ஹெபடைடிஸ் ஏ என்றால் என்ன? #HepatitisA

0

ஹெபடைடிஸ் ஏ (HepatitisA) என்பது என்பது கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரல் நோய்த்தொற்று ஆகும். 

ஹெபடைடிஸ் ஏ என்றால் என்ன? #HepatitisA
இந்நோய் பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படுவதோடு எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. 

எனினும், வயதுடன் சேர்ந்து இந்நோயின் தீவிரமும் அதிகரிக்கின்றது. அதன் தீவிரம் ஒரு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை நீடிக்கும். லேசானது முதல் கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படுத்தலாம். 

உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் ஹெபடைடிஸ் ஏ (HepatitisA) நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. 

இந்த கல்லீரல் தொற்று பொதுவாக குழந்தைகள் மத்தியில் லேசான மற்றும் நடுத்தர அளவிலான பிரச்சினையாக இருந்து வருகிறது. 

அது சில சமயங்களில் மிகத் தீவிரமான பிரச்சினையாகவும் உருவெடுக்கிறது. 

கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?

பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கும் மேல் மிகக் கடுமையான தீவிர அறிகுறிகள் தென்பட்ட பிறகே காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

ஹெபடைடிஸ் A (HepatitisA) தொற்று நாள்பட்ட தொற்றுகளுக்குக் காரணமாக அமைவதில்லை. ஆனால் மிக தீவிர நிலைக்குக் கொண்டு செல்லும். 

தடுக்கப்படாமல் விட்டால் இது கடுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்படுத்தும். அரிதாக மரணத்தைக் கூட ஏற்படுத்தி விடும். 

உலகெங்கிலும், குறிப்பாக மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று அதிகமாக ஏற்படுகிறது. 

பாம்பு கடி பற்றிய சில தகவல்கள் !

குழந்தை பருவத்தில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படமால் போனாலும் வளரிளம் பருவம் மற்றும் வயது வந்தபின் இதன் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. 

எனவே, அதிக சுகாதாரமான பகுதிகளில் வாழ்வதால் குழந்தைப் பருவத்தில் ஹெபடைடிஸ் ஏ (HepatitisA) தொற்று நோயைத் தவிர்க்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings