தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி போன்ற பகுதிகளில் மக்னா யானை மிகவும் பிரபலம். உலகில் யானைகளில் இரண்டே வகைகள் தான் உள்ளது.
ஒன்று ஆசிய யானை மற்றொன்று ஆப்பிரிக்க யானை.அது என்ன மக்னா யானை? அந்த யானைகளுக்கு ஏன் அந்த பெயர் கிடைத்தது என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்த யானைகள் காணப்படும்.
அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
மக்னா வகை யானைகளின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் மிக அதிகம்.
மக்னா யானை என்றால் மனிதர்களில் மூன்றாம் பாலித்தனவர் இருப்பது போல் யானைகளிலும் மக்னா மூன்றாம் பாலினம் என தவறான புரிதல் மக்கள் மனதில் உள்ளது.
இதற்கு காரணம் காட்டு வாழ் மக்கள் தான். தந்தம் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என அழைப்பார்கள்.
மரமணு குறைப்பாட்டால் தந்தம் வளராமல் பிறக்கும் யானைகள், அதுவும் ஆசிய ஆண் யானைகள் மக்னா யானைகள் என அழைக்கப்படுகின்றன.
பெண் யானைகள் பொதுவாக தந்தம் உள்ள ஆண் யானைகளையே விரும்பும். தந்தங்கள் இல்லாத யானை கூட்டத்தில் தாக்குப் பிடிக்காது.
தந்தம் என்பது வலிமையை குறிக்கிறது. கூட்டத்தில் சேர்ந்து வாழ முடியாததால் இந்த யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்.
மூர்க்கத் தனமாக மனிதர்களையும் விலங்குகளையும் தாக்கும் குணம் இந்த மக்னாக்களுக்கு உண்டு.
தந்தங்கள் என்பது முன்வெட்டு பற்கள் என சொல்லப்பட்டாலும் இவை தான் எதிரிகளிடம் எதிர்த்து நிற்கும் தைரியத்தை யானைகளுக்கு கொடுக்கிறது.
மக்னா ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லா விட்டாலும் அதை ஈடு செய்யக் கூடிய அளவிற்கு அதன் உடல் அமைப்பு வலிமையானதாக இருக்கும்.
பெண் யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய ஆண் யானைகள் போட்டியிடும் போது
மற்ற யானைகளுடன் சண்டையிட்டு தனது பலத்தை நிரூபிக்கும் யானைகளையே பெண் யானைகள் விரும்பும்.
இது போல் போட்டியில் வெற்றி பெற தந்தம் மிக முக்கியமானதாகும். அப்படி தந்தம் இல்லாத யானைகள் ஆண்மையற்றவை என கூறுவது முட்டாள் தனமாகும்.
தந்தமில்லாத ஒரு காரணத்தால் அவைகளை பெண் யானைகளுக்கு பிடிக்காது அவ்வளவு தான்!.
இவை முகாம்களில் வைத்து வளர்த்தால் மனிதர்களுடன் இயல்பாக பழகும் என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்.
மக்னா தான் பிரம்மாண்டம் !
தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும்.
வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும்.
மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும்.
இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல் வலிமை கூடிய தான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.
யானையின் தந்தங்கள் ஏன் எதற்கு ?
ஒரு யானையின் தந்தங்கள் என்பது அதன் முன் வெட்டுப் பற்களே. ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
மீதமுள்ள ஒரு பங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்கு உள்ளாக பொருந்தி இருக்கும்.
ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே நீண்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும்.
ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக
நடந்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.
Thanks for Your Comments