கேரளாவில் பாம்பை ஏவி விட்டு மனைவியை கொன்ற வழக்கில், கணவர் குற்றவாளி என்று கொல்லம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
மனைவியை கொலை செய்வதற்காகவே 10 ஆயிரத்துக்கு பாம்பை விலை கொடுத்து, ஒரு பையில் போட்டு வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.
அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?
இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது.. ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.
திருமணத்தின் போது 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் மற்றும் சூரஜின் தங்கையின் படிப்பிற்கான முழுச் செலவு, அவரது தந்தை பிழைப்பின் பொருட்டு ஆட்டோ ஒன்று என்று வரதட்சணையாக வாரிக் கொட்டி யிருக்கிறார் உத்ராவின் தந்தை விஜயசேனன்.
இத்தனை சொத்துக்களையும் அடைந்த சூரஜ் குடும்பத்தினர், மீண்டும் வரதட்சணை கேட்டு உத்ராவை கொடுமைப் படுத்தியுள்ளனர்.
இதை பார்த்து பதறிய கணவனும் உத்ராவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது தான், அணலி வகை பாம்பு ஒன்று உத்ராவை கடித்திருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.
இதையடுத்து, திருவல்லாவில் ஒரு ஆஸ்பத்திரியில் 16 நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன்பிறகு வீட்டிற்கு திரும்பினார் உத்ரா. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி தூங்கி கொண்டிருந்த மகளை எழுப்ப அவரது அம்மா ரூமுக்குள் வந்தார்.
அப்போது அசைவற்று படுக்கையில் கிடந்தார். வாயில் நுரை தள்ளியிருந்தது. உடம்பெல்லாம் நீலகலரில் இருந்தது.. இந்த முறையும் உத்ராவை காப்பாற்ற முடியவில்லை.
மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் செய்ய வேண்டுமா? படியுங்கள் !
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே இது அதிர்ச்சியை தந்தது. அது எப்படி ஒரே ரூமில் உத்ராவை 2 முறை பாம்பு கடிக்கும் என்று சந்தேகம் எழுந்தது. உத்ரா ரூம் 2-வது மாடியில் இருக்கிறது.
அது ஏசி ரூம்.. ஏசி இருப்பதால் ஜன்னல்கள் கூட திறக்க வாய்ப்பு இல்லை. உத்ராவை பாம்பு கடித்த 2 முறையும், சூரஜ் தான் அந்த ரூமில் படுத்திருந்திருக்கிறார்.
2 பேரும் ஒரே ரூமில் படுத்திருந்த போது, பாம்பு கடித்த அன்று விடிகாலை 5.30 மணிக்கே சூரஜ் எழுந்து வெளியே போய் விட்டார். அவள் உயிர் அந்த ரூமிலேயே போயிடுச்சு. அதுக்கப்பறம் டிரெஸ்ஸிங் ரூமில் அந்த பாம்பு இருந்தது. அது மூர்க்கன் வகை என்று சொல்கிறார்கள்.
முதல் முறை பாம்பு கடிக்கும் போதே, சூரஜ் தான் அந்த பாம்பை கையிலேயே பிடிச்சு ஒரு கோணி பையில் போட்டுட்டு வெளியே எடுத்துட்டு போனார்.
விஷ பாம்பை எப்படி அவர் அசால்ட்டா கையில் தூக்கிட்டு போக முடியும்னு அப்பவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. உத்ரா கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போட்டோம், கார் தந்தோம், பணம் தந்தோம்.
தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !
இன்னும் நகை, பணம் வேணும் என்று சூரஜ் கேட்டு கொண்டிருப்பதாக உத்ரா அழுது எங்ககிட்ட சொல்லியிருக்கிறாள். அதனால் அவள் சாவில் உரிய விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் என கண்ணீருடன் சொல்லியிருந்தனர்.
இது சம்பந்தமாக போலீசிலும் புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது. அப்போது தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
உத்ராவின் நகை மீது தான் சூரஜ்-க்கு மொத்த கவனமும் இருந்துள்ளது. ஆவருக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்திருக்கிறார்.
இந்த விஷயம் உத்ராவுக்கு தெரிந்து சண்டை போட்டுள்ளார். இது தான் இவர்களுக்குள் பிரச்சனையாக இருந்திருக்கிது.
சம்பவத்தன்று ஒரு பையில் போட்டுக் கொண்டு வீட்டில் போய் ஒரு மூலையில் வைத்து விட்டார். அன்று இரவு 12 மணி வரை உத்ராவிடம் ஜாலியாக பேசி கொண்டிருந்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகைக்கு காஜூ ஆப்பிள் செய்வது எப்படி?
12 மணிக்கு மேல் உத்ரா தூங்கி விடவும், அதற்கு பிறகு பையில் உள்ள பாம்பை எடுத்து உத்ரா மீது ஏவி விட்டுள்ளார்.
பிறகு கதவை சாத்தி கொண்டு வெளியே சென்று விட்டார். இதற்கு பிறகு தான் பாம்பு உத்ராவை கடித்துள்ளது. இவ்வளவும் விசாரணைக்கு பிறகு தெரிய வந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Thanks for Your Comments