மேகி நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாகும். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டு பிடிப்பாகவும் இதை சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டியது !
இது ஒரு முக்கிய உணவாக கருதப்பட்டு உலகளாவிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே போல் நூடுல்ஸ் அட்டையில் உள்ள ஊட்டச் சத்துக்களின் விவரங்கள் இன்னமும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
பிரதான உணவுகளை தவிர வேறு எந்த உணவையும் உண்ணாமல் கட்டுப்பாட்டுடன் மக்கள் வாழ்ந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.
ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு எதற்கும் நேரம் கிடைக்காததால், ஆரோக்கியமற்ற சுத்தமில்லாத உணவுகளை உண்ண பழகிக் கொண்டார்கள்.
இதன் காரணமாக பல விதமான புது புது நோய்களும் வரத் தொடங்கி விட்டது. தற்போதைய சூழலில், உடனடி நூடுல்ஸை 'புற்றுநோய் நூடுல்ஸ்' எனவும் குறிக்கலாம்.
சுவையுடன் கூடிய ஆரோக்கியம் என்ற சொல் இனியும் ஒத்துப் போவதாக இல்லை. இதற்கு சாட்சியாக பல நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.
அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை !
2 நிமிட மேகி நூடுல்ஸ் என்பது உங்கள் வயிற்றுக்கும் உட்புற உறுப்புகளுக்கும் பெரிய புதிராக அமையும். அதனால் இந்த உணவினைத் தவிர்ப்பது நல்லது.
அதற்கு காரணம், இந்த உணவை அதிகமாக உட்கொண்டவர்கள் பலர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதனால் இப்படிப்பட்ட நூடுல்ஸால் ஏற்பட போகும் குறைபாடுகளைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?
குறைந்த அளவிலான வைட்டமின்கள்
உடனடி நூடுல்ஸ்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் மற்றும் உடல் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை !
ஒரு முறை உண்ணும் மேகி நூடில்ஸில், தேவையான புரதம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல் குறைபாடு ஏற்படும். இதனால் இந்த உணவு நீண்ட நாள் பயனை கண்டிப்பாக அளிக்காது.
இந்த உணவில் கால்சியம் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளது என கூறப்படுவ தெல்லாம் உண்மையல்ல. இருப்பினும் நூடுல்ஸின் அட்டையில் இதெல்லாம் இருக்கிறது என கூறப்படுகிறது.
ஜங்க் உணவு
இன்றைய வேகமான உலகத்தில், எதற்குமே நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நபர்கள் ஜங்க் உணவுகளை நாடி செல்கின்றனர்.
நேரமின்மையும், அளவுக்கு அதிகமான வேலை பளுவும் சேர்ந்து மேகி நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது.
ஆம், பிறகு என்ன அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும் தானே. ஆனால் இவ்வளவு வேகமாக தயாராகும் உணவுக்கு கண்டிப்பாக ஜங்க் உணவு பட்டியலில் இடமுள்ளது.
உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப்பட்டுள்ளது;
அதாவது மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப் படுவதால் இதில் கொழுப்பு, கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இது சுலபமாக செரிமானமாகும் உணவல்ல. அதனால் ஜங்க் உணவான இது நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Thanks for Your Comments