurice MCDonald இருவரும் தான் மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள். இவர்களது தந்தைக்கு சரியான வருமானம் இல்லாததால், குடும்பம் வறுமையில் வாடியுள்ளது.
எனவே, சினிமாவில் சாதித்து முன்னேறலாம் என்ற ஆசையில் இவர்கள் இருவரும் கலிஃபோர்னியாவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு பல ஸ்டூடியோக்களில் வாய்ப்பு தேடினர். இறுதியாக கொலம்பியா மூவி ஸ்டூடியோவில் வாரத்திற்கு 25 டாலர் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !
அதன் பின்பு, அந்த சம்பளத்தில், சிறிய தொகையை மட்டும் செலவு செய்து மீதியை சேமித்து வைத்து, அதன்மூலம் திரையரங்கம் ஒன்றை வாங்கி அடுத்த தொழிலை ஆரம்பித்தனர்.
ஆனால், அதில் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். அதன் பின்பு, இருவரும் உணவகம் திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
எனவே, ஷேன்பெர்டாண்டினோ நகரில், மெக்டொனால்ட்ஸ் BAR-B-Q என்ற Fast Food Restaurent-ஐ தொடங்கியுள்ளனர்.
எனினும், அங்கு மக்கள் கூட்டம் இல்லை. இதனால் திறந்த வேகத்தில் உணவகத்தை மூடக்கூடிய நிலைக்கு சென்றனர்.
அதாவது, அந்த காலகட்டத்தில், Fast Food Restaurent அனைத்தும் அதிகமான வாகனம் நிறுத்தும் இடத்துடன் தான் தொடங்கப்பட்டுள்ளது.
அங்கு, வாகனத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் போது, பெண் பணியாளர்கள், ஸ்கேட்டிங் செய்து கொண்டே வந்து என்ன சாப்பாடு வேண்டும்? என்று கேட்பார்களாம்.
இதிலும், மிகப்பெரிய குழப்பம் இருந்துள்ளது. அதாவது, Menu-வில் 25 முதல் 30 உணவு வகைகள் இருந்ததால், வாடிக்கையாளர்களுக்கு, எந்த உணவை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்துள்ளது.
எனினும், அதிலிருந்து ஒரு உணவை தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் கொண்டு வரும் உணவு வேறாக இருந்துள்ளது.
இவ்வாறு குழப்பங்களிலேயே உணவகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது போல் தான், மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் ஆரம்பித்த உணவகமும் இருந்துள்ளது.
எனவே, தான் உணவகம் நஷ்டம் அடைந்துள்ளது என்று சகோதரர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, 3 மாதங்களுக்கு உணவகத்தை அடைத்து விட்டனர்.
இந்த குழப்பங்களை சரி செய்த பின்பு தான் உணவகத்தை திறக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன் பின்பு, பல வகைகளில் சிந்தித்து பல மாற்றங்களை கொண்டு வந்தனர்.
அதில் முதலாவதாக, மெனுக்களில் அதிகம் விற்பனையான உணவு வகைகளை கண்டறிந்தனர்.
அதன்படி, Hamburger, Cheese burger, French Fries, Coffee, Milkshake, Apple Pie போன்ற 6 மட்டுமே அதிகம் விற்பனையாகி இருந்தது.
எனவே, மெனுவில் இருந்த மற்ற உணவு வகைகளை நீக்கி விட்டு, இந்த 6 உணவு வகைகளை மட்டும் வைத்தனர்.
அந்த காலகட்டங்களில் இருந்த Fast food உணவகங்களில் வாடிக்கையாளர் ஒரு உணவை கேட்டால், அது அவருக்கு சென்றடைய 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியுள்ளது.
மேலும், மிகக்குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுக்க முடிவெடுத்து, ஒருவர் பன் தயாரிக்க,
மற்றொருவர் அதில் சீஸ் ஊற்ற, இன்னொருவர் அதனை பேக்கிங் செய்து கொடுப்பார் என்ற திட்டத்தை சகோதரர்கள் தீர்மானித்தனர்.
இதனால், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த 30 விநாடிகளில், உணவு அவருக்கு கிடைத்து விடும்.
மேலும், மூன்றாவதாக, பெண் பணியாளர்கள் ஸ்கேட்டிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுத்து வந்த திட்டத்தை மாற்றி, வாடிக்கையாளர்களே, வாகனத்திலிருந்து இறங்கி வந்து,
உணவை ஆர்டர் செய்து விட்டு மீண்டும், வாகனத்திற்கு சென்று அமர்ந்த, 30 நொடிகளில் உணவு அவர்களை சென்றடையும் என்ற திட்டத்தையும் தீர்மானித்தனர்.
இது போன்ற மாற்றங்களினால், அப்போது வரை 35 சென்டுக்கு விற்பனையான Hamburger-ஐ, 15 சென்ட்க்கு அவர்களால் கொடுக்க முடிந்தது.
ஃபோம் கான்கிரீட் கற்கள் ( செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) !
இது மற்ற உணவகங்களை விட மிக குறைவான விலையில் இருந்தது. இது போன்ற மாற்றங்களை தீர்மானித்து விட்டு, 3 மாதங்களுக்கு பின் மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் உணவகத்தை திறந்தனர்.
உணவகத்தின் பெயரை MCDonald's Restaurent என்று மாற்றினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் அவர்களுக்கு நஷ்டம் தான்.
அதாவது, வாடிக்கையாளர்கள் வாகனத்தில் வந்து பார்த்த போது, ஸ்கேட்டிங் பெண்கள் இல்லாததால், அங்கிருந்து சென்று விட்டார்கள்.
இது போன்ற Restaurent-ஐ அவர்கள் பார்த்ததில்லை என்பதால், அவர்களுக்கு அந்த மாற்றங்கள் புதிதாக இருந்தது.
எனினும், மனம் தளராத மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பொறுமையாக இருந்துள்ளனர்.
ஆர்டர் செய்த 30 விநாடிகளில் உணவு கிடைத்தது மற்றும் குடும்பத்தினரோடு உண்ணும் வகையில், அமைக்கப்பட்டிருந்த சூழல் மக்களை வெகுவாக ஈர்த்தது.
இதனால் Restaurent-ற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின்பு, மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் பிரபலமடைந்தார்கள். தினசரி வாடிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.
இவ்வாறு நன்றாக சென்று கொண்டிருந்த மெக்டொனால்ட்ஸ் சகோதர்கள் வாழ்க்கையில் வந்தவர் Ray KROC. இவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Ray, சிறு வயதிலிருந்தே வெற்றியை பார்க்காதவர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் இருந்துள்ளார்.
அந்த சமயத்தில், milkshake கருவிகள் தயாரிக்கக்கூடிய பெரிய நிறுவனத்தில், விற்பனை முகவராக பணியில் சேர்ந்திருக்கிறார்.
அப்போது ஒரு Restaurent-ல் இருந்து 8 milkshake கருவிகள் வேண்டும் என்று ஒரு ஆர்டர் வந்தது. ஆர்டரை பார்த்த Ray KROC-விற்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.
8 milkshake கருவிகள் வாங்கக்கூடிய அளவிற்கு பெரிய Restaurent இருக்கிறதா? என்று அதனை பார்க்க சென்றிருக்கிறார்.
restaurent-ஐ பார்த்தவுடன் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார். இப்படி ஒரு பரபரப்பாக இயங்கக்கூடிய Restaurent-ஐ அவர் பார்த்திருக்கவில்லை.
குடும்பமாக அமர்ந்து, சுற்றுலாவிற்கு வந்தது, போன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை பார்த்து ஆச்சர்யமடைந்தார்.
அப்போது தான் இந்த Restaurent-ற்கு கிளைகளை தொடங்கி விட்டால் மிகப்பெரிய அளவில் சாதித்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.
ஆனால், அனைத்தையும் அவர்களால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. எனினும், பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருந்தது.
அப்போது தான், Ray KROC, மெக்டொனால்ட்ஸ் சகோதரர்களிடம், "உங்கள் Restaurent-ன் பல கிளைகளை நாடு முழுக்க தொடங்கி பிரபலப்படுத்துகிறேன்.
அதற்கான முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார்.
அதன்படி, மெக்டொனால்ட்ஸ் Restaurent-ன் கிளைகள் அனைத்திற்கும் Ray KROC தான் பொறுப்பு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் வேலை !
அதன் பின்பு, ஒரே வருடத்தில் 20 கிளைகள் கொண்டிருந்த MCDonald's Restaurent-ஐ 100 கிளைகளாக மாற்றினார் Ray KROC. இதற்காக,
அவர் பெரிதும் உழைத்து, ஒவ்வொரு கிளைகளுக்கும் தானே சென்று அனைத்து பணிகளையும் கண்காணித்திருக்கிறார்.
இவ்வளவு சிரமப்பட்டு உழைத்த அவருக்கு, தனிப்பட்ட முறையில் அதிகமான லாபம் கிடைக்கவில்லை.
எனினும், இதில் பெரிய அளவில் சாதிப்போம் என்று நினைத்த Ray, தான் சம்பாதித்த அனைத்தையும் இதற்காக முதலீடு செய்தார்.
ஆனால், அதனை திரும்பப்பெற முடியாமல் திணறினார். மேலும், MCDonald's Restaurent- ன் உரிமையாளர் தான் தான் என்று Ray வெளியில் காட்டிக் கொண்டார்.
Restaurent-ன் திட்டங்கள் அனைத்தும் தன்னுடையது என்றும் வெளியில் தெரியப்படுத்தி யுள்ளார். எனினும், அவர் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது.
அவரது சேமிப்புகள் காலியானது. அடுத்து என்ன செய்வது என்று குழம்பினார். அப்போது தான், அவருக்கு Harry J.sonneborn என்ற பொருளாதார நிபுணர் அறிமுகமானார்.
இவர் தான் Ray-க்கு அற்புதமான யோசனையை வழங்கினார். Ray-ன் வரவு, செலவு கணக்குகளை பார்த்த இவர்,
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு, Ray, "Hamburger business தான் செய்கிறேன்" என்று கூறியுள்ளார். ஆனால், sonneborn, இல்லை, "நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறீர்கள், அது தான் உங்களுக்கு லாபத்தை தரும்" என்று கூறியிருக்கிறார்.
இவரிடம் இடம் வாங்குபவர்கள், அந்த கட்டிடத்திற்கும் சேர்த்து வாடகை கொடுக்க வேண்டும்.
அதன் படி, MCDonald's Restaurent, மெக்டொனால்ட்ஸ் சகோதரர்களுக்கு உரியது. ஆனால் அது அமைந்துள்ள இடம், Ray-க்கு உரியது.
அதன் பின்பு, வந்த மெக்டொனால்ட்ஸ் கிளைகள் அனைத்தும் இவரின் இடத்திலேயே அமைக்கப்பட்டது. மெக்டொனால்ட்ஸ் கிளைகள் அதிகளவில் வளர தொடங்கியது.
அதே அளவிற்கு Ray-யும் வளர ஆரம்பித்தார். எனினும் மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள், Ray-யின் இந்த திட்டத்தை பற்றி அறியாமல் Restaurent-ஐ மட்டும் கவனித்து வந்தனர்.
ஆனால், Ray-க்கு MC Donaults Restaurent-ஐ முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்துள்ளது. அதற்கான முயற்சிகளையும் படிப்படியாக மேற்கொண்டார்.
அதன்படி, மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் தங்கள் Restaurent-ற்கு வைத்திருந்த கோல்டன் ஆர்ச்சை, Ray, தன் logo-வாக மாற்றி, MC Donaults Corporation என்று தன் நிறுவனத்தின் பெயரை மாற்றினார்.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பற்றி தெரியுமா? உங்களுக்கு !
அப்போது தான் மெக்டொனால்ட்ஸ் சகோதரர்களுக்கு Ray-யின் சூழ்ச்சி புரிந்தது. இதனால் கோபமடைந்த மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள், Ray-யிடம் சண்டையிட்டுள்ளனர்.
நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும், எங்களது கிளைகள் அனைத்தையும் பெற்று விடுவோம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் Ray, "தாராளமாக செய்து கொள்ளுங்கள்.
ஆனால் நீங்கள் Restaurent வைத்திருக்கும் இடம் என்னுடையது. அதனை மாற்றினால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். மேலும், அவை அனைத்திற்கும் வேறு இடங்கள் பார்க்க வேண்டும்.
அதற்கு வாய்ப்புகள் இல்லை, அதற்கான பொருளாதாரமும் உங்களிடம் இல்லை" என்று இயல்பாக கூறி விட்டார்.
மேலும், "நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், உங்களை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது.
உங்களை வெல்ல என்னால் முடியும். அனைத்து மெக்டொனால்ட்ஸ் Restaurent-யும் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள், உங்களுக்கு வேறு வழியில்லை என்று மிரட்டியிருக்கிறார்".
அதன் பிறகு தான் மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் சிந்தித்துள்ளனர். இவர்கள் நல்ல பொருளாதார வசதியுடன் இருந்தாலும், Ray அளவிற்கு இவர்களிடம் பணம் இல்லை.
எனினும், தாங்கள் முதன் முதலில் தொடங்கிய MCDonald's Restaurent-ஐ மட்டும் கொடுக்க மாட்டோம் என்று சகோதரர்கள் கூறினர்.
ஆனால், இந்த விவகாரதத்தில் சிறிதும் நியாயம் இல்லாமல் செயல்பட்ட Ray, இனிமேல் நீங்கள் MC Donald's என்ற பெயரில்
எந்த நிறுவனமும் தொடங்கக்கூடாது என்று மெக்டொனால்ட்ஸ் சகோதரர்களுடன் ஒப்பந்தம் செய்தார்.
இறுதியாக 2.7 மில்லியன் டாலர்கள் கொடுத்து அனைத்து MCDonald's Restaurent-யும் Ray வாங்கி விட்டார்.
இது மட்டுமல்லாமல், மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள், முதலில் ஆரம்பித்த Restaurent-ஐ தனக்கு தராததால், Ray அந்த Restaurent-ற்கு அருகில் MCDonald's Restaurent-ஐ கொண்டு வந்தார்.
கண்கள் எதுக்கு அடிக்கடி துடிப்பது ஏன்?
ஏற்கனவே, MC Donald's என்ற பெயரில் Restaurent நடத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் இருப்பதால், மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் 'M' என்ற பெயரில், அந்த Restaurent-ஐ நடத்தி வந்தனர்.
இதனால், மக்கள் உண்மையான MCDonald's Restaurent, இது இல்லை என்று கருதி, Ray தொடங்கிய MCDonald's Restaurent-ற்கு செல்ல தொடங்கினர்.
இதனால், வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி, சகோதரர்கள் தங்கள் Restaurent- ஐ அடைத்து விட்டனர்.
சகோதரர்களுக்கு, தங்களின் கடுமையான உழைப்பு, தங்களை விட்டு பறிபோனதை ஏற்று கொள்ள முடியவில்லை, மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள்.
அவர், 1984-ல் மரணமடைந்த பின் தான் உண்மையில் MCDonald's Restaurent-ஐ தோற்றுவித்தவர்கள் மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் என்று வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.
'வைரஸ் காய்ச்சல்' தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ?
மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் செய்த முதல் தவறு, தங்களின் அனைத்து கிளைகளிலும் தாங்களே சென்று பார்வையிடாமல், முழு பொறுப்பையும் Ray -யிடம் ஒப்படைத்தது.
அடுத்த மிகப்பெரிய தவறு, சட்ட ரீதியாக போராடாமல், உடனடியாக தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தங்களது அனைத்து Restaurent-யும் Ray -யிடம் ஒப்படைத்தது தான்.
Thanks for Your Comments