ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர் பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்.
ஒரு பட்டாம் பூச்சி படபட வென இந்த திசையில் பறந்தால் இப்படி நடக்கும் அதுவே படபட வென மறுபக்கம் பறந்தால் இப்படி நடக்கும்.
என்னடா இவன் முட்டாள் மாதிரி பேசுகின்றான் என நினைகாதீர்கள். உலகில் சிலரால் அறியபட்டாலும் பலரால் அறியபடாத, ஏற்றுக் கொள்ள படாத விதி தான் வண்ணத்துப்பூச்சி விளைவு.
எங்கோ நிகழும் ஒர் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு உலகின் மற்றொரு இடத்தில் ஒர் புயலை ஏற்படுத்தலாம்.
அதாவது, ஒர் நிகழ்வின் போக்கும் தாக்கமும், அதன் ஆரம்ப கணத்தின் நுண்ணிய நிகழ்வுகளைச் சார்ந்துள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவின் சுருக்கம்.
நம்வாழ்வில் நாம் என்றோ, எங்கோ செய்து விட்ட காரியத்தின் எச்சமொன்று மிச்சம் இருக்குமாயின் காலங்களை தாண்டி எதிர் பாராத பொழுதொன்றில் நம்மையோ,
நம்மை சார்ந்தவர்களையோ, வெளிநபர் ஒருவரையே ஏதோ ஒரு விதத்தில் தாக்கக் கூடும்.
புரிந்து கொள்வதற்கு கடினமான இந்த ஒழுங்கின்மையானது உலகின் எல்லா செயல்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துகிறது.
சிலந்தி வலையை போன்றதொரு ஒழுங்கற்ற தொடர்புகளால் நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப் பட்டுள்ளோம்.
இத்தொடர்பை விளங்குவதற்கு முன் வைக்கப்பட்ட விஞ்ஞான பூர்வமான விளக்கமே குழப்பவாதம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதே குழப்பவாதத்தின் அடிப்படை.
அதாவது எந்தவொரு அமைப்பிலும், அதன் செயற்பாட்டின் ஆரம்பத்தில் உருவாகும் சிறு தவறு அந்த மொத்த அமைப்பின் செயலையும் பாதிக்கும்.
குழப்பவாதம் / ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz 1963 இல், இதை பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒர் வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால்,
ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு என்றார்.
இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதன் காரணமாகவே இத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.
வண்ணத்திப்பூச்சி விளைவு பொதுவாக சுய சிந்தனை அற்ற ஒர் அமைப்பை முன்வைத்தே முன் வைக்கப்படுகின்றது.
தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது ஐயத்துக்குரியது.
எந்தவொரு திரைப்படத்தை பார்க்கும் போதும் ஒரு பகுதி ரசிகர்களிடையே இந்த ஒரு மனோபாவம் இருக்கும்.
இந்த சீன் மட்டும் இப்படி போயிருந்தா, கதையே வேற மாதிரி இருந்திருக்கும்”. என்று விமர்சனம் செய்வது உண்டு.
அப்படி சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட படம் தான் உலக நாயகன் 10 வேடங்களில் கலக்கிய தசாவதாரம் படம் தான். இந்த படத்தின் தொடகத்திலே இந்த விளைவை பற்றி கூறியிருப்பார்கள்.
உதாரணமாக..
அவதார் சிங் என்ற கதாபாத்திரதிருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கினால் தான் அவர் பிழைப்பார் என்பது போல காட்டி இருப்பார்கள்.
ஆனால் கோவிந்திற்கும் பிளேட்சேர்கும் நடந்த மோதலில் துப்பாக்கி குண்டு அவர் கழுத்தில் பாய்ந்து அந்த புற்று கட்டியை மட்டும் நீக்கி விடும்.
பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவில் கோவிந்த் என்ற விஞ்ஞானி ஒரு கிருமியை கண்டுப்பிடித்தார். இந்த கண்டுபிடிப்பு என்ற விளைவால் அவர் சென்னைக்கு வருகிறார்.
பின் அங்கும் இங்கும் ஓடி தப்பி பிழைத்து அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகிறார்.
பின் நடக்கும் நிகழ்வுகளால் அவதார் சிங்கின் தொண்டையில் உள்ள கட்டி நீக்கப்பட்டது என்ற விளைவு நடைபெற்றது.
இதில் முதல் நிகழ்வு நடைபெறவில்லை எனில் இரண்டாவது நிகழ்வும் நடந்திருக்காது. இப்படி ஒரு விளைவுக்கும் மற்றோரு விளைவுக்கும் உள்ள சங்கிலி தொடர்பே பட்டாம் பூச்சி விளைவு ஆகும்.
Thanks for Your Comments