பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா?

0

வயிற்றில் உயிரிழந்த சிசுவோடு கதறிய கர்ப்பிணி பெண்ணை ஈவிரக்கம் இல்லாமல், தான் வேலை பார்க்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் ஒரு பெண் டாக்டர்.

பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா?
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. 

நிறைமாத கர்ப்பிணியான இவரை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

நிலக்கடலை இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?

அங்கு அவருக்கு திடீரென வயிற்றுவலி வந்துள்ளது. இதனால், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு, ஆரம்ப சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்..

அங்கு டாக்டர் ஜோதிமணி என்பவர், கர்ப்பிணியை பரிசோதித்து விட்டு, குழந்தைக்கு அசைவே இல்லை, அது வயிற்றிலேயே இறந்து விட்டதாக சொன்னார். 

இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. கர்ப்பிணிக்கு வயிறு வலியும் அதிகமாகி கொண்டே போனது. 

குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டால், தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், இறந்த குழந்தையை ஆபரேஷன் செய்து உடனே அகற்றி விடுவது வழக்கம்..

ஆனால், கர்ப்பிணி பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை தராமல், 4 நாட்களாக காலதாமதப் படுத்தியதாக சொல்லப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் வலியை பொறுக்க முடியாத நிலையில், உடனே ஆபரேஷன் செய்து குழந்தையை அகற்றுமாறு குடும்பத்தினர் பெண் டாக்டர் ஜோதிமணியிடம் கெஞ்சினர். 

வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?

அதற்கு ஜோதிமணி, பக்கத்திலேயே ஸ்ரீவிநாயக் மெடிக்கல் சென்டர் என்ற பிரைவேட் ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

அதை கேட்ட குடும்பத்தினரும், ஜோதிமணி பரிந்துரைத்த அந்த தனியார் மருத்துவமனையை தேடி சென்றனர். 

பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா?

ஆபரேஷனுக்காக கர்ப்பிணி பெண்ணுடன் காத்திருந்தனர். அப்போது தான், ஆபரேஷன் செய்ய ஜோதிமணியே அங்கு வந்து நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பிறகு தான் தெரிந்தது, அந்த மருத்துவமனையில் ஜோதிமணி பகுதி நேரமாக வேலை பார்க்கிறாராம். இவருக்காகவே மருத்துவம் பார்க்க தனியாக ஒரு ரூம் அங்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

எனினும், உடனே ஆபரேஷன் செய்து விடுவார் என்று குடும்பத்தினர் பரபரப்புடன் இருந்தனர். 

அப்போது ஜோதிமணி, வயிற்றில் இறந்த சிசுவை அகற்றுவதற்கு ரூ.35,000 பீஸ் கட்ட வேண்டும். பணம் கட்டினால், ஆபரேஷன் செய்வதாக கூறியுள்ளார். 

அதை கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், இந்த ஆபரேஷனை உங்க அரசு மருத்துவமனையிலேயே செய்திருக்கலாமே என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு ஜோதிமணி, அது உங்களுக்கு தேவையில்லாதது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா? என்று அலட்சியமாக கேட்டுள்ளார். 

வலியில் ஒரு பக்கம் போராடி கொண்டிருக்கும் கர்ப்பிணியின் நிலைமையை உணர்ந்து, 

முதலில் அவரை உயிருடன் காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக, ஜோதிமணி கேட்ட 35 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளனர். 

பணத்தை கட்டியதும் தான் ஜோதிமணி ஆபரேஷன் செய்ய கிளம்பினார்.

பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா?

அரசு மருத்துவர் ஜோதிமணியின் இப்படி ஒரு மனிதாபிமானற்ற செயல்பாடு, குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், மன வேதனையும், தந்தபடியே இருந்துள்ளது. 

அதனால், இதுகுறித்து சோஷியல் மீடியாவில் தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.. அந்த செய்தி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் சென்றுள்ளது. 

பருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் !

முதல் கட்டமாக, ஜோதிமணியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் உத்தர விட்டுள்ளார். 

இதுகுறித்து கோட்டாட்சியருக்கு விசாரணை நடத்தவும் உத்தர விட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings