திருமணத்தில் எஞ்சிய உணவை ஏழைகளுக்கு விநியோகித்த சம்பவம் !

0

மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் யாரையும் எதிர் பார்க்காமல் தானே முன் வந்து 

திருமணத்தில் எஞ்சிய உணவை ஏழைகளுக்கு விநியோகித்த சம்பவம் !
திருமணத்தில் எஞ்சிய உணவை ஏழைகளுக்கு விநியோகித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணங்கள் என்றால் எல்லோருக்கும் குஷிதான். புதிய ஆடைகள், பாடல்கள், ஒரே இடத்தில் கூடும் குடும்ப உறுப்பினர்கள், வித விதமான உணவுகள் என கலைகட்டும். 

ஒவ்வொரு திருமணமும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் அமைகிறது. 

ஆனால் பல்வேறு திருமணங்களில் டன் கணக்கில் உணவுகள் வீணாவது தவிர்க்க முடியாத விஷயமாக இருந்து வருகிறது.

உணவு இது தான் திருமண வீட்டில் பிரதானமான விஷயமாக இருக்கிறது. 

நாடாப்புழு உருவாவதற்கான காரணமும் அதன் அறிகுறியும் !

இப்படியாக திருமண வீடுகளில் உணவுகள் சில நேரம் அதிகமாக தயார் செய்யப்பட்டு குறைவான விருந்தினர்களே வந்தால் உணவு மீதமாகி விடும். 

இந்த உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் 3 வேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் இப்படியாக உணவு வீணாகும் நிலையும் ஆங்காங்கே இருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ரனாகத் ரயில் நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 1 மணிக்கு நிலஞ்சன் மோந்தல் என்ற பெண் 
கோடையின் கொடை நுங்கு – பதநிர் !

உணவு அடங்கிய பாத்திரங்களை தன் முன் வைத்துக் கொண்டு ஒரு பேப்பர் பிளேட்டில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தார். 

அவரிடம் சிலர் விசாரித்த போது அவரது சகோதரர் திருமண ரிசப்ஷன் நிகழ்வில் தயாரிக்கப்பட்ட 

உணவு மீதம் ஆனதால் தான் அதை பசியில் வாடும் ஏழை மக்களுக்கு தானமாக வழங்கியதாக கூறியுள்ளார். 

சத்துக் குறைபாடுகளால் சில சங்கடங்கள் !
பலர் அவரிடம் வரிசையாக வந்து உணவை பெற்று சென்றனர்.இவர் உணவு வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings