இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

0

ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் அந்த நாட்டிற்கு கண்டிப்பாக ராணுவம் மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. 

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

ஒரு நாட்டிற்கு அரசியல் பலம் மற்றும் ராணுவ பலம் ஆகியவை தான் முக்கியமாக கருதப்படுகின்றது. 

அதிலும் ராணுவ பலம் தான் மிக மிக முக்கியம். இப்படி இருக்கையில் ராணுவமே இல்லாத பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உலகத்தில் இருக்கிறது. 

கான்கிரீட்டில் அரிப்பை சரி செய்ய !

ராணுவமே இல்லை என்றால் அந்த நாட்டில் உள்ள மக்களை எப்படிக் காப்பாற்றுகிறார்கள்? அந்த மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கிறார்கள்? 

ராணுவம் இல்லாத நாடுகள் என்பதால் பக்கத்தில் உள்ள நாடுகள் படை எடுக்கும் பொழுதும், 

அத்துமீறல்களில் ஈடுபடும் பொழுதும் அந்த நாடுகளுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ராணுவமே இல்லாத நாடு என்று கூறுகையில், அவை மிகச் சிறிய நாடு அல்லது பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பதுண்டு. 

ராணுவம் வைத்து சமாளிக்க முடியாத  வசதிகள் இந்த சிறிய நாடுகளில் இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கலாம். 

ஆனால் உண்மையிலேயே நடப்பது என்ன என்று பார்க்கலாம். 

ராணுவம் இல்லாத நாடுகள் என்று கூறப்படுவது ஐஸ்லேண்ட், பனாமா, காஸ்டாரிகா போன்ற பிரபலமான நாடுகள் தான். 

இது போன்ற பல நாடுகளில் ராணுவம் இல்லை என்றால் அந்த நாட்டில் உள்ள மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கிறார்கள்? 

ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன?

ராணுவமே இல்லை என்றால் அங்கு சமூகப் பிரச்சினைகள் எப்படி இருக்கும்? 

பக்கத்து நாடுகளில் இருந்து ஏதாவது பிரச்சினை வர ஆரம்பித்தால் அதை எப்படி சமாளிக்கிறார்கள்? 

அவர்களுக்கு வேறு நாடுகளில் இருந்து ராணுவம் வருகிறதா? என்று பல்வேறு கேள்விகள் நம்மிடையே எழுகிறது.

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

அந்த வரிசையில் முதலில் இருப்பது காஸ்டாரிகா நாடு. இந்த நாடு சென்ட்ரல் அமெரிக்கா பகுதியில் இருக்கிறது. 

இந்த நாட்டில் இருக்கிற அரசியலமைப்பின்படி, விதி எண் 12இந்த படி 1949ஆம் ஆண்டில் இருந்து ராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் சாசனத்தின் படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அந்த சட்டத்தை வைத்து ராணுவத்திற்கு தடைவிதித்த நாடு தான் காஸ்டாரிகா. 

கலவையை ஊற்றும் போது நன்றாக கவனியுங்க !

இங்கே சிறிய ராணுவம் இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை வைத்திருக்கும் ராணுவம் கிடையாது. 

ஆனால் அங்கு போலீஸ் படைகள் இருக்கிறது. அதை வைத்துதான் அங்குள்ள மக்களை அவர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அடுத்ததாக பிரபலமான நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து. பிரபலமான நாடு என்றாலும் இங்கு கூட ராணுவம் கிடையாது என்பது ஆச்சரியம் தான். 

இந்த நாட்டில் 1869 ஆம் ஆண்டிலிருந்தே நிலையான ராணுவம் என்பது கிடையாது. 

ஆனால் இந்த நாடு நேட்டோ என்ற ஒரு பாதுகாப்பு அமைப்போடு உறுப்பினராக இருக்கிறது. 

அதன்படி அமெரிக்காவும், ஐஸ்லாந்தும் ஒப்பந்தத்தில் இருக்கிறது. 

1915 லிருந்து ஐஸ்லாந்திற்கு ஏதாவது இராணுவத் தேவைகள் இருந்தால் அந்தத் தேவையை அமெரிக்கா பூர்த்தி செய்து வருகிறது.

அடுத்ததாக மொனாக்கோ நாடு. இது மேற்கு ஐரோப்பா பகுதியில் இருக்கிறது. இந்த நாட்டிற்கும் நிலையான ராணுவம் கிடையாது. 

இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !

பிரெஞ்ச் ராணுவத்தினுடைய சூப்பர் விஷனில் தான் இந்த நாடு இருக்கிறது. இந்த நாட்டிற்காக பிரான்ஸ் இரண்டு சிறிய படைகளை கொடுத்துள்ளது. 

இவை இரண்டும் சிறிய படைகளாக இருந்தாலும், அவற்றிற்கு உலகிலேயே மிகப்பெரிய அளவில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் மொனாக்கோவுக்கு வெளியியில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் இந்த படைகள் அதை பார்த்துக் கொள்கிறார்கள். 

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

நாட்டிற்கு உள்ளே ஏதாவது பிரச்சினை வந்தால் அங்குள்ள போலீஸ் படைகள் பாதுகாத்துக் கொள்கிறார்கள். 

அடுத்ததாக ராணுவம் இல்லாத நாட்டின் வரிசையில் இருப்பது வனுவாட்டு. இந்த நாடு தெற்கு பசிபிக் கடலில் உள்ளது. 

இந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் காவல்துறை தான் பார்த்துக் கொள்கிறது. 

மிகப்பெரிய அளவில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் வனுவாட்டு மொபைல் போர்ஸ் ( VANUVAT MOBILE FORCE) என்ற அமைப்பு உள்ளது. 

கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !

இதுவும் காவல்துறையின் ஒரு பகுதி தான். இந்த துறையில் ஏறத்தாழ 300 ஆண் மற்றும் பெண் காவலர்கள் இருக்கிறார்கள். 

அவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அங்கு பெரிய பிரச்சினை வரும் போது இவர்கள் தான் அந்த பிரச்சினையை சரி செய்கிறார்கள்.

அடுத்ததாக சென்டிரல் அமெரிக்காவில் இருக்கிற நாடு பனாமா. 

இந்த நாட்டில் ராணுவ அமைப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது 30 ஆண்டுகளுக்கு முன்பு தான். 

1990 இல் தான் அந்த நாட்டில் ராணுவ அமைப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. 

இங்கு தேசிய பாதுகாப்பு படை என்கிற ஒரு சிறிய படை உள்ளது. அதனுடன் காவல்துறையும் சேர்ந்து, அங்கு நிலவி வரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். 

அவர்கள் தான் எல்லைப் பகுதிகளிலும் கண்காணித்து வருகிறார்கள். அடுத்ததாக வருவது மொரிஷியஸ். 

இந்த நாட்டிற்கு தான் தேனிலவு செல்ல வேண்டுமென்று ஏராளமானவர்களின் கனவாக இருக்கக்கூடிய நாடுகளில் ஒன்று மொரிஷியஸ். 

இந்த நாட்டில் 1968 இல் இருந்து நிலையான ராணுவம் கிடையாது. இந்த நாட்டில் பத்தாயிரம் பேர் கொண்ட காவல்படை இருக்கிறது. 

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

இந்த பத்தாயிரம் பேரை தான் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வேறு, வேறு பகுதிகளில் பாதுகாப்புக்கு அமைத்துள்ளார்கள். 

8,000 பேர் தேசிய பாதுகாப்பு படையினராகவும், 1500 பேர் சிறப்பு படையினராகவும், 500 பேர் கடற்கரையை பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு காவல்துறையை பல்வேறு பகுதிகளாக பிரித்து அதை வைத்து நாட்டை பாதுகாத்து வருகிறார்கள். 

இவர்களுக்கென்று தனியாக ராணுவம் கிடையாது. ஆனால் மொரீசியஸ் நாட்டிற்கு கடல் சார்ந்த ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இந்திய நாட்டின் கடற்படை உதவி செய்து வருவார்கள். 

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் !

அந்த மாதிரியான  உறுதியான உடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. 

அடுத்தது மார்செல்லா ஐஸ்லாந்து. இந்த நாடு தெற்கு அமெரிக்காவில் தான் இருக்கிறது. 

இந்த நாட்டில் பாதுகாப்பு பணியை எப்படி செய்கிறார்கள் என்றால் உள்நாட்டு பாதுகாப்பை செக்யூரிட்டி கேமரா மூலமாக செய்கிறார்கள்.

கடற்கரை பாதுகாப்பை பாதுகாப்பு படகை பயன்படுத்தி செய்கிறார்கள். அடுத்ததாக டோமினிக் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். 

இந்த நாட்டிலும் 1981 இல் இருந்து நிலையான ராணுவம் கிடையாது. 

ஐஸ்லாந்தில் எப்படி நேட்டோ என்ற ஒரு திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறதோ, 

அதே போன்று தான் டோமினிக்கும் ரீஜினல் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற சர்வதேச திட்டத்தின்படி பாதுகாக்கப்படுகிறது. 

இந்த ரீஜனல் செக்யூரிட்டி சிஸ்டமானது சர்வதேச அளவில் கிழக்குக் கரிபியன் தீவுகளுடன் போடப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும்.

அதன்படிதான் இங்குள்ள ஒரு சில நாடுகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அடுத்ததாக செயின்ட் லூசியா நாடு. 

இந்த நாடு தீவு பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு. இங்கு வெறும் 116 பேர் கொண்ட காவல்துறை தான் உள்ளது. 

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

இந்த காவல்துறையை வைத்து தான் இந்த நாட்டை பாதுகாத்து வருகிறார்கள். 

அந்த காவல்துறையில் சிறப்பு பிரிவு என்று ஒரு பிரிவு இருக்கிறது. உள்நாட்டுக்கென்று ஒரு துறையும், கடலோர பாதுகாப்புக்கென்று ஒரு தனி துறையும் இருக்கிறது.

எப்படி டாமினிக்கா ரீஜனல் செக்யூரிட்டி சிஸ்டத்தின் (REGIONAL SECURITY SYSTEM) கீழ் பாதுகாப்பு பெற்றதோ அதே போன்று தான் 

செயின்ட் லூசியானா நாட்டுக்கும் ரீஜனல் செக்யூரிட்டி சிஸ்டத்தில் ராணுவ பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. 

இதில் கடைசியாக இருக்கிற நாடு கிரிபாட்டி. மத்திய பசிபிக் பெருங்கடலில் தான் இந்த நாடு இருக்கிறது. 

இந்த நாட்டிலும் நிலையான ராணுவம் கிடையாது. காவல்துறை மட்டும்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கரியமில வாயு இல்லாத கட்டுமானப் பொருள் !

பாதுகாப்புக்காக சிறிய அளவிலான ஆயுதங்கள், ரோந்து படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறிய அளவில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் வைத்திருக்கிறார்கள். 

இந்த நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அல்லது வேறு நாடுகளில் இருந்து 

ஏதாவது அச்சுறுத்தல் வந்தாலோ நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ராணுவங்கள் வந்து இந்த நாட்டை பாதுகாக்கிறது. 

இதற்காக இந்த இரு நாடுகளுக்கிடையேயான கிரிபாட்டி ஒப்பந்தம் போட்டுள்ளது.

உலக வரைபடத்தில் சிறிய சிறிய நாடுகள், தீவு நாடுகளை பார்க்கும் பொழுது இவ்வளவு சிறிய அளவில் ஒருநாடு இருக்குமா? 

இந்த நாட்டுக்கு எங்கிருந்து ராணுவம் வருகிறது? என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்கிறது? 

இந்த நாட்டில் என்ன பொருளாதார வளர்ச்சிகள் இருக்கும்? என்று நாம் யோசிப்பதுண்டு. 

ஆனால் இது போன்ற சில நாடுகளை பாதுகாப்பதற்காக நிறைய சர்வதேச அமைப்புகள் இருக்கிறது. 

நிறைய ஒப்பந்தங்கள் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ் !

ஒரு உதாரணம் பூட்டான் நாடு, பூட்டான் நாட்டிற்கு குறைந்த படைகள் வைத்திருப்பதனால் இந்தியா தான் பூட்டானின் எல்லைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. 

இராணுவம் இல்லாத நாடுகள் எல்லைகளை எப்படி பாதுகாக்கின்றன?

எப்பொழுதெல்லாம் சீனா பூட்டானின் எல்லையில் பிரச்சனை செய்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்தியா தான் பூட்டனுக்கு பதிலாக சீனாவிற்கு எதிராக போய் நிற்கும்.

இதே போன்று தான் ராணுவம் இல்லாத நாடுகளின் எல்லைகள் எல்லாம் பாதுகாக்கப்படுகின்றது.

உலகில் 30 நாடுகளுக்கு ராணுவம் இல்லை, இது எல்லாம் அதன் அருகில் இருக்கும் நாடுகளின் ராணுவத்தை நம்பி தான் இருக்கின்றது. 

உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !

அதே போன்று அதன் எல்லைகளிலும் அவ்வளவாக பிரச்சனை வராது.

மேலும் இருக்கும் மக்கள் தொகையும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கருத்தில் கொண்டு ராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதில்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings