தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் படிப்படியாக உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கும் பரவியுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும்,
குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்த பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் முதல் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புடைய நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கான பிரெட் பீட்சா செய்வது எப்படி?
ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி அரேபியா திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாகவும்
பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments