ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனிக்க !

0

சமீப காலமாக உடற்பயிற்சி இல்லாமல், பக்க விளைவுகள் அதிகம் இல்லாமல் உடல் எடையை எளிதில் குறைக்க விரும்புபவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பது ஆப்பிள் சீடர் வினிகர். 

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனிக்க !
இது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், முகப்பரு, காயம் போன்ற தொல்லைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது. 

அதே சமயம் இதை சரியாக எடுத்துக் கொள்ளா விட்டால் கட்டாயம் பக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் 

நிபுணர்கள். ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவைக் குறித்தும் விளக்குகின்றனர்.

உணவுக்குப்பின் ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை !

சாப்பிட்ட உடனேயே இந்த வினிகரை குடித்தால் உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம் என சிலர் நினைப்பார்கள். ஆனால், இது உணவு செரிப்பதை தாமதப் படுத்துகிறது. 

வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்துவதுடன், உணவு செரிக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. 

உணவுக்குப் பிறகு குடிக்க விரும்புபவர்கள் சாப்பிட்டு முடித்து 20 நிமிடங்கள் கழித்தே குடிக்க வேண்டும்.

முகர்ந்து பார்ப்பதை தவிர்க்கவும்

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனிக்க !

சிலர் எந்த பொருளை வாங்கினாலும் அதன் வாசனையை நன்கு முகர்ந்து பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். 

ஆப்பிள் சீடர் வினிகரை முகர்ந்து பார்க்கும் போது அதன் நெடியானது நுரையீரலை பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது நுரையீரலில் ஒரு வித அலர்ஜி உணர்வை ஏற்படுத்தும்.

கலக்க மறவாதீர்கள்!

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனிக்க !

ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடித்தால் அது பற்களின் எனாமலை அரித்து சேதப்படுத்தி விடும். அதே போல் வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் வரும் என்று நினைப்போம். 

ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்காமல், மூன்று பங்கு நீரில் ஒரு பங்கு வினிகர் கலந்து குடிப்பதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

அதிக அளவில் குடிக்கிறீர்களா?

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனிக்க !

உடலுக்கு அதிக நன்மை பயக்கிறது என்று எண்ணி சிலர் அளவுக்கு அதிகமாக குடித்து விடுவார்கள். இது கட்டாயம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறக்க வேண்டாம். 

தாங்க முடியாத வயிறு எரிச்சலை உண்டாக்குவதுடன், பலவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றனர். 

ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தூக்கத்திற்கு முன்பு குடித்தல்

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை !

படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது என்பது நல்லதல்ல. 

படுப்பதற்கு முன்பு இதை குடித்தால் உணவுக் குழாயில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பு குடிப்பதே சிறந்தது.

சருமத்தில் நேரடியாக தடவுதல்

ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதற்கு முன்பு கவனிக்க !
ஆப்பிள் சீடர் வினிகரை சருமத்தின் மீது நேரடியாக தடவுவது கண்டிப்பாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

சரும வீக்கம் மற்றும் தொற்றுகளின் மீது பயன்படுத்த நினைப்பவர்கள் ஏதாவது ஒன்றுடன் கலந்து பின்னர் பயன்படுத்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings