வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

0

வைட்டமின் ஏ, பி, சி, இ என்று ஒவ்வொன்றும் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு அவசியம் என்பது தெரியும். அது போன்று தான் வைட்டமின் எஃப்.

வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

வைட்டமின் சத்துகள் உடலுக்கு எப்போதும் அவசியமானது. வைட்டமின்கள் என்னென்ன அவை எதற்கெல்லாம் உதவுகிறது 

என்னென்ன உணவில் என்ன விதமான சத்துகள் இருக்கிறது என்பது குறித்து போதுமான அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறோம். 

அது போன்று பலருக்கும் வைட்டமின் எஃப் குறித்து தெரிவதில்லை. உண்மையில் பார்க்க போனால் வைட்டமின் Fஒரு வைட்டமின் அல்ல. கொழுப்பு அமிலங்களின் கலவையாகும். 

மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப் செய்வது எப்படி?

இதை சிக்கலானது என்றும் சொல்லலாம். அது இரண்டு கொழுப்புகள் ALA (ஆல்பா-லினோலெனிக் அமிலம்) மற்றும் LA (லினோலிக் அமிலம்) ஆகும். 

இந்த இரண்டு அமிலங்களும் மனித உடலுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். 

இதில் ALA என்று சொல்லகூடிய ஆல்பா லினோலெனிக் அமிலமானது ஒமேகா - 3 என்னும் கொழுப்பு அமிலத்திலும், 

LA என்று சொல்லக்கூடிய லினோலிக் அமிலம் ஒமேகா 6 என்னும் கொழுப்பு அமில குடும்பத்தையும் கொண்டிருக்கிறது.

இந்த கொழுப்பை உடல் இயற்கையாக உருவாக்க முடியாது. நீங்கள் உண்ணும் உணவிலிருந்து மட்டுமே இதை பெற முடியும்.

வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

ஒமேகா குடும்பங்களில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஆனது தாவர எண்ணெய்களிலும், கொட்டைகள் மற்றும் விதைகளிலிருந்தும் பெற முடியும். 

உடலுக்கு கொழுப்பு என்பது அத்தியாவசியமானது. கொழுப்பு இல்லாத உணவுகள் கொடுத்து எலிகளை 

ஆய்வு செய்யப்பட்ட போது அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதை ஆய்வு ஒன்றில் கண்டறிந்தார்கள். 

அப்போது அத்தகைய குறைபாட்டை ஏற்படுத்தியது வைட்டமின் எஃப் என்பதையும் சந்தேகித்தார்கள். 

சுவையான மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

அதற்கேற்ப பாதிக்கப்பட்ட எலிகளிடம் லினோலெனிக் அமிலம் (ALA) மற்றும் லினோலிக் (LA) குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த ALA மற்றும் LA கொழுப்பு அமிலங்கள் மனித வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

இது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உயிரணுக்களுக்கு செல் கட்டமைப்பை தருகிறது. இதர செயல்பாடுகளையும் கீழே அறியலாம்.

ஒமேகா - 3  என்னும் கொழுப்பு அமிலம்

வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

வைட்டமின் எஃப் -ல் இருக்கும் இந்த அமிலங்கள் உடலில் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தின் அம்சங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் சீராக அமைய மிகவும் தேவை. 

இதில் இருக்கும் அமிலங்கள் செல் கட்டமைப்பை வழங்கவும், மேலும் பல கொழுப்புகளோடு இணைந்து உடலில் இருக்கும் 

அனைத்து உயிரணுக்களுக்கும் அவற்றின் வெளிப்புற உள்புற அடுக்கின் முக்கிய அங்கமாக பங்களிக்கிறது. 

கறிவேப்பிலை தொக்கு செய்வது எப்படி?

இவை உயிரணுக்களுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. உடலின் இயல்பான வளர்ச்சிக்கும், கண் பார்வை, மூளை வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இவை உடலுக்குள் ஆரோக்கியம் தரும் கொழுப்பாக மாற்றப்படுகிறது. சருமத்தை ஈரப்பதமாக தக்க வைக்க உதவும் வகையில் இது சருமத்தில் செராமமைடாக மாற்றப்படுகிறது. 

சருமத்தில் அழற்சி உண்டாவது, முடக்குவாதம் போன்ற கோளாறுகளை குறைக்க ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உதவுவதாக ஆதாரங்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

இரத்த அழுத்தம், இரத்த உறைவு, நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இவை பெரிதும் துணைபுரிகின்றன.

ஆல்பா லினோலெனிக் அமிலம்

வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

ஆல்பா லினோலெனிக் அமிலம் என்று சொல்லகூடிய ALA ஆனது ஒமேகா 3 குடும்பத்தின் கொழுப்பு அமிலங்களில் முதன்மையானது. இவை உடலில் நன்மை பயக்கும் கொழுப்பாக மாற்றப்படுகிறது. 

இதில் கூடுதலாக இவற்றில் ஈகாசோபென்டனோயிக் அமிலமும் (EPA ) டோகொசா ஹெக்செனோயிக் அமிலமும், (DHA) உண்டு. இந்த மூன்றுமே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டும் தேனும் ! 

இவை மூட்டுகளில் வீக்கம் குறைவது, செரிமானப்பாதை சீராவது, நுரையீரல் ,இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது. 

இந்த கொழுப்பு நிறைவாக இருந்தால் உடலில் இதய நோய் வரும் அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

உடலில் 1 கிராம் அளவு இவை அதிகரிக்கும் போதெல்லாம் இதயமானது 10% அளவு நோய் அபாயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. 

மேலும் இவை மனச்சோர்வு, மனபதட்டம் அறிகுறிகளையும் குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

லினோலிக் (LA)

வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

இவையும் ஆல்பா லினோலெனிக் போன்றே ஒமேகா 6 குடும்பத்தில் முதன்மை கொழுப்பு என்றே சொல்லலாம். இவையும் உடலில் ஆரோக்கியமான கொழுப்பாக மாற்றப்படுகிறது. 

நிறைவுற்ற கொழுப்புக்கு மாற்றாக இதை பயன்படுத்தும் போது இதய நோய் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. 

இதய நோயால் உயிரிழக்கும் அபாயத்தின் சதவீதத்தை 21 % குறைக்கிறது. இவை டைப் 2 நீரிழிவு வருவதை தடுக்கிறது. 

சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி?

டைப்-2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைவுற்ற கொழுப்புக்கு மாற்றாக இதை எடுக்கும் போது இவை நீரிழிவு தாக்கத்தை 14 % வரை குறைத்திருப்பது கண்டறியப்பட்டது. 

இடத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் இவை பெருமளவு உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings