வேலூரில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை 6 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி வந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
மலை கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் போது முறையான சிகிச்சை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
பிரசவம் பார்க்க உரிய நேரத்தில் மருத்துவர்களிடம் செல்ல முடியாத சுழல் நிலவுகின்றது.
இதன் காரணமாக பிரசவத்தின் போது வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளை உறவினர்களே
சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவு டோலிகட்டி தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பெங்களூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
வேலூர் மாவட்டம் சடையன் கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித் - அனிதா தம்பதியினர்.
இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றனர். அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார்.
முதல் குழந்தையை எதிர்பார்த்து இந்த தம்பதியினர் காத்திருந்தனர். இந்நிலையில் அனிதாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இருசக்கர வாகனத்தை கூட இயக்க முடியாத சூழல் இருந்துள்ளது.
சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி?
பிரசவ வலியால் அனிதா துடிக்க துடிக்க உறவினர்கள் டோலியின் மூலம் தோளில் சுமர்ந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூக்கி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து கலங்கமேடு மலையடிவாரத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்து வைக்கப்பட்டது.
மலையடிவாரத்துக்கு வந்ததும் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மலச்சிக்கல் தீர கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
அங்கு பிரசவம் முடிந்த நிலையில் அனிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போல் நிகழ்வுகள் காலங்காலமாக நடப்பதால் சரியான சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thanks for Your Comments