டி.என்.ஏ-வை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கி இருக்கிறது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.
கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவது இன்னும் இரு வாரத்தில் ஆரம்பமாகும் என
கொரோனா எதிர்பாற்றலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்துகள்
இமாச்சலத்தில் உள்ள ஆய்வகத்திற்குத் தரப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒக்டோபர் 15-20 ஆம் திகதிகளில் இந்த மருந்தை மக்களுக்கு செலுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊசியில்லாமல் உடலில் செலுத்தும் இந்த மருந்தை 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவசரப் பயன்பாட்டிற்குச் செலுத்த
துபாயில் 43 வருடம் விடுப்பு எடுக்காத போலீஸ் அதிகாரி !
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments