உடலில் நீர் தன்மை குறைந்து விட்டால் அதை நாம் டீஹைடிரேஷன் (dehydration) என்கிறோம். உடலுக்கு தேவையான தண்ணீர் குறைந்து விட்டால் நம்மால் சாதாரணமாக செயல்பட முடியாது.
கோடைக் காலம் என்பது லெமனேட்கள், ஜில்லென்ற பழரசங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களையும் அதிகமாக உட்கொள்ளும் பருவமாகும்.
ஒரு சில இடங்களில் கோடைக் காலம் கொடுமையான சுட்டெரிக்கும் காலமாக மாறும் போது உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பல இடங்களில் வறட்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மக்கள் அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் சன்பர்ன் எனப்படும்
சரும பாதிப்பு மற்றும் உடலில் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். ஆனால், தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா?
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் !
வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே உடல் நீர்ச்சத்து தேவையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதலாக நிறைய வழிகளைப் பின்பற்றலாம்.
நம்முடைய உடலுக்குத் தேவையான நீரில் 20% நீர் நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.
வெள்ளரிக்காய், செலரி, முள்ளங்கி, தக்காளி, குடைமிளகாய், தர்பூசணி, ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட், போன்ற பழங்களும் காய்கறிகளும் நீர்ச்சத்து நிறைந்தவை.
காரணங்கள் (Reasons)
உடலில் இருந்து நீர் வெளிவருவது சாதாரணமான விஷயம் தான். நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, கண்களில் இருந்து கண்ணீர், இவ்வகையில் நீர் வெளியேறுகிறது.
சிலர் நீர் குறைபாட்டை சமப்படுத்த அடிக்கடி நீர் அருந்துவது, நீர் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது, எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது போன்ற பழக்கத்தை செய்வார்கள்.
இப்படி உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அதற்கேற்ப நீங்க தண்ணீர் அல்லது உணவு எடுத்துக் கொள்ள வில்லை என்றால் உடலில் நீர் வறட்சி அதிகமாக ஏற்பட்டு விடும்.
கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?
நீர் வறட்சி போக்க வழிகளை பற்றி இங்கே காணலாம்.
நீர் சத்து உணவு
நம்முடைய உடலுக்குத் தேவையான நீரில் 20% நீர் நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.
வெள்ளரிக்காய், செலரி, முள்ளங்கி, தக்காளி, குடைமிளகாய், தர்பூசணி, ஆரஞ்சு, கிரேப்ஃப்ரூட், போன்ற பழங்களும் காய்கறிகளும் நீர்ச்சத்து நிறைந்தவை.
இவை அனைத்தும், 90% வரை நீர்ச்சத்தைக் கொண்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. நீர்ச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் புரோட்டின்களும் அதிகம் நிறைந்துள்ளது.
உறுப்பு தானம்... உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
எல்லா பானங்களும் நல்லதல்ல
திரவம் தானே, அதுவும் தண்ணீர் போல தான். என்ன பானம் குடித்தால் என்ன என்று உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால், சில பானங்கள் உண்மையிலேயே உங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கும்.
குறிப்பாக, காஃபி, சர்க்கரை நிறைந்த சோடா, பீர், வைன், மற்றும் மதுபானம் ஆகியவை உடலுக்கு நல்லதல்ல.
மேலும், லெமனேட், இனிப்பான தேநீர், எனர்ஜி பானங்கள், ஸ்மூத்தீஸ், மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்கள் அனைத்தும் உடலுக்கு கேடானவை.
இவ்வகையான பானங்களில், அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் சுவை, நிறம், நறுமணத்துக்காக ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், உடலில் உள்ள திசுக்களின் ஈரப்பதம் வற்றிவிடும்.
எனவே, இதைப் போன்ற நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுத்தும் பானங்களைத் தவிர்த்து, உடலில் நீரேற்றத்தைப் பாதுகாக்கும் பானங்களைத் தேர்வு செய்து அருந்தவும்.
சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?
இன்பியூஸ்ட் நீர் அருந்தவும்
பழங்களுடன் தண்ணீரை இன்ஃபியூஸ் செய்யும் இந்த நடைமுறை, கடந்த சில ஆண்டுகளில் நிறைய கவனத்தை ஈர்த்துள்ளது.
வெறும் தண்ணீரைக் குடிக்க சலிப்பாக உணர்கிறீர்களா? தண்ணீருக்கு இயற்கையான முறையில் கூடுதல் சுவையூட்டி, மணமூட்டி, குடிப்பதற்கு எளிதாக்குவதற்கான சில எளிதான கலவைகள் இங்கே.
செயற்கை இனிப்புகள் அல்லது பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல், எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி, லைம், புதினா, வெள்ளரி
மற்றும் பிற பழங்களை வெட்டி நீரில் சேர்த்துக் குடிப்பது, நீரின் சுவையை அதிகரிக்கும், புத்துணர்வூட்டும் உணர்வைத் தரும்.
இது வழக்கமான அளவை விட அதிகமான தண்ணீரைக் குடிக்கவும் உங்களுக்கு உதவும்.
ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?
தேங்காய் - இளநீர்
கோடையில் ஏன் இளநீர் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும், மற்ற பானங்களை விட, இளநீரில் அதிகப்படியான சத்துகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும், மின்னல் வேகத்தில் உடல் திசுக்கள் ஈரப்பதத்தைப் பெற உதவுகின்றது.
தேங்காய் மற்றும் இளநீரில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மற்றும் கேல்சியம் போன்ற தாதுகள் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் உடல் இழந்த நீரை எளிதில் சரி செய்கின்றன.
உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க பொட்டாசியம் என்ற தாது உப்பு மிகவும் அவசியம். தேங்காய், பொட்டாசியம் தேவையை நிறைவேற்றுகின்றது.
பழச்சாறு அருந்துவதை விட, குறைவான கலோரிக்கள் மற்றும் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கும் காரணத்தால், இளநீர் சிறந்தது.
டைனோசரின் ராட்சத தொடை எலும்பு?
ஓட்ஸ் மற்றும் சியா விதைகள்
காலை உணவு மிகவும் முக்கியமான மற்றும் இன்றியமையாதது. ஒரு கிண்ணம் ஓட்சை நீங்கள் தினமும் காலையில் சாப்பிடலாம்.
ஓட்ஸ் தண்ணீரை உறிஞ்சும் போது விரிவடைவதால், உங்களுக்கு சுவையான உணவும் கிடைக்கும், உடலுக்குத் தேவைப்படும் திரவங்களையும் பெறுவீர்கள்.
நீங்கள் சியா விதைகள், ப்ளூபெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சேர்த்து ஓட்ஸ் உண்ணும் போது, உடலுக்குக் கூடுதலான தண்ணீர் கிடைக்கும்.
மேலும், மதிய உணவு நேரம் வரை உங்களுக்கு பசிக்காமல் இருக்கும்.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !
குளிர்ந்த நீர் ஷவரில் குளிக்கலாம்
கோடைகால வெப்பம் அதிகப்படியான வியர்வையை உண்டாக்கும். எனவே, வழக்கத்தை விட, வியர்வை வழியாக உடலின் நீர்ச்சத்தை அதிகமாக இழக்க நேரிடும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது குளிர் நீர் ஷவரில் சில நிமிடங்கள் நிற்பது, இழந்த நீரை உடலுக்கு மீட்டுத்தரும்.
தசைகளை தளர்த்தி, எண்ணங்களை மேம்படுத்தி, உடல் உள்ளும் புறமும் குளிர்ச்சியாகவும் உணரச்செய்யும்.
ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார்
அறிகுறிகள்
உங்களுடைய சருமத்தில் வறட்சி, எரிச்சல், வீக்கம், அரிப்பு, தலைவலி, மயக்கம், சோர்வு அல்லது அதிகப்படியான சென்சிடிவிட்டி காணப்படுகிறதா? இது நீரிழப்பின் அறிகுறியாகும்.
உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை உங்கள் சிறுநீரின் நிறம், ஒரு முக்கியமான அறிகுறியாகக் கட்டுகிறது.
அல்லது, அது உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றுவதன் அறிகுறியாகவும் இருக்கலாம்.
மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு செய்முறை !
சிறுநீர் தெளிவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அடர் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
உடல் வறண்டு போகாமல் இருக்க அடிப்படையான விஷயம், தண்ணீர் குடிப்பது.
கோடைக்காலம் முழுவதும், குறிப்பிட்ட இடைவேளைகளில், தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சாதாரண டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள்:
அதிக தாகம் மற்றும் தொண்டை வறண்டு போவது
தலை வலி
சிறுநீர் மஞ்சளாக போவது
சிறுநீர் கழிப்பதில் குறைபாடு
சரும வறட்சி
சருமத்தில் வறட்சி காரணமாக வெடிப்புகள்
சால்மன் ஃப்ரை செய்முறை !
அதிகமானால் அறிகுறிகள் (Heavy Symptoms)
சிறுநீர் மஞ்சளாக போவது /சிறுநீர் கழிப்பதில் குறைபாடு
வேகமாக மூச்சு வாங்குவது
வேகமான இதயத்துடிப்பு
சன்மான கண்கள்
சத்து குறைபாடு, தூக்கமின்மை, எரிச்சல்
மயக்கம்
குழந்தைகளின் டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள் பெரியவர்களை விட சிறிது வேறுபாடு கொண்டது :
வாயி மற்றும் நாக்கு வறட்சி
அழுகும் போது கண்ணில் தண்ணீர் வராதது
சன்மான கண்கள் மற்றும் கன்னங்கள்
சத்து குறைபாடு மற்றும் ஓய்வின்மை
மேலும் இது குறிப்பிடத்தக்கதாகும் அதிக டீஹைடிரேஷன் ஏற்பட்டால் மருத்துவரின் உடனடி ஆலோசனை பெறுவது நல்லது.
Thanks for Your Comments