காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?

0

இந்த 2022 ஆம் ஆண்டிற்கான உங்கள் நியூ இயர் ரெசல்யூஷன் ஆனது முடிந்தவரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தால்,

காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வரும் சிறிய சிறிய மாற்றங்கள் கூட 

உங்களின் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். 

சூறாவளி எப்ப‌டி உருவாகிற‌து?

அவற்றில் ஒன்று நீங்கள் குடிக்கும் காபி அல்லது தேநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது.

சர்க்கரை நம் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நமக்கெல்லாம் தெரியாத ஒரு தகவல் அல்ல 

என்றாலும் கூட அதை தினமும் உட்கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

காபியில் சர்க்கரை சேர்க்கவா? அல்லது உங்கள் டீயில் இன்னும் கொஞ்சம் சர்க்கரை போடவா? என்கிற கேள்விகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். 

அந்த கேள்விகளுக்கு பதிலாக, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சர்க்கரைகள் உங்கள் கோப்பைகளுக்குள் குதிக்கும். இது மிகவும் சாதாரண அளவாகத் தோன்றலாம். 

வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் பாலியல் கல்வி !

ஆனால் ஒவ்வொரு நாளும் உங்கள் காபின் பிக்ஸ் (caffeine fix) பூஸ்ட் செய்யப்படும் போது, 

​​அது உங்களின் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சர்க்கரை, உடலின் ஆரோக்கியத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கும்?

காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?

சூடான பானங்களின் வழியாக நாம் சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் போது, ​மிகவும் ​குறுகிய நேரத்தில் 

நம்மால் அதிக அளவிலான திரவத்தை எளிமையாக உட்கொள்ள முடியும், 

குங்குமப்பூ பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !

மேலும் அதில் உள்ள சர்க்கரை விரைவாக இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது. 

இது தான் சர்க்கரை கலந்த சூடான பானங்களில் இருக்கும் பிரச்சினைகளில் மிகவும் பிரதானமான ஒன்றாகும்.

இரத்த சர்க்கரை (பிளட் சுகர்) அளவுகளில் ஒரு விகிதம் சார்ந்த கட்டுப்பாடு உள்ளதென்பதை கிட்டத்தட்ட நாம் அனைவருமே அறிவோம். 

இந்த இடத்தில் தான், நாம் உட்கொண்ட சர்க்கரை அனைத்தையும் கீழே இறக்கும் வேலை உடலுக்குள் தொடங்கும். 

அதாவது எதிர்வினையாக, கணையம் அதிக அளவில் இன்சுலினை சுரக்கும். 

இரத்தத்தில் சர்க்கரை அளவு டக்கென்று அதிகரிப்பதும், குறைவதும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நடவடிக்கையாகும். 

உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

மேலும், இதன் விளைவாக நமது தோலுக்கு அடியில் கொழுப்புகள் குவியும் அபாயமும் உண்டாகலாம். 

இந்த அபாயம் தோலுக்கு மட்டுமல்ல குடல், கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவற்றிக்கும் தான்.

காபி மற்றும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக எதையெல்லாம் சேர்க்கலாம்?

காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?

நீங்கள் குடிக்கும் ஒரு கப் காபி அல்லது தேநீர் ஆனது தேவையான அளவு இனிப்புடன் நிரம்பாத பட்சத்தில் உங்களால் அதை குடிக்கவே முடியாது என்றால், 

பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளாமல், அதே சமயம் உங்கள் உணவில் அதிக கலோரிகளை குறைக்க சில நுட்பங்கள் உள்ளன. 

கிரீன் வெஜிடபிள் ரைஸ் செய்வது எப்படி? 

அவைகளை கீழே பட்டியலிட்டுளோம். 

இது சர்க்கரைக்கான ஆரோக்கியமான மாற்றுகளாக இருக்கும், அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இலவங்கப்பட்டை 

காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?

இந்த அற்புதமான மசாலா பொருளை உங்கள் காபியில் சேர்ப்பதன் வழியாக உங்களுக்கு போதுமான இனிப்பு கிடைப்பதுடன் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

அதிகாலையில் குடிக்க இது ஒரு சிறந்த பானமும் ஆகும். இதற்காக உங்களுக்கு சிறிய அளவிலான இலவங்கப்பட்டையே தேவைப்படும். 

ஒரு வேளை நீங்கள் இலவங்கப் பட்டையின் சுவையை விரும்பவில்லை என்றால் ஜாதிக்காய் அல்லது ஏலக்காயை கூட பயன்படுத்தலாம்.

வெள்ளையை விட கருப்பு அரிசியே நல்லது ஏன் தெரியுமா?

பாதாம் எக்ஸ்ட்ராக்ட் அல்லது வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் 

காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?

இந்த இரண்டு சாறுகளுமே இயற்கையான இனிப்புச் சுவையை வழங்கும் மற்றும் கூடுதல் சர்க்கரை அல்லது இனிப்புகளை குறைக்க வழிவகுக்கும் சிறந்த மாற்றுகள் ஆகும். 

போதுமான இனிப்பை சேர்க்க, இவைகளுக்கும் ஒரு சில துளிகள் போதும்.

மேற்கண்ட ஆரோக்கியமான மாற்று வழிகளை நீங்கள் பயன்படுத்தத் தொடங்கும் போது, 

​சர்க்கரையின் மீதான உங்கள் மோகம், ஆர்வம் படிப்படியாக குறையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கொழுப்பை குறைக்கும் முக்கிய இந்திய உணவுகள் !

கோக்கோ பவுடர் 

காபி டீ யில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்பது தெரியுமா?

கோக்கோவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்கள் காபியின் ஒட்டு மொத்த சுவையையும் மேம்படுத்தும். 

இதையும், உங்கள் காபியில் ஒரு சிறிய அளவில் கலந்தால் போதும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings