சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும் போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மீன் உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
கடலுக்குள் நீர்வீழ்ச்சி இந்திய பெருங்கடலில் ஆபூர்வ காட்சி !
மீனில் புரதச் சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.
ஆற்று மீன் மற்றும் கடல் மீன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும்.
கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும் அதிகம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது.
கோக் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !
ஆனால், ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை. குறிப்பாகக் கடல் மீன்களில் பெரிய மீன்களை விடச் சிறிய மீன்களில்தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது.
உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது. இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்கிறது.
மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.
முட்டைகோஸ் தடுக்கும் குடல் புற்று நோய்?
ஆனால் மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும்,
அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் பெரிய மீன்களில் உள்ளவற்றைக் காட்டிலும் இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.
இறைச்சி உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது என்பதால் அதைச் சாப்பிடுவதில் உடல்நிலை காரணமாக சிலருக்கு வரையறைகள் இருக்கும்.
கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
ஆனால், மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருள்களும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது.
பால் சுறா, நெய் மீன் போன்றவை பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்புக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கின்றன. பொதுவாகவே மீன் உணவுகள் பார்வைத் திறனை மேம்படுத்தக் கூடியவை.
அதிகமாக கோபப்பட்டால் இதெல்லாம் நடக்கும் !
வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம் பிடிப்பது நலம்.
Thanks for Your Comments