நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல் தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள்,
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:
சீரான உடற்பயிற்சி
உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
மது அருந்துவதைத் தவிர்ப்பது
அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
யோகாசன பயிற்சி செய்வது,
தியானப் பயிற்சி செய்வது.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம் !
Thanks for Your Comments