இது போன்ற குற்றங்களை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என அந்த அமைத்து வலியுறுத்தியுள்ளது.
விசாரணை என்ற பெயரில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் சட்டத்துக்கு புறம்பாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்துள்ளதுடன்,
மூவரில் இருவரை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் நிலைமை என்ன என்பதை காவல்துறை கூற மறுத்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழங்குடியினர் சமூகத்தின் மீதான காவல்துறையின் இந்த அடக்கு முறையை விட்னஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யாவுக்கு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் காவல்துறையின் ஒடுக்கு முறையால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இத்திரைப்படம் வெளியானது முதல் தமிழக அரசின் பார்வை பழங்குடியின மக்களின் பக்கம் திரும்பியுள்ளது.
அழைத்துச் சென்று சித்திரவதை செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தில்லை நகரில் வசித்து வரும் குறவன் சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25) தர்மராஜ் (35) செல்வம் (55)
ஆகியோர் கடந்த நவம்பர் 14ஆம் தேதி 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சுமார் 11 :45 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது
10க்கும் மேற்பட்ட சீருடை அணியாத கள்ளக்குறிச்சி சிறப்பு படை போலீசார் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து,
விசாரணைக்கு வருமாறு கூறி வலுக்கட்டாயமாக வெள்ளை நிற டெம்போவில் அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணை குறித்தோ, அவர்களை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பது குறித்தோ சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் காவலர்கள் சென்றுள்ளனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இதுவரை எங்கே இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி அவரது மூன்று குழந்தைகளுடன் தன் கணவனை மீட்க அலைந்து கொண்டிருக்கிறார்.
காலை சுமார் 10 மணி அளவில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் ஊருக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நபர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத பட்சத்தில் நேற்று இரவு (16- 11 -2021) சுமார் 11 மணி அளவில் பரமசிவம் மற்றும் செல்வம் ஆகியோரை விடுவித்துள்ளனர்.
பிரகாஷ் மற்றும் தர்மராஜ் மீது தலா 13 வழக்குகள் போட்டுள்ளனர். ஆனால் அவ் வழக்குகள் குறித்த எந்த விவரத்தையும் காவல்துறை தர மறுக்கின்றனர்.
தொடர்ந்து குறவர், இருளர், சீர்மரபினர், குற்றப் பழங்குடி சமூகமாக கருதப்பட்ட ஏனைய சமூகங்கள் மீது காவல்துறையினர்
திருட்டு பொய் வழக்கு பதிவு செய்வது, அவர்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இதை தடுக்க காவல் நிலையங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என என விட்னஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
பிறப்பால் ஒருவரை குற்றவாளி ஆக்குவது சமூக கொடுமையின் உச்சம். சந்தேகத்தின் பேரில், அனுமானத்தின் பேரில்
குறவர் இன மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
இது போன்ற குற்றங்களை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என அந்த அமைத்து வலியுறுத்தியுள்ளது.
இந்த கொடுமையை ஜெய்பீம் திரைப்படம் காட்சிப் படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியிலும் பெரும் மாற்றத்தையும் அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் காவல்துறை இதே போன்ற கொடூரத்தில் ஈடுபட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறந்த நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இதில் உடனே தலையிட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் குறவர் பழங்குடி சமூகத்தைச்சேர்ந்த
பெ தர்மராஜ்(35),
பா.பிரகாஷ்(25),
பெ.சக்திவேல் (28) ஆகியோர் குத்துவிளக்கு,நகை திருடியதாக
கைது செய்து 3 நாட்களாகிறது.— நாம் தமிழர் கட்சி - இராணிப்பேட்டை (@NTKRanipettai) November 17, 2021
Thanks for Your Comments