பாம்பின் தலையை பிடித்து அழுத்தி மனைவி உத்ராவை சூரத் கடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த சூரஜ் பத்தினம்திட்டா பகுதியில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி கொல்லத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த போது அவரை நாகப்பாம்பு கடித்து விட்டது.
ஆனால் எப்போதும் லேட்டாக எழுந்திருக்கும் சூரஜ் காலையிலேயே வெளியே கிளம்பியுள்ளார். அப்போது உத்ராவின் தாய், மகள் குறித்து கேட்ட போது அவர் இன்னும் தூங்குவதாகவே தெரிவித்துள்ளார்.
நத்தை கறியின் நன்மைகள் என்ன?
ஒரு வேளை உடல் நிலை சரியில்லையோ என நினைத்த அவர் உத்ராவை எழுப்ப சென்றார். அப்போது உத்ரா வாயை திறந்து கொண்டு சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உத்ரா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலகில் எங்கெல்லாம் நத்தை உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
ஏற்கெனவே ஒரு முறை சூரஜ் வீட்டிலிருந்த போது கட்டு வீரியன் பாம்பு தீண்டியதில் 52 நாட்கள் சிகிச்சை மேற்கொண்ட உத்ரா பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.
இதனால் சர்ப்ப கோபமாக (தேடி வந்து குடும்பத்தை பழித் தீர்ப்பது) இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் பேசினர்.
ஆனால் சில நாட்கள் கழித்து தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாம்பு ஜன்னல் வழியாக வந்ததாகவே சூரஜ் தெரிவித்தார். சில தகவல்களை அடிப்படையாக வைத்து இது கொலையாக இருக்கலாம் என கருதிய போலீஸார் பாம்பை வைத்து சோதனையும் செய்தனர்.
பொதுவாக நல்லப் பாம்புகள் தானாக கடிக்காது, அதை யாராவது கடிக்க வைத்தாலோ மிகவும் கோபத்தை ஏற்படுத்தினாலோ மட்டுமே கடிக்கும்.
இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாம்புகள் எப்படி கடிக்கும் என்பதை போலீஸார் சோதனை செய்தனர்.
இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !
அதற்காக உத்ராவின் எடை மற்றும் உயரத்துக்கு ஏற்ப ஒரு உருவம் செய்யப்பட்டு, அதில் கோழி இறைச்சி கட்டி வைத்து பாம்பை விட்டு கடிக்க வைத்து டம்மி சோதனை நடத்தி அறிக்கை அளிக்கப்பட்டது.
நிலக்கடலை இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?
எனவே அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்து எடுத்து வந்திருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அதன் தலையை அழுத்தி பிடித்து கடிக்க வைத்தால் மட்டுமே மேற்கண்ட அளவுக்கு காயம் ஏற்படும் என்பதையும் சோதனை மூலம் அறிந்து கொண்டனர்.
பாம்பின் தலைப் பகுதியை அழுத்தி பிடிக்கும் போது அதன் தலை விரிவடைந்து இது போன்ற ஆழமான காயங்கள் ஏற்படும்.
பாம்பு கடித்தால் மிகவும் அதிக வலியை ஏற்படுத்தும். ஆனால் பாம்பு இத்தனை ஆழமாக கடித்தும் உத்ராவுக்கு எதுவும் தெரியவில்லை.
இது குறித்து விசாரணையில் உத்ராவுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து தூங்க வைத்து பின்னர் பாம்பை வைத்து சூரஜ் கடிக்க வைத்துள்ளது தெரிய வந்தது.
கல்லீரல் பிரச்சனையும் தீர்வும் !
இதன் மூலம் சூரஜ் தான் குற்றவாளி என்பதை போலீஸார் நிரூபித்தனர்.
சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள அகலம் 1.7 செ.மீ இருக்கும் என்றும்,
அத்தனை சொத்துக்கும் தான் அதிபதியாகி விடலாம் என இது போல் பாம்பை வைத்து கடிக்க வைத்து கொலை செய்துள்ளார். போலீஸாரும் பாம்பு கடித்து விட்டதை நம்பினால் நாம் தப்பி விடுவோம் என எண்ணியுள்ளார்.
ஆனால் அதிர்ஷ்ட வசமாக பேராசை பிடித்த இந்த கொடூரன் போலீஸாரிடம் சிக்கி இன்று ஆயுள் தண்டனைக்கு பெற்றுள்ளார்.
Thanks for Your Comments