மகனின் திருமணத்துக்காக முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கும் தாய் !

0

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (50). 

மகனின் திருமணத்துக்காக முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கும் தாய் !
இவர் தன் குடும்ப கஷ்டத்திற்காக இன்றைக்கும் கிராமத்தில் இட்லி விற்று வருகிறார்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வசதிக்கேற்ப பிடித்ததை ஆர்டர் செய்யவும், பிடிக்காததை டெலிட் செய்யவும் என நவீன உலகமாக மாறி விட்டது. 

ஆனால் இன்றும் இட்லியோ இட்லி என்ற ஒலி சு.ஒகையூர் கிராமத்தில் இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

மனிதன் சம்பாதிப்பதே நல்ல உணவு சாப்பிடுவதற்காக தான் போராடி வருகிறான், எவ்வளவு செலவு பண்ணினாலும் பரவாயில்ல நல்ல உணவு சாப்பிட வேண்டும். 

அதற்கு ஒரு நல்ல ஹோட்டல் சொல்லு என நாம் அடிக்கடி இந்த வார்த்தைகள் கேட்பது வாழ்வில் இன்றியமையாத வசனமாக மாறி விட்டது. 

இருந்த போதிலும் ஆர்டர் செய்த ஐந்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பார்சல் நிற்கும் இந்த 2k kits காலத்தில் தான்  இட்லியோ இட்லி என கிராமத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வடகிழக்கு பருவ மழை பெய்த போதிலும் ஆவி பறக்க சூடான இட்லியும், இரண்டு வகை சட்னியும் காலை 7:00 மணிக்கே ரெடி 

பத்து ரூபாய்க்கு இரண்டு இட்லின்னா கூட, அதற்கு சட்னி-சாம்பார் உண்டு ஆனாலும், நாலு இட்லி வாங்கினால் ஒரு இட்லி இலவசம். 

அது தான் நமக்கு சந்தோசம், மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இட்லியை 

அன்பால் கொடுக்கும் இந்த அம்மாவின் இட்லியை  சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்வது தான் வேலை, வேற என்ன வேலை.

தன் பணியை காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை பம்பரமாய் சுழலும் அலமேலு அம்மாவுக்கும் ஆழ்ந்த மனக்கஷ்டங்கள் இருக்கு, 

அலமேலு அம்மாவின் மூத்த மகள் கணவன் உயிரிழந்ததால் பேரக் குழந்தைகளுக்காகவும் தன் ஊனமுற்ற இளைய மகனுக்காவும் 

50 வயதிலும் இட்லி விற்று போராடி கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம். 

தன் மகன் ஆறுமுகம் மாற்றுத் திறனாளி, ஆசிரியர் பயிற்சி முடித்து இருந்தாலும் வேலை கிடைக்கவில்லை. 

வேலை இல்லாததால், திருமணம் நடக்கவில்லை. வேறு வருமானமே இல்லாத நிலையில் இட்லி விற்று  குடும்பம் நடத்துகிறோம் என்று சொல்லும் அலமேலு அம்மா, 

மகனின் திருமணத்துக்காக முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கும் தாய் !

தமிழக முதல்வர் அவனது படிப்புக்கு ஏற்ற வேலை கொடுத்தால், திருமணம் செய்து வைப்பேன், வாழ்க்கையும் கிடைக்கும் என்று கண்கலங்க கோரிக்கை விடுக்கிறார்.

அலமேலு அம்மாவின் கோரிக்கை நிறைவேறுமா? தமிழக முதல்வர் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

மாற்றுத் திறனாளி ஆறுமுகத்திற்கு, விடியல் ஆட்சியால் விடியல் வாழ்வு கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings