சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம் அதாவது, நான்கு நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் அவசியம் என்கிறது சித்த மருத்துவம்.
ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது.
ஆனால், காலமாற்றத்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமே கிட்டத்தட்ட இல்லாமல் போய் விட்டது.
அதிலும் தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே நம்மில் பலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம்.
உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?
பழக்கமே இல்லாமல் திடீரென்று தீபாவளிக்கு எண்ணெய்க் குளியலை எடுக்கையில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளும் சிலருக்கு வந்து விடுகின்றன.
அதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீபாவளியன்று எண்ணெய்க் குளியலை எடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
எண்ணெய்க் குளியல் குறித்து அவர்தரும் மிக முக்கியத் தகவல்கள் இதோ உங்களுக்காக...
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் எது?
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து முக்கூட்டு எண்ணெய்யாகவும் பயன்படுத்தலாம்.
தீபாவளியன்று காலையில் எத்தனை மணிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது?
காலையில் 5 மணிவாக்கில் எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. ஆனால், எண்ணெய் தேய்த்துக் குளித்து எனக்குப் பழக்கமில்லை.
கிரீன் வெஜிடபிள் ரைஸ் செய்வது எப்படி?
அதனால் சீக்கிரம் குளித்தால் சளி பிடித்து விடுமோ என்ற கவலை இருப்பின் தீபாவளியன்று
சூரியன் லேசாக எட்டிப் பார்க்கும் பொழுதில் அதாவது, காலையில் 5.30 மணி அளவில் குளிக்கலாம்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தடவி (சொத சொதவென எண்ணெய் தடவத் தேவையில்லை.
அரை மணிநேரம் வெயிலில் இருந்து விட்டு பின்னர் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல் ஆகும்.
தீபாவளியன்று இந்த முறையையே பின்பற்றுங்கள். ஆனால், நடைமுறையில் எனக்கு இது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால்
வெள்ளையை விட கருப்பு அரிசியே நல்லது ஏன் தெரியுமா?
உச்சந்தலை, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள், முதுகின் பின்புறம், கழுத்தின் பின்புறம், தோள்பட்டை, முட்டி போன்ற
உடலின் மூட்டு இணைப்புகளில் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் ஊற விட்டுப் பின்னர் குளிக்கலாம்.
இது ஓரளவுக்குப் பலன் கொடுக்கும் என்றாலும் உடல் முழுக்க எண்ணெய் தடவிக் குளிப்பதே சிறந்தது.
அதே போல சிலர் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பச்சைத் தண்ணீரில் குளித்து விடுவார்கள்.
எனவே, எப்போது எண்ணெய் தேய்த்துக் கொண்டாலும் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும்.
எண்ணெய் பெறின், வெந்நீரில் குளிப்போம் என்பதைத் தான் சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது.
சிலர் எண்ணெய் நன்றாக ஊற வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் நாள் இரவே தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு தூங்கி விட்டு மறுநாள் குளிப்பார்கள்.
கொழுப்பை குறைக்கும் முக்கிய இந்திய உணவுகள் !
இப்படிச் செய்தால் காய்ச்சல் வருவதோடு, குளிர்ச்சி அதிகமாவதால் சில நேரங்களில் வலிப்பும் வந்து விடும் என்பதால் இச்செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது அன்று மட்டும் உடல் சற்று சோர்வாக இருப்பது போலத் தெரியும்.
தீபாவளி அன்று தான் நான் புதிதாக எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்பவர்கள்
சளி பிடிப்பதைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை விஷயங்களை மேற்கொள்ளலாம்.
அதாவது, எண்ணெயில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை சுக்குத்தூள், ஒரு பூண்டுப் பல்,
ஒரு மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து லேசாகச் சூடாக்கி பின்னர் அதைத் தேய்த்துக் கொள்ளலாம்.
அப்படி இல்லை யென்றால் சிறிது மிளகுத் தூளை உச்சந்தலையில் தேய்த்து பின்னர் அதன் மேல் எண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது எண்ணெயைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,
மைதா வெண்மை நிறமாக இருக்க காரணம் !
உடலுக்குத் தேய்க்கும் எண்ணெய் என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் பொதுவாகத் தலையில் அழுக்கு இருக்கும் என்பதால் தலையில் தேய்த்த எண்ணெயையே
மற்ற உடல் பாகங்களுக்கும் தேய்த்தால் தலையில் உள்ள அழுக்கு மற்ற உடல் பாகங்களுக்குப் போய் விட வாய்ப்பிருக்கிறது.
சீயக்காயே சிறந்தது!
உடலில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பை எடுக்கவும் கூட சீயக்காய் மற்றும் கடலை மாவுக் கலவையைப் பயன்படுத்துங்கள் அல்லது உடலில் நலங்கு மாவு தேய்த்தும் குளிக்கலாம்.
இது போன்ற பொடிகளைத் தேய்த்துக் குளிக்கும் போது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பு, அழுக்குகள் போன்றவை நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்.
ஹலால் உணவு என்றால் என்ன?
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் வளர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம்
இத்தனை நாள்கள் இல்லை யென்றால் தீபாவளியன்று புதிதாக இந்தப் பழக்கத்தை ஆரம்பிப்பதைத் தவிர்க்கலாம்.
ஏனென்றால் இது மழைக்காலம் என்பதால் புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது அது சட்டென்று சிலருக்கு சளி அல்லது காய்ச்சலை உண்டாகி விடும்.
எனவே, உச்சந்தலையில் மட்டும் சிறிது எண்ணெயை வைத்துக் குளிப்பது நல்லது.
வெயில் காலம் வந்த பிறகு, முழுமையான எண்ணெய்க் குளியலை கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
தலையில் சேர்ந்திருக்கும் நீரை சாம்பிராணிப் புகை எடுத்து விடும்.
ஆனால், இப்போது கடைகளில் சுத்தமான சாம்பிராணி கிடைப்பது அரிதாகி விட்டதால் மூலிகை தூபப் பொடியை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
தும்பைப்பூ இலை, துளசி இலை, அரச இலை போன்றவற்றைச் சேகரித்து காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !
பின்னர் சிறிதளவு கட்டிச் சாம்பிராணியுடன் இந்த மூலிகை தூபப் பொடியைச் சேர்த்துப் புகை போட்டுத் தலைக்குக் காட்டலாம்.
ஆனால், வீசிங் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நலம்.
புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது அன்று மட்டும் உடல் சற்று சோர்வாக இருப்பது போலத் தெரியும்.
எண்ணெய்க் குளியலைத் தொடரத் தொடர இந்தச் சோர்வு நீங்கி விடும்.
உடல் குளுமையாவதோடு, புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்பதால் நீங்கள் இந்தப் பழக்கத்தை அதன் பின்னர் நிறுத்தவே மாட்டீர்கள்.
எனவே, இத்தனை நாள்கள் நீங்கள் எண்ணெய்க் குளியலை எடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இந்தத் தீபாவளியை ஒரு சாக்காக வைத்து இதைத் தொடங்குங்கள்.
குறிப்பாக, வீட்டின் பெரியவர்கள் உங்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், உங்கள் பிள்ளைகள்,
உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?
பேரப்பிள்ளைகள் என்று அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த நல்ல பழக்கத்தைக் கொண்டு சேருங்கள்.
எண்ணெய்க் குளியல் எடுத்தால் என்ன சாப்பிடலாம்?
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடம்பு குளிர்ந்திருக்கும் என்பதால் செரிமானத்தைத் தாமதமாக்கும் ஹெவியான உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று அசைவ உணவுகளைக் கூடுமானவரை சாப்பிட வேண்டாம்.
உணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு !
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடலின் வெப்பம் கண் வழியே வெளியேறுவதால் கண் எரிச்சல் இருக்கும்.
குறிப்பாகத் தூக்கம் வரும். தூக்கம் வருகிறதே என்று மதியம் இரண்டு மூன்று மணி நேரம் தூங்கி விட்டால் உடலின் வெப்பம் அதிகமாவதோடு உடல் சோர்வும் அதிகமாகும்.
எனவே, தூக்கம் வருவது போல இருந்தால் நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து விடுவது நல்லது.
ஆனால், எண்ணெய்யை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தேய்க்கும் போது இதன் மூலம் உடலின் கழிவுகளை நீக்கக்கூடிய நிணநீரின் செயல்பாடு தூண்டப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னோர்கள் அதற்கு வயாகராவாக பயன்படுத்திய உணவு தெரியுமா?
எனவே, நன்மைகளின் சுரங்கமாக இருக்கும் எண்ணெய்க் குளியலை வரும் தீபாவளியி லிருந்தாவது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
Thanks for Your Comments