சூரியன் இல்லாமல் கூட ஒரு நாள் நமக்கு விடிந்து விடும். பால் இல்லாமல்? காபி, டீ, தயிர், மோர்... ஏதாவது ஒரு வடிவில் பாலை நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
பசுவின்பால் என குறிக்க ஆவின்பால் என பெயரிடப்பட்டது. இது தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு பால் நிறுவனம் ஆகும். 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பால் பாக்கெட் பலவண்ணமாக வருவதற்கு காரணம் அதில் அடைக்கப்பட்ட பால் என்ன வகையான தரம் என்று குறிக்க.
கொழுப்பு, மாவு, புரதம் எவ்வளவு உள்ளது என்று கூறுவதற்கு வண்ணம் உள்ளது.
லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?
அடுத்த முறை பால் வாங்கும் போது பாலின் தரம் என்ன என்று கேட்டு அல்லது அதில் அச்சிடப்பட்டிருப்பதை காணலாம்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கொழுப்புச்சத்தை பொறுத்து உரிய நிற பால் வாங்கி பயன்படுத்தலாம்.
இதை அதிகம் சூடுபடுத்தவோ காய்ச்சவோ தேவையில்லை.
ஏற்கனவே பாலை குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி விடுவதால் அதில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடுகிறது.
அதே நேரம் அதிக அளவு பால் வாங்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தாமல் அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
இல்லையெனில் இதிலிருக்கும் புரதச்சத்து அழிந்து விடும். இப்போது எந்த நிறத்தில் இருக்கும் பாலை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
துபாயில் உலகின் மிக ஆழமான கின்னஸ் சாதனை படைத்த நீச்சல் குளம் !
பால் பதப்படுத்தும் முறை
இது பாலில் குறைந்திருக்கும் சத்துக்கள் அளவையும் கண்டறியப்படுகிறது.
அதன் பிறகு பால் குளிரூட்டப்பட்டு பிறகு 16 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
மகன்களை என்ஜினியர், கலெக்டர், டாக்டராக்கிய துப்புரவு பெண் தொழிலாளி - வெளிவராத ரகசியம் !
பிறகு பாலில் இருக்கும் கசடுகள் வெளியேற்றப்படுகிறது. பால் 4 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலைக்கு மாறி பெரிய கொள்கலனில் சேர்க்கப்படுகிறது.
அதன் பிறகு படிப்படியாக பிளேட் ஹீட் எக்சேஞ்ச் எந்திரத்தின் முலம் 76 டிகிரி வரை 15 நொடிகள் சூடேற்றப்பட்டு 5 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் குளிர்விக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
பதப்படுத்தல் முறையையும் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டு கிருமிகள் வடிகட்டி நீக்கப்படுகிறது.
கொழுப்பு நீக்கும் முறை
பொதுவாகப் பாலில் உள்ள கொழுப்பானது 20 முதல் 25 மைக்ரான் அளவு வரை இருக்கும்.
இப்போது கொழுப்பானது. மிகச் சிறிய திவலைகளாக - ஒரு மைக்ரான் அளவுக்கு - உடைக்கப்படுகிறது.
இதனால், பாலில் உள்ள கொழுப்பு தனியாகப் பிரியாமல், பாலுடன் கலந்து விடுவதோடு எளிதில் ஜீரணமாகும் தன்மையையும் பெறுகிறது.
என்னாது நெய் கலந்த உணவு சாப்பிடுவது எடை குறையுமா?
அதன் பிறகு கொழுப்பின் அளவுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தேவையான அளவுகளில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது!
இவையே நீல நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம், பிங்க் நிறம் என்று கொழுப்பு சேர்ப்பதை பொறுத்து பிரித்து கடைகளில் விற்கப்படுகிறது.
இவை ஒவ்வொன்றும் குறித்து பார்க்கலாம்.
பச்சை நிற பாக்கெட்
இது நிலைப்படுத்தப்பட்ட பால். இதில் கொழுப்புச்சத்து சற்று அதிகம் உண்டு.
இதை இளம் வயதினர், நடுத்தர வயதில் இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம். 40 வயதுக்குட்பட்டவர்கள் வரை இதை எடுத்து கொள்ளலாம்.
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !100 கிராம் பாலில் 4.5 கிராம் அளவு கொழுப்புச் சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும்,
4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 74 கிலோ கலோரியும் உண்டு.
ஆரஞ்சு நிற பாக்கெட்
பலரும் இவை அடர்த்தியாக இருக்கிறது என்று இதை அன்றாடம் பயன்படுத்துவது உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவிர்ப்பதே நல்லது.
ஆட்டோவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு !
அதிக கொழுப்புச்சத்து கொண்டிருப்பதால் இவை ஃபுல் க்ரீம் மில்க் என்றும் அழைக்கப்படுகிறது.
100 கிராம் பாலில் 6 கிராம் அளவு கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது.
3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 904 கிலோ கலோரியும் உண்டு.
நீல நிற பாக்கெட்
இது சமன்படுத்தப்பட்ட பால் ஆகும். இவை எளிதில் ஜீரணமாகும் என்பதால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்களுக்கு ஏற்றது.
இத்தகையோர் பாக்கெட் பால் பயன்படுத்துவதாக இருந்தால் நைஸ் பால் என்று அழைக்கப்படும் நீல நிற பாக்கெட்டை பயன்படுத்தினால் போதுமானது.
ஆரோக்கியம் தரும் வல்லாரை கீரை சாம்பார் செய்வது எப்படி?
100கிராம் பாலில் 3 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம் அளவு புரதமும்,
4.7 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 700 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 60 கிலோ கலோரியும் உண்டு.
பிங்க் நிற பாக்கெட் என்னும் டயட் பால்
இந்த பால். ஏனெனில் இதில் குறைவான அளவு கொழுப்பு உள்ளது. அதனாலேயே இது டபுள் டோண்ட் மில்க் என்று அழைக்கப்படுகிறது.
100 கிராம் பாலில்1.5 கிராம் அளவே கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது.
உங்கள் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா?
3.4 கிராம் அளவு புரதமும், 4.9 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 740 மி.கிராம் அளவு தாது உப்புக்களும், 484 கிலோ கலோரியும் உண்டு.
கொழுப்பு சேரவே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதை பயன்படுத்தலாம். பழுப்பு நிற பாக்கெட் பாலும் தற்போது கிடைக்கிறது.
இவை 3.5 கிராம் அளவு கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத இதர சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நாம் வீடுகளில் பிங்க் மற்றும் நீல நிற பால் பாக்கெட்டுகளை பயன்படுத்துவது சிறந்தது.
ஏனெனில் இதில் மட்டும் தான் குறைந்த அளவு கொழுப்பு பொருட்கள் அடங்கியுள்ளன.
Full cream milk பெரும்பாலும் பேக்கரிகளில் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சேப்பங்கிழங்கு ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோம் !
ஏனெனில் அவற்றில் அதிகளவு தண்ணீர் கலந்தாலும் அவற்றின் அடர்த்தி குறைவதில்லை.
பாக்கெட் பால் நல்லதா பசும்பால் நல்லதா என்பதை ஆராய்வதற்கு முன்பு வயதுக்கேற்ற பாலை தேர்வு செய்வது முக்கியம்.
இனி கடைகளில் வாங்கும் போது உங்களுக்கேற்ற பாலை வாங்குங்கள்.
பால், பருப்பு... இவற்றில் எதில் புரதம் அதிகமாக இருக்கிறது?
உதாரணமாக, 100 மி.லி. பாலில் 3.2 சதவிகிதம் புரதம் உள்ளது. இதில் குறைந்தது 3 சதவிகிதப் புரதம் நம் உடலுக்குக் கிடைத்து விடும்.
அழிவை உண்டாக்கும் இ வேஸ்ட் கழிவுகள் !
ஆனால், 100 கிராம் பருப்பில் 22 முதல் 28 சதவிகிதம் வரை புரதம் உள்ளது. இதில் 16 முதல் 18 சதவிகிதம் மட்டுமே உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
Thanks for Your Comments