குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு மானியம் சந்தொசத்தில் தம்பதிகள் குஷி !

0

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அந்நாட்டில், மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த 

குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு மானியம் சந்தொசத்தில் தம்பதிகள் குஷி !
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒற்றைக் குழந்தை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. 

பின்னர், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்ததால் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த மே மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இதில் கடந்த 10 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்திருப்பது தெரிய வந்தது. 

இனிமே தப்பு செய்யாதீங்க போலீஸ் உடம்பெல்லாம்.., புதிய டெக்னாலஜி !
இளம் வயதினர் குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்காலத்தில் பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என்பதால் 

இரண்டு குழந்தைகளுக்கு பதிலாக மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என கடந்த மே மாதம் சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மானியங்கள், வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் 
ATM மூலம் மக்களுக்கு பால் விநியோகம் !

மற்றும் தாய்மார்களை கவனித்துக் கொள்ள தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. 

இதனால் அந்நாட்டு தம்பதிகள் மகிழச்சி அடைந்து உள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings