ஸ்பெயினில் எரிமலை நெருப்பிலும் உயிர் தப்பிய தேனீக்கள்... அதிசயம் !

0

பூமியின் உட்புறத்திலுள்ள வெப்பமான கற்குழம்பு, வெடித்து வெளியேறும் பகுதியை எரிமலை என்கிறோம். 

ஸ்பெயினில் எரிமலை நெருப்பிலும் உயிர் தப்பிய தேனீக்கள்... அதிசயம் !
வெப்பமான பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உண்டாகின்றன. உமிழப்படும் எரிமலைக் குழம்பு மாக்மா எனப்படும். 

எரிமலையை ஆங்கிலத்தில் வால்கனோ என்று அழைப்பர். இந்த சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. ரோமானிய அக்னி கடவுளுக்கு வால்கன் என்று பெயர். 

இதிலிருந்து தான் வால்கனோ என்ற சொல் வந்தது. எரிமலைகள் குறித்து ஆய்வு செய்யும் படிப்புக்கு வால்கனாலஜி என்று பெயர்.

நெருப்பின் நாக்குகளுக்கு முன்னாலே எதுவுமே தலை உயர்த்தி நிற்க முடியாது. எத்தனை பெரிய சாம்ராஜ்யத்தையும் சரிக்கும் ஆற்றல் நெருப்புக்கு உண்டு. 

ஆனால் எரிமலைக் குழம்பிலிருந்து தப்பித்திருக்கின்றன தேனீக்கள். ஸ்பெயினிலுள்ள கனரி தீவுகளில் நடைபெற்றுள்ள 

ஸ்பெயினில் எரிமலை நெருப்பிலும் உயிர் தப்பிய தேனீக்கள்... அதிசயம் !

இந்தச் சம்பவம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. கனரி தீவு எரிமலைகளுக்குப் பெயர் போனது. 

அங்குள்ள கும்ப்ரே வெய்ஜா எனும் எரிமலை கடந்த செப்டம்பர் மாதம் வெடித்தது. 

எரிமலையிலிருந்து வெடித்துக் கிளம்பிய தீக்குழம்பு அப்பகுதி முழுவதும் பரவியது. 

வாழைப்பழம் பீனட் பட்டர் செய்வது எப்படி?

இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தச் சூழலில் ஒருவர் தன் வீட்டில் பெட்டி வைத்து தேனீ வளர்த்து வந்திருக்கிறார். 

எரிமலை வெடித்ததால் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டுச் சென்று விட்டார். 

ஸ்பெயினில் எரிமலை நெருப்பிலும் உயிர் தப்பிய தேனீக்கள்... அதிசயம் !

சுமார் 50 நாள்களுக்குப் பிறகு தன் வீட்டைப் பார்ப்பதற்கு திரும்பி வந்தார். அப்போது தான் அந்த அதிசயத்தைக் கண்டார். 

இது குறித்து கெனரி தீவுகளில் தேனீ வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் அண்டனியோ க்யுசதா கூறுகையில், 

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

இந்தச் சம்பவம் தேனீக்களின் முக்கிய ஒரு பண்பான கடினத்தன்மையைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. 

இந்தத் தேனீக்கள் ப்ரபோலின் (propolin) எனப்படும் தேன் மெழுகைப் பயன்படுத்தி தங்கள் கூட்டை மொத்தமாக அடைத்துள்ளன.

கூட்டில் உள்ள தேனை உண்டே இத்தனை நாள்களும் உயிர் வாழ்ந்திருக்கின்றன என்கிறார்.

ஸ்பெயினில் எரிமலை நெருப்பிலும் உயிர் தப்பிய தேனீக்கள்... அதிசயம் !

அவர் வீட்டில் ஐந்து தேனீ பெட்டிகளில் வளர்த்த 10,000-க்கும் மேற்பட்ட தேனீக்கள் எரிமலைக் குழம்பு தணிந்த பிறகு உருவான பல அடுக்கு சாம்பலில் புதைந்திருந்தன. 

ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அவை அனைத்தும் உயிருடன் இருந்தன. 

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஆரஞ்சு சிக்கன் செய்வது எப்படி? 

அவற்றைச் சாம்பல் மூடியிருந்தாலும் உள்ளே காற்றோட்டம் இருந்ததும் அவை பிழைத்ததற்கு முக்கிய காரணமாம். 

பூகம்பம் வந்தாலும் கரப்பான்பூச்சி உயிர் வாழும் என்பார்கள். அதற்கு நிகராக இந்தக் கடினமான சூழலிலும் தேனீக்கள் உயிர் பிழைத்துள்ளன.

ஸ்பெயினில் எரிமலை நெருப்பிலும் உயிர் தப்பிய தேனீக்கள்... அதிசயம் !

அவை எரிமலைக் குழம்பின் வெப்பத்தை மட்டும் தாங்கவில்லை, நச்சுத்தன்மைமிக்க புகையையும் தாங்கி இருக்கின்றன. 

ஐந்து கூடுகளிலுள்ள தேனீக்கள் பிழைத்து இருந்தாலும் இவற்றின் அருகில் இருந்த இன்னொரு கூட்டிலிருந்த தேனீக்கள் இறந்து காணப்பட்டன. 

கொரோனா கோவிட் பற்றிய பலருக்கும் உள்ள சில சந்தேகங்கள் !

வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு அந்தத் தேனீக்கள் வலிமையற்று இருந்ததே இறந்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. Source

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings