நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தில் ஒரு கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் இப்போது வரை உள்ளே சென்று கொண்டே இருக்கிறது.
அதே போல மற்றொரு ஆச்சர்யம் மிகுந்த அதிசய கிணறு தென்காசி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
குழந்தைகள் வளரும் பருவம்.. கவனிக்கவும் !
ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் அந்தக் கிணறு இருக்கிறது.
கிணற்றுக்குள் தொடர்ச்சியாக தண்ணீர் சென்ற போதிலும் நிறையாமல் அனைத்தும் நிலத்துக்குள் உறிஞ்சப்படுகிறது.
ஏந்தலூர் கிராமம் தான் எனது சொந்த ஊர். இங்கு எனக்குச் சொந்தமான 10 எக்கார் நிலத்தில் விவசாயம் செய்யுறேன்.
எனது நிலத்தில் எலுமிச்சை, தென்னை, நெல், கத்தரி, மரவள்ளி, தக்காளி பயிரிட்டிருக்கிறேன்.
டைனோசரின் ராட்சத தொடை எலும்பு?
என்னோட நிலத்துக்குப் பக்கத்தில் கல்கட்டிகுளம் இருக்கு. பொதுப்பணித் துறை பராமரிப்பில் இருக்கும்
அந்தக் குளத்தின் மூலமாக இந்தப் பகுதியில் இருக்கும் 172 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்குது.
இந்த வருஷம் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நிறையும் நிலையில் இருந்த குளம், கடந்த வாரத்தில் பெருகி மறுகால் போயிருச்சு.
அதனால் காய்ந்து கிடந்த என்னோட கிணத்துக்குள் உபரி நீரைத் திருப்பி விட்டேன்.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !
விவசாய நிலம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் தொடர்ந்து பாய்கிறது.
ஒரு வாரமா நிலத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீர் தொடர்ந்து கிணற்றுக்குள் பாய்ந்தும் கிணறு நிரம்பாமல் இருப்பதைப் பார்த்ததும் ஆச்சர்யமா இருந்துச்சு.
கிணற்றுக்குள் போகும் தண்ணீர் எங்கே போகுதுன்னே தெரியலை என்கிறார்.
ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார்
தற்போது கிணற்றில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் கிணற்றில் தூர் நாற்றம் வீசி வருகிறது.
இதனிடையே செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் கிணற்றின் உரிமையாளரும், விவசாயிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
Thanks for Your Comments