நிலத்தின் மீது முதலீடு செய்தால் அதில் இயற்கை விவசாயம் செய்து அதன் மூலம் விளையும் பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் கிடைக்கும்.
பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து முறைகேடு செய்துள்ளதாகவும், தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியும்
பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?
பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஓய்வு பெற்ற விமானப் படை ஊழியர் என்று கூறப்படுகிறது.
இவர் ஏசிஐஆர் வெல்த் டெவலப்பர்ஸ் பார்ம் இந்தியா என்ற பெயரில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அன்பழகன், அவரது மனைவி ஜெர்லின் மற்றும் ரமேஷ், பிரபாகரன், ராஜசேரன், ஜோதிபாசு, ரதீஸ் உள்ளிட்டோர் அதன் இயக்குநர்களாக செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !
பல பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் முதலீடு செய்யக் கூறி பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.
தொடக்கத்தில் சிலருக்கு பணம் கொடுத்து வந்த அந்த நிறுவனம் தற்போது பணம் தராததால்,
தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்து பார்ம் இந்தியா நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து
தங்கள் பணத்தை பெற்றுத் தரும்படி தஞ்சாவூர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த, வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் நாகராஜ் கூரியதாவது.
ஐ.ஏ.எஸ் பணியில் மனைவியை அமர வைத்த சூப்பர் கணவர் !
பல பகுதிகளில் நிலத்தின் மீது முதலீடு என்று கூறி பொதுமக்களிடம் 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.
பொதுமக்கள் கொடுக்கும் பணத்தினை கொண்டு நிலத்தினை வாங்கி அதில் இயற்கை விவசாயம் செய்து,
அதில் விளையும் பொருள்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வோம் என்றும்,
அதில் கிடைக்க கூடிய லாப பணம் முதலீடு செய்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும்,
அதிகாலையில் எழ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பின்னர் ஐந்து ஆண்டுகள் முடிவில் அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து திருப்பித்தரப்படும் என ஆசை காட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பணம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு ரசீதும் கொடுத்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு பணம் முதலீடு செய்தவர்களில் சிலருக்கு மட்டும் முதிர்வுத் தொகை கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் எந்த ஒரு நபருக்கும் பணம் தரவில்லை. பொறுத்திருந்து பார்த்த பலரும் அவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டு வந்தனர்.
இதோ தருகிறோம் எனக் கூறியே கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர்.
பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?
எங்கள் பகுதியில் படித்த இளைஞர்களை முகவர்களாக நியமனம் செய்து பணம் வசூலித்துள்ளனர்.
அவர்கள் சொன்னதை உண்மை என நம்பி விவசாயிகள் உட்பட பலரும் பணம் முதலீடு செய்துள்ளனர்.
பணம் தராததைத் தொடர்ந்தே அவர்கள் ஏமாற்றி யுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழம் கோதுமை தோசை செய்வது எப்படி?
எனவே, இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அன்பழகன், அவர் மனைவி ஜெர்லின் மற்றும் இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இது தொடர்பாக சுமார் 300 பேருடன் சென்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கார்லிக் புரோட்டா செய்வது எப்படி?
எங்கள் பணம் திருப்பி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் அந்த நிறுவனம் மேற்கொண்டு யாரையும் ஏமாற்றாமல்
தடுக்கும் வகையில் அரசு மற்றும் போலீஸ் விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
Thanks for Your Comments