ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

0

இயல்பாகவே தன்னினச் சேர்க்கை நாட்டம் கொண்ட விலங்கு என்று ஒன்று கிடையாது. 

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகப் பல இனங்கள் புணர் மகிழ்ச்சிக்காகவே (Sexual Gratification) தற்காலிகமான தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. 

எனினும் அவை இனவிருத்திக்கு மறுபாற் சேர்க்கை தவிர்க்க முடியாதது என்பதனைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றன. 

அதனால் இருபால் சேர்க்கையைக் கைவிட்ட விலங்கு என்று ஒன்று கிடையாது.

வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !

Laysan Albatross

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

ஹவாயைச் சேர்ந்த Laysan Albatross என்கிற கடற் பறவைகளில் வாழ்காலம் முழுவதும் இரு பறவைகள் தம்பதியராக வாழ்வது வழமை. 

ஆனால் இங்கே ஆண்களுக்குக் கொஞ்சம் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் இரு பெண் பறவைகள் பாலுறவு கொண்டாடும் தம்பதியராக வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது. 

வேறு குடும்பங்களிலிருந்து திருட்டுத்தனமாக நுழையும் ஆண்களை வரவேற்று அவற்றுடன் இணைவதால் அவற்றின் முட்டை கருக்கட்ட வைக்கப்படுகின்றது. 

இனி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம் !

இந்தக் கண நேரக் கருக்கட்டல் முடிந்ததும் இரு பெண் பறவைகளும் தம்பதியராகத் தம் வாழ்வைத் தொடர்கின்றன. 

குஞ்சு பொரித்ததும் இரு பெண்களுமே அதனைத் தம் குஞ்சுகளாக வளர்த்தெடுக்கின்றன.

வாழும் சூழ்நிலை கடினம் என்பதால் தனியாக ஒரு தாய் (Single Mother) என்று வாழ முடியாது. 

பறவையியலாளர்கள் இரு தாய்க் கவனிப்பும் தாய்-தந்தைக் கவனிப்பும் இந்தப் பறவைகளைப் பொறுத்தவரை ஒரே தரத்தினவே தான் என்கிறார்கள். 

வாழ்நாள் முழுவதும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் இரண்டு விலங்கினங்களில் இந்தப் பறவைகள் முதன்மையானவை.

ஏனெனில் இவை இல்லம் அமைத்துக் குடும்பம் நடாத்திக் குஞ்சுகளையும் வளர்க்கின்றன.

குண்டு பல்பின் எதிர்காலம்?

ஜப்பனிய மக்கேக் குரங்கு

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

இனப்பெருக்கக் காலம் தவிர்ந்த ஏனைய நாட்களில் ஜப்பனிய மக்கேக் (Japanese Macaque) குரங்குகளிடையே யார் யாருடன் சேர்வது என்பதில் பலத்த போட்டி நிகழ்வது வழக்கம். 

வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !

இதனால் பாதிக்கப்படுவது ஆண் குரங்குகள் தான். ஏனென்றால் இரண்டு பெண்குரங்குகள் தம்பதிகளானால் அதனால் இரண்டு ஆண்களின் சந்தர்ப்பங்கள் பறிக்கப்படுகின்றன. 

இந்த இணவுக் காலத்தில் இந்தத் தம்பதிகள் தூங்குவது. பேன் பர்ர்ப்பது, ஒருவரை ஒருவர் பாதுகாப்பது என்று எல்லா விடயங்களிலுமே ஒன்றாக இணைந்து கொள்கின்றன. 

ஆனாலும் இந்த இணவுகள் ஒரு தடவையில் ஒரு வாரத்துக்கு மேல் என்று இருக்காது என்பதனால் தீவிர பாதிப்பு என்று எதுவும் கிடையாது.

இதனை நீங்கள் வாசிக்கும் போது தன்னினச் சேர்க்கை தான் விலங்குகளின் நியமம் போலிருக்கிறது என்று எண்னிவிடக் கூடாது. 

எல்லா விதமான விலங்குகளும் எப்போதாவது ஒரு தடவை ஈடுபடுகின்றன. சில விலங்குகள் அடிக்கடி ஈடுபடுகின்றன.

சூடான பொருளை ஏன் ஊதி சாப்பிடக்கூடாது?

எந்த ஒரு விலங்காவது தனது இனவிருத்திக்குக் கேடு வரும் வகையில் இப்படி ஒரு நடத்தையில் ஈடுபட்டது கிடையாது. 

இங்கே நோக்கம் அவ்வப் போதைக்குக் கிடைக்கக் கூடிய பாலியல் இன்பம் (Occasional Sexual pleasure) மட்டுமே என்பது நினவிற் கொள்ளப்பட வேண்டியது.

பழத்து இலையான்

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

பழத்து இலையான் (Fruit Fly) என்று சொல்லப்படும் ஈக்கள் முட் டையிலிருந்து வெளிவந்த 30 நிமிடங்களுக்கு ள்ளேயே பாலியற் செயற்பாடுகளைத் தொடங்கி விடுகின்றன.

பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !

எப்படி, எங்கே தொடங்குவது என்று அனுபவம் பெற்றுக்கொள்ள அவைக்குச் சந்தர்ப்பமும் கிடையாது. சொல்லித்தரவும் யாருமில்லை. 

பொரித்த கும்பலில் இருக்கும் ஈக்கள் எல்லாமே ஆண்-பெண் என்ற பேதமில்லாமல் ஒன்றின் மீது ஒன்று ஏறித்திரிகின்றன. 

சில கணப்பொழுதிலேயே கன்னிப்பெண் ஈக்கள் எவை என்று ஆண் ஈக்கள் கண்டு பிடித்து விடுகின்றன. அதன் பின் எல்லாம் ஆனந்தமே!

என்னடா, இது ஒரு மொக்கத்தனமான தேடுகை என்று நீங்கள் எண்ணலாம். 

ஆனால் இவை பற்றி ஆராய்ச்சி செய்த பூச்சியியலாளர் (Entomologist) டேவிட் ஃபெதர்ஸ்டோன் இதனை விட வினத்திறன் வாய்ந்த 

தேடுதல் முறை ஒன்றைத் தன்னால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை என்கிறார்.

நம்முடைய உணவே மருந்து தெரியுமா?

பீற்றில் வண்டு

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

கோதுமை மாவில் வளரும் பீற்றில் வண்டுகளில் (Beetle) ஆண்கள் ஒரு திருகுதாளமான முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. 

பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இன்னொரு ஆண் மீது ஏறி அதனிடமே தம்முடைய விந்தையும் விட்டு விட்டுச் செல்கின்றன. 

இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ் !

இந்த இரண்டாவது ஆண் ஒரு பெண்ணுடன் சேரும் போது முதன்முதலிற் கருக்கட்ட வைப்பவது அந்த முதலாவது வண்டின் விந்துகள் தான். 

இங்கே வெற்றியாளர் யாரென்றால் அந்தச் சோம்பேறி முதல் வண்டு தான்! அது எப்படிச் சரியாகும்? 

டார்வீனின் தத்துவம் இங்கே முற்றாக முறியடிக்கப் படுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். 

டார்வீனின் தத்துவத்துக்கே துரோகம் இழைக்கப்பட வில்லை என்று இங்கே யார் சொன்னார்கள்? பிடிக்க வில்லையானால் கோர்ட்டுக்குப் போங்கள்!

பொனோபோ சிம்பன்ஸிகள்

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

பொனோபோ சிம்பன்ஸிகள் மிக அதிகமாகவே பாலியல் நாட்டம் கொண்ட விலங்குகள். 

அடுத்த எதிற்பாலியலாளர் வரும் வரை காத்திருக்கும் பொறுமை அங்கே ஆணுக்கோ பெண்ணுக்கோ கிடையாது. 

வெளிச்சத்திற்கு மயங்கும் பறக்கும் மீன்கள்

ஏதோ கிடைத்தால் சரி என்று அலைகிற பொனோபோக்களின் நடத்தையை நாம் ஒருபாற் சேர்க்கை என்று வர்ணித்துவிட முடியாது. 

போனோபோக்களின் இனப்பெருக்கம் சாராத இந்தப் பாலியற் தொழிற்பாட்டுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த பெயருண்டு. 

மானிடவியலாளர்களும், மனிதக் குரங்கியலாளர்களும் இந்தத் தொழிற்பாட்டுக்கு போனோபோக்களின் கைகுலுக்கல் என்று அழகாகப்பெயர் வைத்திருக்கிறார்கள். 

எதற்கு இந்த அழகான பெயர்? பொனோபோக்கள் செய்வதெல்லாம் ஒரு நாள் நம்மையும் உதைக்கும் என்கிற விவரம் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். 

வெறும் ஜோக் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்! மனிதர்களிடையே இடம்பெறும் அரசியல் ஊழல்களுக்கும் 

பொனொபோக்களிடையே இடம் பெறும் பாலியல் ஊழல்களுக்குமிடையே பரிணாமத் தொடர்புகள் உண்டா 

யானைகளின் பிளிறலில் இருந்து அதன் வயதை கணக்கிடலாம்

என்று ஆராய்ந்துவரும் கிறைக் ஸ்டான்ஃபோர்ட் என்ற விஞ்ஞானி இன்றைய மானிடவியளர்களிடையே மிகப்பிரபலமானவர்.

மனிதர்களையும் Laysan Albatross நீர்ப்பறவைகளையும் தவிர ஒட்டி உறவாடலுக்குக்கு முக்கியம் தரும் இன்னொரு இனமும் இருக்கிறது. அது தான் செம்மறி ஆடுகள். 

செம்மறி ஆடுகள்

ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்தும் விலங்குகள் தெறியுமா? உங்களுக்கு !

கூட்டங்களில் வாழும் செம்மறி ஆடுகளில் 8% ஆன ஆண்கள் கருத்தரிக்கக் கூடிய பெண்கள் அருகிலேயே இருப்பினும் கூட அவற்றை நாடுவதில்லை. 

முதலில் உடலுறவு கொண்டவை மீன்களே.. விஞ்ஞானிகள்

வேறு ஆண்களையே தேடுகின்றன. இதனை ஆராய்ந்த சைமன் லவே (Simon La Vay) என்கிற ஆராய்ச்சியாளர் 

ஓரினச் சர்க்கயை விரும்பும் மனிதர்களின் மூளையில் இருப்பதைப் போலவே இந்த ஆடுகளின் மூளையிலும் 

பாலியல் ஹார்மோன்களைச் (Sexual Hormones) சுரக்கும் ஹைப்போதலமஸ் (Hypothalamus) சிறிதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings