ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட மிளகாய் தூள் பாக்கெட்டை பிரதேச ஆய்வகத்தில் ஆய்வு செய்த போது சில பூச்சிக் கொல்லிகள் (pesticides) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த பாக்கெட் விற்பனை திரிச்சூரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருச்சூர் உதவி ஆணையாளர் ஜெனார்தன் தெரிவித்துள்ளார்.
இது செய்தி… 2019 செப்டம்பர் 6
உண்மை என்ன?
எந்த ஒரு மசாலா நிறுவனமும் பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மசாலா தயாரிப்பதில்லை.
மிளகாய், மல்லி, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நமது விவசாயிகளிடமிருந்தே வாங்கப்படுகின்றன.
பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது நம் நாட்டு விவசாய முறையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட நிலையில் அதற்கான முழு பழியையும்
பயிரிடும் விவசாயிகளையும் நடுத்தெருவிற்கு கொண்டு வரக்கூடிய கார்ப்ரேரேட் லாபி அரசியலில் நாமும் தெரியாமல் பகடைக்காயாகி விடக் கூடாது.
அதிலும் குறிப்பாக கேரளாவில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் ஒரு தனித்த வர்த்தக லாபியை கொண்டிருக்கும்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்டுகளில் மலையாளிகளின் கைதான் இன்னும் ஓங்கியே இருக்கிறது.
லூலூ, மனாமா, கே.எம்.டிரேடிங் உள்ளிட்ட கேரளாயிஸ்ட்டுகளை தாண்டி அரபு நாடுகளில் யாரும் பெரிதாக வர்த்தகம் செய்து விட முடியாது.
அந்தளவுக்கு வர்த்தகத்தை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். இந்திய மசாலா பொருட்களிள் கூட கேரளா பிராண்டுகள் தான் பரவலாக கிடைக்கும்.
சக்தி மசாலா, ஆச்சி மசாலா போன்ற நம்ம ஊர் மசாலாக்கள், நம்ம ஊர் ஊருகாய்கள் போன்றவவை பெரிதாக கிடைக்காது.
தேடிப்போயோ அல்லது அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டோ அதை வாங்குவது போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.
நம்ம ஊர் ஸ்டைல் சாம்பார், ரசப்பொடிகள் கேரள தயாரிப்பான 'மலபார்' பிராண்டுகளில் வாங்கி பயன்படுத்தினாலும் அது நம்மவர்களுக்கு திருப்தியை தருவதில்லை.
அதனால் சமீபமாக ஓரிரு ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் தேவையால் நம்ம ஊர் ஆச்சி மசாலா போன்றவைகள் இங்கு அதிகம் கிடைத்தன.
மலபார் பிராண்டு மசாலாக்களின் விற்பனையில் இது சரிவை ஏற்படுத்தியது.
தமிழகத்தை விட கேரளாவில் விவசாயம் மிக குறைவு. அங்குள்ள மசாலா கம்பெனிகளுக்கான மூலப்பொருட்களை
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்தான் வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து தான் அதிகம் வாங்குகிறார்கள்.
ஆனால் தடை விதித்தது மட்டும் தமிழகத்தை சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு என்பதில் தான் கார்ப்பரேட் மூளை உள்ளது.
சில கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக பரப்பிய செய்தி இது.
குறிப்பு
வாட்ஸ்அப் செய்திகள் பல வருடங்கள் கழித்து மீண்டும் இப்போதும் … பகிரபடுகிறது. இதுவும் அது போலவே … நாம் தான் உண்மை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
Thanks for Your Comments