பால்வினை நோய்கள் என்றால் என்ன?

0

இருவருக்கு இடையிலான உடல் உறவின் மூலமாகவே இந்நோய்கள் பெரும்பாலும் பரவுகின்றன. 

பால்வினை நோய்கள் என்றால் என்ன?
உலக அளவில் பரவலாக இருப்பது மட்டும் அல்லாமல், சரியான நேரத்தில் பலனளிக்கும் வகையில் சிகிச்சை பெறாவிட்டால் 

கடுமையானதும் நிரந்தரமானதுமான சிக்கல்களைப் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்பதாலும் இவை பொது சுகாதார அக்கறையின் பால் பட்டவைகளாகத் திகழ்கின்றன.

மலட்டுத் தன்மை, கருவிரயம், இடமாறும் கர்ப்பம், ஆசனவாய்-பிறப்புறுப்புப் புற்று, அகால மரணம் ஆகியவை 

மட்டுமல்லாமல் பிறந்த குழந்தை, சிசு தொற்று நோய்களும் பால்வினை நோய்களின் சிக்கல்களும் இதன் பின் விளைவுகள் ஆகும். 

எச்.ஐ.வி. வைரஸ் தொற்று பரவவும் பால்வினை நோய்கள் துணை புரிகின்றன.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உடலுறவால் பரவும் பாக்டீரியாக்கள், வைரசுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன. 

மேக வெட்டை, கிளாமைடியா தொற்று, மேகநோய், திரிக்கோமோனியம், மென்கிராந்தி, புறப்புறுப்பு அக்கி 

மற்றும் பருக்கள், எச்.ஐ.,வி, கல்லீரல் அழற்சி  B  போன்றவை பால்வினை நோயால் ஏற்படும் முக்கியமான நோய்கள் ஆகும்.

குறிப்பாக எச்.ஐ.வி., மேகநோய் போன்ற பல பால்வினை நோய்கள் கர்ப்ப மற்றும் பேறு காலத்தின் போது 

தாயிடம் இருந்து சேய்க்கும், இரத்தப் பொருட்களின் மூலமும், திசு மாற்றத்தின் போதும் பரவுகின்றன.

உலக சுகாதர நிறுவனத்தின் புள்ளி விவரம் தினமும் 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஏதோ ஒரு பால்வினை நோயைப் பெறுவதாகக் கூறுகிறது. 

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

குணப்படுத்தக் கூடிய நான்கு பால்வினை நோய்களில் (கிளாமைதியா, மேகவெட்டை, மேக நோய் மற்றும் திரிக்கோமோனியம்) 

ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் 50 கோடிப்பேர் புதிதாகப் பெற்றுக்கொள்ளுவதாக உ.சு.நி. கணக்கிடுகிறது.

பால்வினை நோய் இந்தியாவில் ஒரு முக்கியமான பொதுச்சுகாதாரப் பிரச்சினையாகும். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிப் பேரவை சமுதாய அடிப்படையில் 2002-2003-ல் நடத்திய பால்வினை நோய்த் தாக்க ஆய்வின்படி 

இந்தியாவின் வயது வந்தோரில் 6% பேர் ஏதாவது ஒருவகைப் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறிந்துள்ளது. 

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 3-3.5 கோடி புதிய பால்வினைத் தொற்று ஏற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பெரும் பகுதியான இளைஞர்களும், இளம் வயதினரும் புதிய பால்வினை நேர்வில் பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தொற்று ஏற்பட்டிருப்பது பற்றி அவர்களுக்குத் தெரிவதுமில்லை. 

இது அவர்களது எதிர்கால உடல் உறவுப் பழக்க வழக்கங்களிலும் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings