குடல் இறக்கத்துக்கு மருந்து, மாத்திரை இல்லை. அறுவை சிகிச்சை ஒன்றுதான் முழுமையான தீர்வு தரும். இதற்கான சிகிச்சைகளில் பல முறைகள் உள்ளன.
குடல் இறக்கம் ஏற்பட்டுள்ள இடத்துக்குத் தகுந்தாற் போல் அறுவை சிகிச்சை முறை மாறும். மேலும், வயதுக்கு ஏற்றாற் போலவும் தசை வலு விழப்புத் தன்மையைப் பொறுத்தும் சிகிச்சை முறை மாறுபடும்.
இந்த நோயின் ஆரம்பநிலையில் அறுவை சிகிச்சை செய்வது மிக எளிது. பொதுவாக நோயாளி நன்கு பரிசோதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவரா என்று
மார்பு எக்ஸ்-ரே, இதயமின்னலை வரைபடம், வயிற்று ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் போன்றவற்றின் வழியாக உறுதி செய்த பிறகே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர் களுக்கு சிகிச்சை 100 சதவிகிதம் வெற்றியடையும்.
அறுவை சிகிச்சை செய்து கொள்ள தாமதம் செய்கிறவர் களுக்கு ஆபத்துகளும் அதிகம்; மீண்டும் குடல் இறக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் அதிகம்.
குடல் இறக்கப்பை வெட்டறுவை (Herniotomy):
குழந்தைகள் மற்றும் நல்ல வலுவுள்ள இளைஞர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.
வயிற்றைத் திறந்து, குடல்இறக்கம் உள்ள பையைக் கண்டுபிடித்து, இது வந்த துளை வரை திறந்து, பிரித்து, அதனுள் உள்ள குடலையும் மற்றவை
களையும் வயிற்றுக்குள் தள்ளி விட்டு துளையைத் தைத்து மூடி விடுவார்கள். மீதி உள்ளவற்றை வெட்டி யெடுத்து விடுவார்கள்.
இவர்களுக்கு தசைப்பகுதிகள் கெட்டியாக இருக்கும் என்பதால் இவ்வாறு சிகிச்சை செய்யப் படுகிறது. குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்ததும் இச்சிகிச்சையை செய்து கொள்ளலாம்.
குடல் இறக்கத் தசை சீர்திருத்த அறுவை சிகிச்சை (Herniorrhaphy):
நடுத்தர வயதினருக்குத் தசை மற்றும் தசை நார்கள் வலுவிழந்து இருந்தால் புரோலின் இழை (Prolene) கொண்டு அந்தத் தசைகளைத் தைத்து சீர்படுத்துவார்கள்.
குடல் இறக்கத் தசை வலுவூட்ட அறுவை சிகிச்சை (Hernioplasty):
மிகவும் வயதானவர் களுக்கும் புரோலின் இழை கொண்டு தசைகளைத் தைத்து வலுப்படுத்த இயலாதவர்களுக்கும் புரோலின் வலையை (Prolene mesh) அத்தசைகளுக்கு இடையில் வைத்துத் தைத்து வலுப்படுத்துவார்கள்.
இந்த வலையின் இடைவெளியில் வளரும் தசைகள் இறுக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தசைகள் பலவீனப்படுவது தடுக்கப்படும்.
நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopic surgery):
இதுவரை சொன்ன அறுவை சிகிச்சை முறைகள் அனைத்தும் வயிற்றைத் திறந்து செய்யும் சிகிச்சை முறைகளாகும்.
இப்போது பிரபலமாகி வரும் ‘லேப்ராஸ்கோப்பி’ முறையில் வயிற்றைத் திறக்காமல், சில துளைகள் மட்டும் போட்டு குடல் இறக்கம் சரி செய்யப் படுகிறது.
இதில் நோயாளிக்கு வலி குறைவு. ரத்தம் இழப்பு இல்லை. நோயாளி அதிக நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவிலேயே வேலைக்கும் திரும்பி விடலாம்.
Thanks for Your Comments