அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனாவிற்கு எதிராக சிலருக்கு சூப்பர் ஹியூமன் சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் எம்ஆர்என்ஏ வகை வேக்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை
உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா வந்து குணமடைந்தவர்களும் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூலம் கிடைக்கும் ஆண்டிபாடி குறைவாக இருக்கும். இதனால் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் வேக்சின் போடப்பட்ட 14 பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.
குளிர் இரத்தப் பிராணி, வெப்ப இரத்தப் பிராணி என்றால் என்ன?
கொரோனா வந்து அதன்பின் அதில் இருந்து குணமடைந்து ஒரு டோஸ் வேக்சின் எடுத்தவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தான் சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6 வகையான உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும் திறன் இவர்களிடம் இருந்துள்ளது.
அதோடு மிக முக்கியமாக இவர்களிடம் பழைய 2003ம் ஆண்டு உருவாக்கிய கொரோனாவை குணப்படுத்தும் ஆண்டிபாடிகளும் இருந்துள்ளது.
மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்யலாம்?
அதாவது இதுவரை உருவாக்கிய கொரோனா குடும்பத்தின் வைரஸ் வகைகளை எதிர்கொள்ளும் திறன் இவர்களிடம் இருந்துள்ளது.
இதனால் தான் இந்த ஆண்டிபாடியை சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி என்று கூறியுள்ளனர்.
கொரோனா வராமல் வேக்சின் போட்டவர்கள் அல்லது கொரோனா வந்து விட்டு வேக்சின் போடாதவர்கள் ஆகியோருக்கு சாதராண ஆண்டிபாடி மட்டுமே உள்ளது.
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
மற்றபடி ஏற்கனவே கொரோனா வந்து அதன்பின் எம்ஆர்என்ஏ வகை வேக்சின் போட்டவர்களுக்கு இந்த சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி இருந்துள்ளது.
ஆனால் இந்த சோதனை 14 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
பாம்பு கடி பற்றிய சில தகவல்கள் !
இன்னும் பலரிடம் சோதனை நடத்தப்பட்டால் மட்டுமே எத்தனை பேருக்கு இந்த சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி இருக்கிறது என்பது கண்டுபிடிக்க முடியும்.
Thanks for Your Comments