தூத்துக்குடியில் விமான பணிப்பெண் விபரீத முடிவு.... இளைஞனுடன் நெருக்கமாக !

0

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைக்குழந்தையுடன் வந்த விமானப் பணிப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் விமான பணிப்பெண் விபரீத முடிவு.... இளைஞனுடன் நெருக்கமாக !
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் உள்ளூர் இளைஞருடன் பழகி வந்த விமானப் பணிப்பெண் தனக்கு ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

நடுவானில் விமானத்தில் இருந்து எரிபொருளை கொட்ட காரணம் தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை அடுத்த அய்யனார் காலனியை சேர்ந்த பொன். முனியசாமி என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கு பொன். இசக்கி என்ற மனைவியும், குழந்தை மற்றும் தாயும் உள்ளனர். 

குடும்பக் கஷ்டத்திற்காக கணவர் முனியசாமி வெளிநாட்டில் இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் உழைத்து வருகிறார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன மேலாளரான சுரேஷ் என்பவருடன் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 

கணவரும் அருகில் இல்லாததால் சுரேஷின் அரவணைப்பு இசக்கி முத்துவுக்கு ஆறுதலாக இருந்துள்ளது. 

மேலும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்த இசக்கிக்கு சுரேஷ் அவ்வப்போது பண உதவி செய்து வந்ததாக தெரிகிறது.

சுறுசுறுப்பாய் இருங்கள்... இதயம் பாதுகாப்பாய் இயங்கும் !

3 வது மைல் பகுதியில் வசிக்கும் சுரேஷ் அடிக்கடி இசக்கியை சந்தித்து பழகி வந்துள்ளார். 

இந்நிலையில் நிறைய பணஉதவி செய்து விட்டு அதற்கு மாறாக வேறு விதமான உதவிகளை இசக்கியுடன் கேட்டதாக கூறப்படுகிறது. 

அதை இசக்கி மறுக்கவே சுரேஷ் தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட சுரேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார் பொன்.இசக்கி.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் விவகாரம் காவல் நிலையத்தின் கதவை தட்டியது. 

தூத்துக்குடியில் விமான பணிப்பெண் விபரீத முடிவு.... இளைஞனுடன் நெருக்கமாக !

தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தரவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் பொன்.இசக்கி தந்த புகாரில் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறாளே என கனிவுடன் உதவி செய்து வந்த சுரேஷ் சிறைக்கு சென்றதால் ஆத்திரமடைந்தார். 

லப் டப்… இதயம் எப்படி இயங்குகிறது?

சில மாதங்கள் கழித்து ஜாமினில் வெளிவந்த சுரேஷ். வாங்கிய பணத்தை தரவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்து போன பொன். இசக்கி தாய் மற்றும் கைக்குழந்தையுடன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார். 

அங்கே காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தான் எடுத்து வந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடல் மீது ஊற்றிக் கொண்டார். 

இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயல அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

அப்போது காவலர்கள் விசாரிக்க ஏற்கனவே தான் அளித்த புகாரில் சிறைக்கு சென்ற சுரேஷ் ஜாமினில் வெளிவந்து மீண்டும் தன்னை மிரட்டுவதாக கதறி அழுதார். 

பொன். இசக்கி கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர் பொன். இசக்கி அவரது தாய் மற்றும் குழந்தை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா? 

பொன். இசக்கியின் புகாரில் காவலர்கள் சுரேஷை அழைத்து மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவது புதிது அல்ல. 

2017ம் ஆண்டு நவம்பர் மாதம் கந்துவட்டி தொல்லையால் இசக்கி முத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் விமான பணிப்பெண் விபரீத முடிவு.... இளைஞனுடன் நெருக்கமாக !
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடக்கும் கந்து வட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கின. 

இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சனை என்றால் போலீசை நாடுகிறார்கள். 

கொரோனாவை எதிர்க்கும் ஆண்டிபாடி.. சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி !

போலீஸ் புகார் மீது தயக்கம் காட்டுவது போல் இருந்தால் நேராக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். 

இது போன்ற சம்பவங்கள் ஊடகம் மூலம் உடனே அரசின் கவனத்திற்கும் சென்று விடுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings