நம் நாட்டின் பெர்ஃப்யூம் கேப்பிட்டலாக (நறுமண தலைநகர்) குறிப்பிடப்படுகிறது உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கன்னோஜ் (Kannauj) நகரம்.
கன்னோஜ் நகரம் பெர்ஃப்யூம் கேப்பிட்டலாக குறிப்பிடப்படுவதற்கு காரணம் நமக்கு பிடித்த டிசைனர் பிராண்ட் பெர்ஃப்யூம்கள் விலை மலிவாக கிடைக்கும் என்பது அர்த்தமில்லை.
இங்கு தயாரிக்கப்படும் பெர்ஃப்யூம்கள் பண்டைய உலகின் ராஜ வாசனை அனுபவத்தை நமக்கு அளிக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாசனை திரவிய வர்த்தகம் செய்து வருவதால், நாட்டின் வாசனை திரவிய உற்பத்தியில் கன்னோஜ் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே தான் இந்தியாவின் வாசனை திரவிய தலைநகரம் என்று இந்நகரம் குறிப்பிடப்படுகிறது. கன்னோஜ் நகரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பெர்ஃப்யூம் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.
Axe perfume, Fogg perfume, Kenzo perfume இப்படி நிறைய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில், பெண்களை கவர்வது பேன்றே உருவாக்கி இருப்பார்கள்.
எங்களுடைய வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண்கள் சுற்றி சுற்றி வருவார்கள். வாசனையை நுகர்ந்தவுடன் மடியில் சாய்வார்கள் என்றெல்லாம் விளம்பர படுத்தியுள்ளனர்.
இந்த வாசனை திரவியம் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்களா? என்ற கேள்வி 50-50 என்று சொல்லலாம். சிலருக்கு வாசனை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம்.
இதை அறிந்து கொள்ளாமல் பலர் ஒரு மதிப்பெண்ணில், அரசு வேலையை இழந்துள்ளனர். அதுபற்றி தெரியுமா?
வாசனை திரவிய பாட்டில்கள் அனைத்தும், பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றது.
பெர்னோலி தத்துவம்
பள்ளி பருவத்தில் இந்த தத்துவத்தை நீங்கள் படித்து இருப்பீர்கள், ஆனால் அது எங்கு செயல்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு முறையாக கற்றுத்தரப்படவில்லை.
படத்தில் உள்ளவாறு தான் வாசனை திரவிய பாட்டில் அமைப்பு இருக்கும். வாசனை திரவியம் முக்கால் பங்கு நிரப்பப்பட்டு இருக்கும். மீதி உள்ள பகுதியில், காற்று அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்டு இருக்கும்.
மேலே உள்ள மூடியை அழுத்தியவுடன் பெர்னோலி தத்துவம் மூலம் வாசனை திரவியம் வெளியேறும். பாட்டிலின் வெளியே காற்று சமநிலையில் இருக்கும். அதாவது பாட்டில் உள்ள அழுத்தத்தை விட வெளியில் உள்ள காற்றின் அழுத்தம் மிகவும் குறைவு.
வாசனை திரவியம், பாட்டிலினுள் இருக்கும் காற்றுக்கும், வால்வின் ஓட்டைக்கும் இடையில் இருக்கும். இதனால், காற்று கொடுக்கும் அழுத்தத்தின் மூலம், முதலில் வாசனை திரவியம் வெளியேறும்.
ஓவ்வொரு முறையும் பட்டனை அழுத்தும் போதும், வாசனை திரவியம் இப்படித் தான் வெளியே வரும். வாசனை திரவியம் முழுமையாக தீர்ந்தவுடன் தான் இறுதியாக காற்று மட்டும் புஸ் புஸ் என்று வெளியில் வரும்.
அல்லது, காற்றும் வாசனை திரவியத்துடன் சேர்ந்தே வரும். காற்று தீரும் போது வாசனை திரவியமும் தீர்ந்து விடும்.
நாமும் வாசனை திரவியம் தீர்ந்தவுடன் பாட்டிலை வீசி விடுவோம். காற்று, அழுத்தம் அதிகமான பகுதியில் இருந்து, அழுத்தம் குறைவான பகுதியை நோக்கி செல்லும்.
இப்பொழுது பெர்னோலி சமன்பாடு பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறன்.
இது பள்ளி தேர்வில் மட்டுமல்ல, TNPSC தேர்வுகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி.
எனவே, பெர்னோலி என்றவுடன் செண்ட் பாட்டிலை நினைத்துக் கொண்டால் போதும் எளிதில் விடை அளித்து விடலாம்.
Thanks for Your Comments