மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதைப் பொருள் தடுப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யா கான் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அக்டோபர் 11 வரை ஆர்யா கானை காவலில் வைக்க கோரியுள்ளது.
அவரது தொலைபேசியில் 'அதிர்ச்சியூட்டும், குற்றச்சாட்டுக்கு ஆதாரமும் இருப்பது' கண்டு பிடிக்கப்பட்டது.
ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், அர்பாஸ் வியாபாரி மற்றும் முன்முன் தமேச்சா ஆகிய மூன்று பேர் மும்பை கடற்கரையில்
ஒரு கப்பலில் சனிக்கிழமை இரவு நடந்த சோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டு, திங்கள்கிழமை வரை NCB காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது ஜாமீனில் வரக்கூடிய குற்றம் என்றும், அவரிடம் எந்த விதமான தடயங்களும் இல்லை என்றும் வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் திங்கள் வரை மூவரையும் காவலில் வைத்தது.
NCB மூன்று பேருக்கும் இடையில் வாட்ஸ் அப் உரையாடல்கள் ஆதாரமாக இருப்பதாக வாதிட்டது.
போதை பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் வழக்கமான நடக்கும் அந்த உரையாடல்கள் ஆதாரமாக உள்ளதாக கூறியது.
போதை மருந்து மற்றும் மனோதத்துவ பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த மூவரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்யா கான், அர்பாஸ் மற்றும் முன்முன் தமேச்சா தவிர, மற்ற ஐந்து பேரும், நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மொஹக் ஜஸ்வால்,
விக்ராந்த் சோக்கர் மற்றும் கோமித் சோப்ரா ஆகியோரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன் மூலம், ரெய்டைத் தொடர்ந்து எட்டு பேரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், நாடு முழுதும் 72 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருளுடன் பிடிபடும் நபர்களுக்கு இரண்டு விதமாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் அதன் அளவின் அடிப்படையில் தண்டனை காலமும், அபராதமும் மாறுபடும்.
தனி நபர் பயன்படுத்தும் அளவு போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களில் இருந்து, அதிகபட்சம் ஓராண்டு வரை சிறை தண்டனையும்,
10 ஆயிரம் முதல், ௧ லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகின்றன.விற்பனை செய்வதற்காக,
அதிக அளவிலான போதைப் பொருளுடன் சிக்குபவர்களுக்கு 10 - 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Thanks for Your Comments