12 வருடமாக ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம் !

0

திருப்பத்தூர் அருகே சொந்த நிலத்தில் கோயிலுக்கு வழி தராத ஆத்திரத்தில், 12 வருடங்களாக ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.

12 வருடமாக ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம் !
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை கல்லாவூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி காளியம்மாளுக்கு, சுமார் 4 ஏக்கர் 18 சென்ட் விளை நிலம் உள்ளது. 

இவரது பக்கத்து நிலத்திற்கு சொந்தக்காரரான சிரனன், அவருடைய நிலத்தில் புதூர் மாரியம்மன் கோயிலை கட்டியுள்ளார். 

மேலும் ஊர் மக்களை தூண்டி விட்டு, கோயிலுக்கு செல்ல காளியம்மாள் நிலத்தி வழி கேட்டுள்ளார்.

கிளிமஞ்சாரோ மலையில் வளரும் ஒரு விசித்திரமான செடி இனம் ! 

4 அடி அகலத்திற்கு வழி கொடுத்துள்ள நிலையில், நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு இடத்தை தர வேண்டும் என சிரனன் கேட்டுள்ளார். 

அதற்கு மறுப்பு தெரிவித்த காளியம்மாளை, ஊர் பொதுமக்கள் 12 ஆண்டுகளாக ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். 

மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படாமல் பரிதவித்து வந்துள்ளார்.

12 வருடமாக ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம் !

இந்த நிலையில் காளியம்மனின் உறவினர்கள், தங்களது நிலத்தில் முள் வேலி போட கற்களை நாட்டியுள்ளனர். 

இதனை அறிந்த சிரனன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், ஆத்திரத்தில் கற்களை பிடுங்கி எறிந்தனர். 

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?

அது மட்டுமின்றி காளியம்மாளின் கையில் பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings