ஆல்கஹால் மற்றும் சிகரெட் போன்ற வற்றை குறைப்ப தால் மட்டும், நாம் முற்றிலும் ஆரோக்கி யமாக இருக்கப் போவ தில்லை.
ஏனெனில் ஏற்கனவே எந்த அளவுக்கு நமது கல்லீரல் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை, நம்மால் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாது.
அதற்கான அறி குறிகள் எதாவது தெரிவதற்கு முன் பிருந்தே நாம் ஜாக்கிரதையாக இருந்தால் தான்,
நமது ஆரோக்கியத்தை காப் பாற்றிக் கொள்ள முடியும். கல்லீரல் ஆரோ க்கியம் பற்றிய நிஜமான கவலை இருந் தால்,
முதலில் வயிற்றில் சதை விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். கல்லீரல் பாதிக்கப் பட்டிருப் பதற்கான முதல் அறி குறியே உப்பிய வயிறு தான்.
உணவு முறை சரியாக இருந்து, உடற் பயிற்சியும் இருந்து அடி வயிற்றில் சதை விழுந் தால், நீங்கள் கண்டிப் பாக மருத்து வரை அணுகுவது அவசியம்.
கல்லீரல் ஆரோக்கி யத்தை பேணு வதற்கான சில அத்தி யாவசிய குறிப்பு களை இங்கே உங்களுக் காக தருகிறோம். ‘வந்த பின் வருந் தாமல், வருமுன் காப்பதே சிறந்தது' என்பதே இவற்றின் அடிப்படை.
கொழுப்பு உணவுகள்
கொழுப்பு உணவுகள் விஷய த்தில் மிகவும் கட்டுப் பாட்டுடன் இருப்பது அவசியம். ஏனெனில் கல்லீர லின் முதல் எதிரி இவை தான்.
கொழுப்பு உணவுகள் மூல மாக உடலில் சேரும் அதிக பட்ச கொலஸ் ட்ரால், கல்லீர லின் இயக் கத்தை பலவிதங் களில் பாதித்து சேதப் படுத்தி விடும்.
மிதமிஞ்சிய மதுப் பழக்கம்
மது எந்த அளவுக்கு கல்லீரலை பாதிக்கும் என்பது எல்லோ ருக்கும் தெரிந்தது தான்.
மதுபானம் அதை அருந்து பவருக்கு எந்த பலனை யாவது அளிக் கிறதோ இல்லையோ, முதலில் கல்லீர லுக்கு கெடுதலை மட்டும் அளித்து விடுகிறது.
மது விஷய த்தில் ஜாக்கிரதை யாக இருப்ப வர்கள், ஒரு நாளைக்கு 2 பெக்கு களுக்கு மேல் எடுத்துக் கொள்வ தில்லை. அதிகபட்சம் 4 பெக்குகள் என்று கொண் டாலும்,
அதற்கு மேல் குடிப்பவர்கள் கண்டிப் பாக மருத்து வரை சந்தித்து, அந்த பழக்கத் திலிருந்து விடுபட முயற் சிப்பது நல்லது.
புகைப் பழக்கம்
சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று தெரிந்தி ருந்தாலும், அந்தப் பழக்கத் திலிருந்து விடு படுவது சிலருக்கு சிரம மாகத் தான் இருக் கிறது.
இந்த போதை கடைசி யில் நமது கல்லீரல் மற்றும் நுரை யீரல்களை முற்றிலும் அழித்து விட்டுத்தான் ஓயும்.
அப்படி ஒரு போதைச் சாத்தா னுக்கு நாம் ஏன் அடிமை யாக வேண்டும் என்ற கேள்வி யுடன் புகைப் பழக்கத் திற்கே ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
அதிலும் உடலை சீரழித்து, ஆயுளைக் குறை க்கும் புகைப் பழக்கத்தை விட்டொழி ப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?
உடற் பயிற்சி யின்மை
உடலு க்கு எந்த விதமான உடற் பயிற்சியும் இல்லாமல், மந்த மான, சோம்ப லான வாழ்க்கை முறையை பின் பற்றினால்,
வியாதிகள் நம்மை தேடி வந்து சேரும் என்பது தான் உண்மை. கொஞ்ச மாவது நடக்க வேண்டும், கை மற்றும் கால் களை அசைத்து வீட்டு வேலைகள் போன்ற வற்றில் ஈடுபட வேண்டும்.
அப்போது தான் உடலில் உயிர்ப்பு இருக்கும். ஏ.சி சொகுசு மற்றும் யாவற்று க்கும் மற்றவர் உதவி என்று சோம் பலான வாழ்க்கையை வாழ்ந் தால், வியாதிகள் தான் உருவாகும்.
பின்னர், எல்லாம் இருந்தும் ‘ஆரோக் கியம் இல்லை - ஆயுளும் இல்லை' எனும் துர திர்ஷ்டத் திற்குத் தான் உட்பட வேண்டி யிருக்கும்.
தவறான டயட் உடலை சிக்கென்று வைக் கிறேன் பேர்வழி என்று ஏதாவது ஒரு ‘ஃபேன்சி டயட்டிங்' முறையை பின் பற்றினால்,
முதலில் பாதிப் படைவது கல்லீரல் தான். நல்லதை செய்கிறோம் எனும் போலி மன மயக்க த்தில், உடலில் நிஜமாக நடப்பது என்ன என்பதை நம்மால் உணர முடி யாமல் போய் விடும்.
எனவே கல்லீர லின் இயக்க த்தை பாதிக்கக் கூடிய ‘கடுமை யான டயட்' முறை களை தவிர்த்து, ஒரே சீரான உணவு முறை மற்றும் கட்டுப்பாடு போன்ற வற்றில் கவனம் செலுத் துவது நல்லது
குறிப்பு
கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை யில் கட்டுப் பாடுகளை பின் பற்றுவது மாத்திரம் இல்லை.
வேறு சில விசேஷ மருத்துவ வசதி களையும் பின்பற்ற கொள்ள வேண்டும். ஏனெனில் இதனா லும் கல்லீரல் சிக்கல் களை குணப் படுத்தி விட முடியும் என்பதும் குறிப் பிடத் தக்கது.
முக்கிய மாக கல்லீரல் அழற்சி தடுப்பூசி, அவ்வப் போது இரத்த பரிசோத னைகள், காட் லிவர் ஆயில் மாத்தி ரைகள் மற்றும்
பாது காப்பான உடலுறவு போன்ற எல்லா ஏனைய அம்சங் களும் கல்லீரல் ஆரோக் கியத்தை உறுதிப் படுத்திக் கொள்ள உதவு கின்றன.
Thanks for Your Comments