ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம்.
இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.
பாதாம் ஊற வைத்தோ வறுத்தோ சாப்பிடாமல் அப்படியே சாப்பிடுவதாக இருந்தால் இந்த அளவு பொருந்தும்.
நேரம் :
பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடக் கூடாது.
ஊற வைத்த பாதாம் :
பலருக்கும் இருக்கிற கேள்வி இது தான். பாதாமை அப்படியே சாப்பிடலாமா அல்லது ஊற வைத்து அதன் தோலை நீக்கி தான் சாப்பிட வேண்டுமா என்பது தான்.
இது சுவையை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இதனை தேர்ந்தெடுப்பதில் நம்முடைய ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது.
பாதம் தோலில் அதிகப் படியான டேனின் இருக்கும்.அதாவது பாதாமிற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல....
அவ்வளவு எளிதாக பாதாமில் இருக்கக் கூடிய சத்துக்களை வெளிவிடாது. அதனால் தான் அதன் தோலை நீக்கி சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது.
Thanks for Your Comments