கோடைக்காலம் தொடங்க இன்னும் சில நாள்கள் இருந்தாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது.
ஆக, நீர்ப்பற்றாக்குறை காரணமாக சரும நோயில் தொடங்கி சிறுநீரகப் பிரச்னை, ஆசனவாய் எரிச்சல், மூலம், மலச்சிக்கல் எனப் பிரச்னைகள் அணிவகுக்கத் தொடங்கி விட்டன.
எந்த வயதில் பிரா அணிய வேண்டும் !
அவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் விதமாக எளிய மருத்துவ ஆலோசனை தருகிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.
கோடைக்காலம் என்பதால் அதிக தாகம் எடுக்கும். எனவே போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.
வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் ஏ.சி நிறைந்திருக்கிறது. ஏ.சியில் இருக்கும் நேரத்தில் தண்ணீர் தாகம் எடுக்காது. அதனால், பலர் தண்ணீர் அருந்த மாட்டார்கள்.
இது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இவை தவிர, சீசனில் கிடைக்கும் பழங்களையும் சாப்பிட வேண்டும். விலை மலிவாகக் கிடைக்கும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களைச் சாப்பிட்டாலே போதும்.
காது குத்துவது கண்களுக்கு பாதுகாப்பா?
எலுமிச்சை, ஆரஞ்சு, புதினா ஜூஸும் நல்லது. இவற்றை ஐஸ் சேர்க்காமல் அவற்றின் தனித்துவத்துடன் அருந்த வேண்டும்.
பொட்டாசியம் சத்தும் நிறைந்திருப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் நீங்கும்.
பெண்களின் கண்களில் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள் அறிந்து கொள்ள !
நார்ச்சத்து மற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.
அதே போல் வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் போன்றவை கோடைக் காலத்தில் கிடைக்கக் கூடியவை என்பதால் அவற்றையும் தாராளமாகச் சாப்பிடலாம்.
வெள்ளரி செரிமானத்துக்கு உதவுவதுடன் மலமிளக்கியாகவும் செயல்படும்.
பித்தத்தைத் தணித்து குடலுக்குக் குளிர்ச்சியூட்டும்; சிறுநீரகக் கோளாற்றைச் சரி செய்யும்.
வெயிலில் அலைவதால் ஏற்படும் நீரிழப்பு, தலைச்சுற்றலைத் தடுப்பதுடன், சருமக் கோளாறுகள் வராமலும் தடுக்கும்.
வீட்டில் ஆண்கள் ஓதுக்கப்படுகிறார்களா?
கோடைக் காலத்தில் மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று கிர்ணிப்பழம். இதை முலாம்பழம் என்றும் சொல்வார்கள்.
இதில் நீரின் அளவு அதிகமிருப்பதால் சாறாக்கி அருந்தும் போது உடல் குளிர்ச்சியடையும்; உடலில் நீரின் அளவைச் சமன் செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றும்.
அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
வறண்ட சருமம் உள்ளவர்கள், முகப்பருவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சைச் சாற்றைத் தடவி வருவது தீர்வு தரும்.
ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை அப்படியே சாப்பிடலாம்; ஜூஸ் ஆக்கியும் அருந்தலாம்.
இது உடலில் உள்ள தேவையற்ற அசுத்தநீரை சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதனால் சருமச் சுருக்கங்கள் நீங்கிப் பளபளப்பாகும்.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவை எல்லாக் காலத்திலும் வரக்கூடியவையே.
ஆனாலும், கோடைக் காலத்தில் நாம் அருந்தும் நீரினாலும், உணவினாலும் வயிற்றுக் கோளாறுகள் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் புதினா ஜூஸ் கைகொடுக்கும்.
கைப்பிடி அளவு புதினா இலைகளுடன் இஞ்சி சிறு துண்டு சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
பெண்கள் தாய்மை அடைய விடாமல் தடுக்கிறான் !
புதினா ஜூஸ் அருந்துவது வாந்தி, வயிற்றுப் போக்கை நிறுத்தும். புதினாவைத் துவையல், சட்னி
எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொண்டாலும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
கோடைக் காலங்களில் சிறுநீரகக் குழாய், பிறப்புறுப்பு போன்ற இடங்களில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றைச் சரி செய்ய கரும்புச் சாறு உதவும்.
இளநீர், பதநீர், நுங்கு போன்றவையும் உடல் சூட்டைத் தணிக்கும். மோருடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லிக் கீரை, இஞ்சி சேர்த்து அருந்துவதும் கோடைக்கு இதமளிக்கும்.
சமையலுக்குப் பயன்படுத்தும் புளி கைப்பிடி அளவு எடுத்து நீரில் ஊற வைத்துக் கரைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்தால் கிடைப்பது பானகம்.
அதை பகல் வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் சரியாகும்.
இரவில் நிம்மதியாக உறக்கம் வரும். கற்றாழைச் சாறு, நன்னாரி சர்பத் அருந்துவது
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் செய்வது எப்படி?
அதிக சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுதரும்.
மல்லித் தழையுடன் மிளகாய், சின்னவெங்காயம், புளி, பூண்டு, உப்பு சேர்த்து துவையல், சட்னி செய்து சாப்பிட்டால் சரும நோய்களிலிருந்து மீளலாம்.
மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கைக்குத்தல் அரிசி !
வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற
நீர்க் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்' என்கிறார் எட்வர்டு பெரியநாயகம்.
Thanks for Your Comments