இரவில் அடிக்கடி சிறுநீர் போவது இதன் ஆரம்ப அறிகுறி. அப்போதே விழித்துக் கொண்டால், பிரச்சினை பெரிதாகாது.
இல்லாவிட்டால், சோர்வு தலைகாட்டும். நடந்தால் மூச்சு வாங்கும். இதயம் படபடக்கும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள் !
குமட்டலும் வாந்தியும் தொல்லை செய்யும். எடை குறையும். அடிக்கடி விக்கல் வரும்.
சருமத்தில் அரிப்பு ஏற்படுவதும் ரத்தம் கசிந்து சிவப்புத் திட்டுகள் தோன்றுவதும் உண்டு. ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளுக்கும். பாதம் வீங்கும்.
தலை முதல் பாதம் வரை எல்லா உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, அந்தந்த உறுப்பின் வெளிப்பாடாக ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு அறிகுறிகள் தோன்றும்.
இவற்றை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே சிகேடியை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிறுநீரகத்தைக் காக்க முடியும்.
செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !
கீழ்க்கண்டவர்கள் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், குடும்பத்தில் யாருக்காவது சிகேடி பிரச்சினை இருக்கிறவர்கள்,
சிறு வயதில் சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரை களை நீண்ட காலம் சாப்பிட்டு வருபவர்கள்,
ஆண்டுக் கணக்கில் வலி நிவாரணி மாத்திரை களைச் சாப்பிடுபவர்கள்.
இவர்கள் வருஷத்துக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்ய வேண்டியது கட்டாயம்.
அத்தோடு மாதம் ஒருமுறை ரெகுலர் மருத்துவ செக்-அப் செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்பட்டு விட்டால் டயாலிஸிஸ் அவசியமா?
அப்போது தான் சிறு நீரகத்துக்கு ஏற்படுகிற சீரழிவை முதல் கட்டத்திலேயே கண்டு பிடிக்க முடியும்.
Thanks for Your Comments