நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

0

உலக நாடுகளில் மட்டன், சிக்கன் போல் கேஷுவலாக உண்ணப்படும் பன்றிக் கறி, சமீப காலமாக நம் ஊரிலும் பிரபலமாகி வருகிறது. 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !
மூல நோய்க்கு இது நல்லது என்ற மருத்துவக் குறிப்பைக் கேள்விப்பட்டு கறிக்கடைகளுக்கு பறப்பவர்கள் அநேகம் பேர். 

மட்டனை விட குறைந்த விலையில் சத்தான நான்வெஜ் வெட்டலாம் என்ற காரணமும் அவர்களை ஈர்க்கிறது. 

சென்னையில், பல இடங்களில் பன்றிக் கறி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #Raw Foodism !

சென்னையில், மட்டன், சிக்கன் போல் பன்றிக் கறியும் விற்பனை செய்யப்படுகிறது. 

'மூல நோய்க்கு நல்ல மருந்து' என, சில மருத்துவர்கள் தெரிவிப்பதால், அந்த நோய் உள்ளவர்கள், பன்றிக்கறியை வாங்கி உண்கின்றனர்.

இது மட்டுமின்றி, உடலுக்கு, குளிர்ச்சி என வெளியாகும் தவறான தகவலால், இளைஞர்கள் பலரும் கறிக்கடைகளில் பன்றிக்கறி வாங்கி செல்கின்றனர். 

மேலும், மட்டன் விலையை விட, பன்றிக்கறி விலை குறைவு என்பதாலும் பன்றிக்கறியை பலரும் வாங்குகின்றனர். 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

வார விடுமுறை நாட்களில் சென்னை வீதிகளில் பன்றிக் கறி விற்பனை அமோகமாக நடக்கிறது. 

ஆனால், இவை எதுவுமே பண்ணையில், சுகாதாரமான முறையில் வளர்க்கப்படும் வெள்ளைப் பன்றியல்ல; மாறாக, சாக்கடையிலும், சேறு, சகதியிலும் புரளும் கறுப்பு பன்றி கறி.

இது குறித்து பலமுறை அந்தந்த பகுதிவாசிகளும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஃபாரீன் குவாலிட்டி என்று பெருமிதம் காட்டும் நம் ஊர்க்காரர்கள் வாங்கிச் செல்வது, உண்மையிலேயே வெண்பன்றிதானா? 

மாத்திரைகளை எப்படி விழுங்குனா நல்லது தெரியுமா?

சனிக்கிழமை மதியம் தான் இதற்கான வேலை தொடங்குகிறது. சாக்கடைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் கறுப்புப் பன்றிகளை கழுத்தில் சுருக்கு மாட்டி இழுத்து வருகிறார்கள். 

அவை ஓடாமல் இருப்பதற்காக இரண்டிரண்டு பன்றிகளாக இணைத்து கால்களைச் சேர்த்துக் கட்டுகிறார்கள். இரவு 7 மணிக்குள் இந்த வேலை முடிந்து விடுகிறது.

மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அடுத்த கட்டம் தொடங்குகிறது. சாலை மறைவாக கட்டிப் போட்டிருந்த பன்றிகளை இழுத்து வீதியில் போடுகிறார்கள். 

மரண ஓலம் கேட்காமல் இருப்பதற்காக பன்றிகளுக்கு வாய்க் கட்டு போடப்படுகிறது. 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

அடுத்து என்ன... ஆடு, மாடு, கோழிகளைப் போல குரல் வளையை அறுத்துக் கொல்வார்கள் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை!

பன்றி இறைச்சி விற்பவர்களின் சம்பிரதாயப்படி கழுத்தை அறுத்துக் கொல்லக் கூடாதாம். 

கடப்பாரை போன்ற கனமான இரும்புக் கம்பியால் பன்றியின் வயிற்றில் மூன்று, நான்கு முறை ஓங்கி அடிக்கிறார்கள். 

கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?

வாயும் கட்டப்பட்டிருப்பதால், க்ரீச்... க்ரீச்... என்ற பரிதாப முனகல் மட்டும் கேட்கிறது. சிறிது நேரத்தில் பன்றி நிசப்தமாகி விட, அடித்தவர் முகத்தில் வெற்றிப் புன்னகை. 

மரண பீதியோடு இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற பன்றிகளுக்கும் இதே கதி தான். கொலைப் படலம் அரங்கேறி முடிந்ததும், தெருவிலேயே நெருப்பு மூட்டுகிறார்கள். 

ஒவ்வொரு பன்றியாக அதில் போட்டுப் புரட்டி எடுக்க... முடிகள் பொசுங்கி, கறுப்புப் பன்றியின் சருமம் வெள்ளையாகிறது. 

அதை இரண்டாக வெட்டிப் பிளந்து தண்ணீர் ஊற்றிக் கழுவி, மஞ்சள் பூசுகிறார்கள். பிறகு நெருப்பு மூட்டிய இடத்தைக் கூட்டி அள்ளி, சுவடு தெரியாமல் செய்கிறார்கள். 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

தள்ளு வண்டியில் பன்றிகளைத் தூக்கிப் போடுகிறார்கள். இதோ, ஃபாரீன் குவாலிட்டி வெண்பன்றி விற்பனைக்கு ரெடி!

உண்மையிலேயே வெண்பன்றியை வளர்த்து வெட்டி விக்கிற இடங்களும் சென்னையில இருக்கலாம். ஆனா, பல ஏரியாக்கள்ல பெரும்பாலும் இது தான் நடக்குது. 

குறிப்பா சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், மூலக்கடை, பாடி மாதிரியான இடங்கள்ல இது ரொம்ப அதிகம்! என்றார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் !

அதிக அளவு கொழுப்பு சத்து கொண்ட பன்றி இறைச்சி, ஒரு முறை டேஸ்ட் செய்து பார்த்தவரைக் கூட விடாமல் துரத்தும் அபார சுவை கொண்டது. 

ஆனால், பன்றிகள் எளிதில் நோய் தொற்றக் கூடியவை. உடல் முழுக்க ஒட்டுண்ணிகளைக் கொண்டிருப்பவை. 

அவற்றை கவனமாக சமைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றெல்லாம் வெண்பன்றிகளுக்கே உலக அளவில் எச்சரிக்கைக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

அப்படி யென்றால் கறுப்புப் பன்றி? இதை வெண்பன்றி என நினைத்து வாங்கிச் சாப்பிடும் மக்களின் கதி?

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குடல் நோய்ப் பிரிவுத் தலைவரான டாக்டர் முகமது அலி கூறியதாவது. 

பன்றி இறைச்சி மூல நோய்க்கு நல்லது என்ற நம்பிக்கை தான் நம் ஊரில் பலரையும் அதைச் சாப்பிட வைக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையில் துளியும் உண்மையில்லை. 

உறுப்பு தானம்... உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?

பொதுவாக, சுகாதாரமில்லாத சூழலில் வளர்ந்த பன்றி இறைச்சியை சாப்பிடுவதால்   திரிகூரா திச்சுராஸிஸ்  என்ற நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். 

உடலில் எங்கெங்கே சதை இருக்கிறதோ அங்கெல்லாம் இந்நோய் பரவும். நமது இதயமும் ஒரு சதைத்திரள் தான். அதனால் இதய பாதிப்பும் வரக்கூடும்.

அதோடு கிருமிகள் மூளையைத் தாக்குவதால், மூளைச்சாவு என்கிற கோமா நிலைக்கும் போகலாம். 

உயிரிழப்பும் ஏற்படலாம். சமைக்கும் போது வெப்பத்தால் கிருமிகள் அழிந்துவிடும் என்ற தவறான எண்ணமும் மக்களிடம் இருக்கிறது. 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

எப்படிச் சமைத்தாலும் பன்றிக்கறி நோய்க் கிருமிகளைப் பரப்பும் என்பது தான் உண்மை. எனவே, காசு கொடுத்து காஸ்ட்லி நோயை வாங்க வேண்டாம்! என்றார் அவர்.

பன்றி இறைச்சியை உண்பவர்கள் மட்டுமல்ல... அதனை வெட்டி விற்பவருக்கும் கூட 

கிருமித் தொற்று ஏற்படக்கூடும் என அபாயமணி அடிக்கிறார் சென்னையைச் சேர்ந்த கேஸ்ட்ராலஜி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பி.நந்திவர்மன்.

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

எந்த வகைப் பன்றியாக இருந்தாலும் அதில் முட்டை வடிவிலான நாடாப்புழுக்களின் நுண்ணுயிர் இருக்கும். 

பன்றி இறைச்சி மூலம் நம் உடலுக்குள் அது போய்ப் பெருக ஆரம்பிக்கும். அந்தக் கிருமியே, திரிகூரா திச்சுராஸிஸ்  நோய் உருவாகக் காரணமாக இருக்கிறது. 

கிளவுஸ் அணியாமல் பன்றி இறைச்சியைக் கையாளுவதாலும் இந்த நோய் பரவலாம் என்று சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

நீங்க உண்பது வெண்பன்றியா? நெருப்பில் புரட்டி முடிகள் பொசுங்கி வெள்ளையாகிறது !

இந்நோய் முற்றி மருத்துவரை அணுகும் போது, பன்றி இறைச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளது என்று அந்த நோயாளி சொன்னால் மட்டுமே அதற்கான சிகிச்சையை அளிக்க முடியும். 
ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

அப்படி சொல்லாத பட்சத்தில் அந்த நோயைக் கண்டுபிடிக்கவே நாளாகி விடும். அப்படித் தாமதமாக கண்டுபிடிக்கும் சூழ்நிலையில் நோயை குணமாக்குவது கேள்விக்குறியே என்கிறார் அவர்.

கறுப்பு வெளுப்பு தெரியாத அப்பாவி மக்களை சீக்கிரம் காப்பாத்துங்க... ப்ளீஸ்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings