Omicron தொற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

0

உலக சுகாதார அமைப்பினால் ஓமிக்ரோன் என பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

Omicron தொற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
இந்த புதிய வகை ஓமிக்ரோன் வைரஸானது தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதே வேளை, இதை தொடர் ஆராய்ச்சி மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்பதால் உலக சுகாதார அமைப்பு (world Health Organization) 

மற்றும் பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி (Angelique Coetzee) தெரிவித்திருப்பதாவது:

கொரோனாவை விட மோசமான நோய்கள்... இதில் ஒன்று வந்தாலும் நரகம் தான் ! 

இப்போதைய சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், 

ஏனெனில் இளம் வயது மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது. 

தற்போது ஓமிக்ரோன் வைரஸ் ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளோம். 

இனி வரும் காலங்களில் இதன் வீரீயம் பற்றி தெரிய வரும். வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது. 

Omicron (அறிகுறிகள்) வைரஸ் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல்வலி மற்றும் வலியாக இருக்கும். 

பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். 

கொரோனாவில் இருந்து பாதுகாக்க டபுள் மாஸ்கிங் அணிவது அவசியமான ஒன்றா?

வாசனையின்மை / சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. 

Omicron பற்றி பயம் கொள்ள தேவையில்லை ஏஞ்சலிக் கோட்ஸி (Angelique Coetzee) தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings